குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான சிறு வினாக்கள்
வினாக்கள் தொகுப்பு
இயல் – 1
அமுத ஊற்று
சிறுவினா
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
3. ‘அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
4. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
5. ‘ கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! –இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
6. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு
இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
7. மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
8. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது:தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்”என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக
9. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
10. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
11. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
12. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
13. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” –இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
14. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
அ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ) காருகர் – பொருள் தருக.
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
15. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக:-
பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்கீர்த்தி.பொதுவாக இது சோழ மன்னருடைய சாசன்ங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி,பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையிலும் மெய்க்கீர்த்தியோடு சாசன்ங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
16. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
17. . ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
18. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்பு –சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும்,ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )
19. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார்.இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால் “ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
20. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
21. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான சிறு வினாக்கள்
வினா – விடைகள் தொகுப்பு
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 1
அமுத ஊற்று
சிறுவினா
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
v அன்னை மொழியானவள்
v அழகான செந்தமிழானவள்
v பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி
v பாண்டியன் மகள்
v திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
v பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.
2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
Ø காட்டில் பனைவடலி நடப்பட்டது |
Ø தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது. |
Ø சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது |
Ø புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது. |
Ø தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன் |
3.‘அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
அறிதல் | அறியாமை |
புரிதல் | புரியாமை |
தெரிதல் | தெரியாமை |
பிறத்தல் | பிறவாமை |
இயல் - 2
உயிரின் ஓசை
சிறுவினா
1. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
மல்லிகைப்பூ | இருபெயரொட்டு பண்புத்தொகை | மல்லிகையான பூ |
பூங்கொடி | உவமைத் தொகை | பூப் போன்ற கொடி |
ஆடுமாடு | உம்மைத் தொகை | ஆடுகளும்மாடுகளும் |
தண்ணீர்த் தொட்டி | இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | தண்ணீரை உடையத் தொட்டி |
குடிநீர் | வினைத்தொகை | குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர் |
சுவர்கடிகாரம் | ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | சுவரின் கண் கடிகாரம் |
மணி பார்த்தாள் | இரண்டாம் வேற்றுமைத் தொகை | மணியைப் பார்த்தாள் |
இயல் – 3
கூட்டாஞ்சோறு
சிறுவினா
1. ‘ கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! –இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
கண்ணே கண்ணுறங்கு | விளித்தொடர் |
மாமழை | உரிச்சொல் தொடர் |
மாம்பூவே | உரிச்சொல் தொடர் |
பாடினேன் தாலாட்டு | வினைமுற்றுத் தொடர் |
ஆடி ஆடி | அடுக்குத் தொடர் |
இயல் – 3
திருக்குறள்
சிறு வினா
வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு
இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி : உவமை அணி.உவமை அணியில் உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.
உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது
உவமேயம் : கோலோடு நின்றான் இரவு
உவமஉருபு : போலும்
விளக்கம் : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான ஆயுதங்களைகொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம்.
இயல் – 4
நான்காம் தமிழ்
சிறு வினா
1. மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
மருத்துவர் கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.அதுப்போல நீங்காத துன்பத்தை எனக்கு தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.
2. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது:தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்”என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக
குட்டி | மரபு வழுவமைதி |
இலச்சுமி கூப்பிடுகிறாள் | திணை வழுவமைதி |
இதோ சென்றுவிட்டேன் | கால வழுவமைதி |
என்னடா விளையாட வேண்டுமா? | திணை வழுவமைதி |
நீயும் இவனும் விளையாடுங்கள் | இட வழுவமைதி |
நீரைக் குடித்தாள் | திணை வழுவமைதி |
அவனை | திணை வழுவமைதி |
இயல் – 5
மணற்கேணி
சிறு வினா:-
1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Ø கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்
Ø சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.
Ø பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்
Ø கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்
2. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
Ø ஆற்றுநீர் பொருள்கோள்
Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.
Ø பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.
இயல் – 6
நிலா முற்றம்
இ) சிறு வினா
1. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
· கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல் தொழில்கள் நடைபெறுகின்றன.
· மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
· நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இயல் – 7
விதை நெல்
சிறு வினா
1. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
v அவந்தி நாட்டு மன்னன் மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்கிறான் –வஞ்சித்திணை
v அவந்தி நாட்டு மன்னனை மருத நாட்டு மன்னன் காஞ்சிப் பூவை எதிர்த்து போரிடுகிறான் –காஞ்சித்திணை
2. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” –இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக் கூட்டம்
பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.
விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி.சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.
3. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
அ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர் – பட்டினும்
தூசும் - துகிரும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பட்டினும் – கட்டு
பகர்வனர் - நகர
ஈ) காருகர் – பொருள் தருக.
நெய்பவர்
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம்,அகில்
4. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக:-
பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்கீர்த்தி.பொதுவாக இது சோழ மன்னருடைய சாசன்ங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி,பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையிலும் மெய்க்கீர்த்தியோடு சாசன்ங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து:
சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம்,போர் வெற்றிகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி பின்னர் மன்னரையும், அவர் மனைவியையும் வாழ்த்தி எழுதப்பட்டுள்ளது.
இயல் – 8
பெருவழி
சிறு வினா.
1. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Ø வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.
Ø நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்
2. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Ø அகவல் ஓசை பெற்று வரும்.
Ø ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்
Ø ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
Ø வெண்டளை,கலித்தளை விரவி வரும்.
Ø மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்
Ø ஏகாரத்தில் முடிவது சிறப்பு
3. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்பு –சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும்,ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )
Ø சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அதை பின்பற்றுதல் வேண்டும்.
Ø பொது போக்குவரத்து பயன்பாடு
Ø மரம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
Ø ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய மாற்றம் வேண்டும்.
இயல் – 9
அன்பின் மொழி
சிறு வினா.
1. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார்.இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால் “ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Ø பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.
Ø பார்வையற்றவர் போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல்.
Ø தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்.
2. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
Ø உயிர் பிழைக்கும் வழி
Ø உடலின் தன்மை
Ø உணவை தேடும் வழி
Ø காட்டில் செல்லும் வழி
3. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.
எ.கா:
தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
..................................................................................
................... கூவினவே கோழிக் குலம்.
விளக்கம்:
அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.
0 Comments