அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC LASER NOTES

TNPSC G2 Physics லேசர் Test Yourself (easytutorial.in)




லேசர்

  • சாதாரண ஒளிமூலம் ஒன்று வெளிவிடும் ஒளி ஓரியல்பற்றது, ஏனெனில் வெவ்வேறு அணுக்கள் வெவ்வேறு கட்டங்களில் ஒளியை உமிழும்.
  • குறுக்கீட்டு விளைவிற்கு ஓரியல் மூலங்கள் மிக அவசியம்.
  • இரண்டு தனிப்பட்ட மூலங்கள் ஓரியல் மூலங்களாகச் செயல்படாது.
  • சோதனைகளுக்கு ஒரு ஒளி மூலத்திலிருந்து இரண்டு ஓரியல் மூலங்களைப் பெறலாம்.
  • சமீப காலமாக முழுமையான ஓரியல் பண்பினைக் கொண்ட மூலங்கள் உண்டாக்கப்பட்டன.
  • இவை லேசர் எனப்படும்.
  • LASER என்பது (Light Amplification by Stimulated Emission of Radiation) என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகும்.
  • சாதாரண ஒளிக்கும், லேசர் (LASER) ஒளிக்கும் உள்ள வேறுபாடு படத்தில் காட்டப்பட்டுள்ளது.


லேசரின் சிறப்பியல்புகள்

லேசர் கற்றை என்பது

  • ஒற்றை நிற ஒளியைக் கொண்டது.
  • ஓரியல்பு தன்மையுடையது. எல்லா அலைகளும் ஒரே கட்டத்தில் இருக்கும்.
  • விரிந்து செல்லாது.
  • அதிகச் செறிவு கொண்டது.

  • தன்னிச்சையான உமிழ்வு மற்றும் தூண்டு உமிழ்வு
  • ஒரு அணு 1,2, என்ற இரண்டு ஆற்றல் மட்டங்களுக்கு இடையே இடம் பெயர் வேண்டுமெனில் 21 = hv ஆற்றல் கொண்ட ஃபோட்டானை உமிழ வேண்டும் அல்லது உட்கவர வேண்டும்.

  • வெப்பச்சமநிலையில் அடிநிலையில் அணுக்களின் எண்ணிக்கை (1) கிளர்ச்சி நிலையிலுள்ள அணுக்களின் எண்ணிக்கையைவிட (2) அதிகமாக இருக்கும்.
  • இது இயல்பு நிலை அணுத்தொகை எனப்படும். கட்டற்ற அணுக்கள் கொண்ட மாதிரியைக் கருதுவோம்.
  • இதில் சில அணுக்கள் 1, ஆற்றலுடன் அடிநிலையிலும், சில 2, ஆற்றலுடன் கிளர்ச்சி நிலையிலும் இருப்பதாகக் கொள்வோம்.
  • hv = 21, ஆற்றல் கொண்ட ஃபோட்டான் அடிநிலை அணுக்களுடன் மோதினால், அடிநிலையிலுள்ள அணுக்கள் கிளர்ச்சி நிலைக்குச் செல்லும்.
  • இது தூண்டு உட்கவர்தல் எனப்படும்
  • அடிநிலையிலுள்ள அணுக்களை கிளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி தெறிப்பு (pumping)எனப்படும்.


    • அணுக்கள் ஒளியாற்றல் மூலம் உயர் ஆற்றல் மட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டால், ஒளியியல் தெறிப்பு (optical pumping) எனப்படும்.
    • வெளிப்புறத் தூண்டுதல் மூலம் அடிநிலையிலிருந்து அணுக்கள் கிளர்ச்சி நிலைக்குச் சென்றால், கிளர்ச்சி நிலை அணுத் தொகை அணுக்களின் எண்ணிக்கை (2) அடி நிலை ஏற்றம் அணுக்களின் எண்ணிக்கையை (1) விட அதிகமாகும்.
    • இந்நிகழ்ச்சி அணுத்தொகை ஏற்றம் (population inversion) எனப்படும்.


    • கிளர்ச்சி நிலையில் அணுக்களின் ஆயுள் பொதுவாக 108 ஆகும்.
    • சில கிளர்ச்சி நிலைகளில் ஆயுட்காலம் 103 என்ற அளவில் அதிகமாக இருக்கும்.
    • இத்தகைய நிலை
    • இடைநிலை (meta stable state) எனப்படும்.
    • கிளர்ச்சி நிலையானது சாதாரண நிலையாக இருந்தால் கிளர்ச்சி அணுக்கள் புற உதவியின்றி அடிநிலையை அல்லது தாழ்மட்ட நிலையை அடையும்.
    • இந்நிகழ்வின் போது. 21 = hv ஆற்றல் கொண்ட ஃபோட்டான் உமிழப்படும்.
    • இது தன்னிச்சையான உமிழ்வு எனப்படும்.


    • கிளர்ச்சி நிலையானது இடைநிலையாக இருந்தால் அணுக்கள் இந்நிலையில் சற்று அதிக நேரம் இருக்கும்.
    • 21 = hv ஆற்றல் கொண்ட ஃபோட்டான்களை, இடைநிலையிலுள்ள அணுக்களின் மீது மோதச் செய்து அவற்றை அடிநிலைக்குக் கொண்டு வரலாம்.
    • இந்நிலையில் 21 = hv ஆற்றலுடைய ஃபோட்டான் உமிழப்படும்.
    • இது தூண்டு உமிழ்வு (Induced emission) எனப்படும் .


    • வெளிப்படும் ஃபோட்டான் ஆனது தூண்டு ஃபோட்டான் அல்லது இரண்டாம் நிலை ஃபோட்டான் எனப்படும்.
    • இரண்டாம் நிலை ஃபோட்டான் எப்போதும் தூண்டுவிக்கும் ஃபோட்டானுடன் ஒத்த கட்டத்தில் இருக்கும்.
    • இந்த ஃபோட்டான்கள் மீண்டும் ஃபோட்டான் உமிழ்தலைத் தூண்டுவித்து ஒரு தொடர் வினையை உண்டாக்கும்.
    • இதுவே லேசர் செயல்பாடு (Laser action) எனப்படும்.
    • உருவாக்கப்படும் ஃபோட்டான்கள் அனைத்தும் ஒரே கட்ட நிலையில் இருக்கும்.
    • எனவே சிறந்த ஒற்றைநிற, முற்றிலும் ஓரியல்பான, செறிவுமிக்க ஒளியினை லேசர் உண்டாக்கும்.

    லேசர் செயலைப் பெற வேண்டிய நிபந்தனைகள் 
    • அணுத்தொகை ஏற்றம் இருக்க வேண்டும். அதாவது அடிநிலையை விட கிளர்ச்சி நிலையில் அதிக அணுக்கள் இருக்க வேண்டும்.
    • கிளர்ச்சியுற்ற நிலை இடைநிலையாக இருக்க வேண்டும்.
    • வெளிவரும் போட்டான்கள், மேலும் ஃபோட்டான்கள் வெளிவருவதைத் தூண்ட வேண்டும்.
    • இதனை, எதிரொளிக்கும் கண்ணாடிகள் இரண்டு முனைகளில் வைக்கப்படுவதால் பெறலாம்.

    ரூபி லேசர் (Ruby laser) 
    • T.மெய்மன் (T.Maiman) என்பவரால் 1960ல் ரூபி லேசர் வடிவமைக்கப் பட்டது.
    • இது 10 cm நீளமும், 0.8 cm விட்டமும் கொண்ட ரூபி படிகத் தண்டினைக் கொண்டது.
    • ரூபி என்பது அலுமினிய ஆக்ஸைடால் (23) ஆனது.
    • இதில் சில அலுமினிய அணுக்கள், குரோமியம் அயனிகளால் (3+) இடம் பெயர்வு செய்யப்படுகின்றன.


    • ரூபி தண்டின் முனைகள் ஒன்றுக்கொன்று இணையாகவும், தட்டையாகவும் இருக்கும்.
    • ஒரு முனை முழுவதும் வெள்ளிப் பூச்சு கொடுக்கப்பட்டு ஆடியாகவும், மறு முனைப் பகுதி வெள்ளிப் பூச்சு (Semi silvered) கொடுக்கப்பட்டு பகுதி ஊடுருவும் ஆடியாகவும்.
    • செயல்படும். ரூபித் தண்டினைச் சுற்றி சுருள் வடிவ செனான் (Zenon) தெறிப்புக் குழாய் உள்ளது.
    • இதிலிருந்து வரும் ஒளி குரோமிய அணுக்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
    • செனான் குழாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு ஒளித் தெறிப்பும் பல மில்லிவினாடிகளுக்கு நீடித்திருக்கும்.
    • ஒவ்வொரு தெறிப்பும் சில ஆயிரம் ஜுல்கள் ஆற்றல் உடையதாக இருக்கும்.


    • ரூபி லேசரில் உள்ள பெயர்வு குரோமிய அணுக்க இடைநிலைளின் கிளர்ச்சி மற்றும் -அடிநிலை ஆற்றல் மட்டங்கள் காட்டப்பட்டுள்ளன.
    • சாதாரண நிலையில் பெரும்பாலான குரோமிய அணுக்கள் அடிநிலை 1 -ல் இருக்கும்.
    • ஒளித் தெறிப்புக் குழாயினால் ஒளியூட்டப்படும் போது 5500 ˙ அலை நீளம் கொண்ட (பச்சை நிற ஒளி) ஃபோட்டான் களை குரோமியம் அயனிகள் உட்கவர்வதால், அவை கிளர்ச்சி நிலை 3க்கு செல்கின்றன.
    • இந்த கிளர்ச்சி அயனிகள், ஆற்றலின் ஒரு பகுதியை படிகத் தின் அணிக்கோவைக்குக் கொடுத்துவிட்டு கதிர்வீசலை வெளிவிடாமல் இடைநிலையை (2) அடையும்.
    • 2, நிலையில் ஆயுட்காலம் (103s) அதிகம்.
    • எனவே இடைநிலையில் அணுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்.
    • இவ்வாறு 1,2 நிலைகளுக்கிடையே அணுத்தொகை ஏற்றம் ஏற்படுகிறது.
    • இடைநிலை 2, உள்ள கிளர்ச்சி அயனி, தன்னிச்சையாகத் அடிநிலை 1,க்கு செல்லும் போது 6943 ˙ அலைநீளம் கொண்ட ஃபோட்டானை வெளிவிடும்.
    • இந்த ஃபோட்டான் ரூபித் தண்டின் வழியே சென்று, முன்னும் பின்னும் ஆடிகளால் பிரதிபலித்து, கிளர்ச்சி அயனிகளைத் தூண்டி புதிய ஃபோட்டான்களை அதே கட்ட நிலையில் உண்டாக்கும்.
    • இவ்வாறான பிரதிபலிப்புகள் தூண்டு உமிழ்வு நிகழ்ச்சியை கூடுதலாக உண்டாக்கும்.
    • இந்தத் தூண்டு உமிழ்வுதான் லேசர் நிகழ்வு ஆகும். இறுதியாக 6943 ˙ அலைநீளம் கொண்ட சிவப்பு நிற ஒளித் துடிப்புகள், பகுதி வெள்ளிப்பூச்சு பெற்ற படிகத்தின் முனைவழியே வெளியேறும்.

    ஹீலியம் - நியான் லேசர் 
    • தொடர்ச்சியான, செறிவு மிக்க லேசர் கற்றையினை வாயு லேசர்கள் மூலம் பெறலாம்.
    • ஹீலியம் - நியான் லேசரின் முக்கியப் பகுதிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

    • He - Ne லேசரில் குவார்ட்ஸ் குழாய் ஒன்றுள்ளது. இதனுள் 1 mm பாதரச அழுத்தத்தில் 1 : 4 என்ற விகிதத்தில் ஹீலியம் - நியான் வாயுக்கள் உள்ளன.
    • குழாயின் ஒரு முனையில் முழுதும் பிரதிபலிக்கக்கூடிய மின்போக்குக் குழாய் ஆடி பொருத்தப்பட்டிருக்கும். மறுமுனையில், ஒரு பகுதி ஒளியை மட்டும் பிரதிபலிக்குமாறு, பகுதி வெள்ளிப்பூச்சு உடைய ஆடி இருக்கும்.
    • வாயுவில் மின் போக்கினை நிகழ்த்த ஒரு திறன்மிக்க ரேடியோ அதிர்வெண் மின்னியற்றி பயன்படுகிறது.
    • இதனால் ஹீலிய அணுக்கள் உயர்ந்த நிலைக்கு கிளர்ச்சியடையும்.


    • He - Ne அணுக்களின் ஆற்றல் மட்டங்கள் காட்டப்பட்டுள்ளன.
    • வாயுவின் வழியே மின்போக்கு நிகழும்போது, குழாயிலுள்ள எலக்ட்ரான்கள் ஹீலிய,நியான் அணுக்களுடன் மோதலுற்று அவற்றை அடிநிலையிலிருந்து 20.61 eV மற்றும் 20.66 eV ஆற்றல் கொண்ட இடைநிலைகளுக்கு உயர்த்தும்.
    • கிளர்ச்சியுற்ற சில ஹீலியம் அணுக்கள் மோதலின் மூலம் ஆற்றலை கிளர்ச்சியுறாத நியான் அணுக்களுக்கு கொடுக்கும்.
    • இவ்வாறு நியான் அணுக்களின் அணுத்தொகை ஏற்றத்திற்கு ஹீலியம் அணுக்கள் உதவுகின்றன.
    • நியான் அணு 20.66 eV ஆற்றல் கொண்ட கிளர்ச்சி நிலையிலிருந்து 18.70 eV ஆற்றல் கொண்ட குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு தன்னிச்சையாகச் செல்லும் போது 6328 \dot{A} அலைநீளம் கொண்ட கண்ணுறு பகுதியிலுள்ள ஃபோட்டான்களை உமிழும்.
    • இந்த ஃபோட்டான் பிரதிபலிக்கும் முனையில் எதிரொளிப்பு அடையச் செய்யப்பட்டு, வாயுக் கலவையின் வழியே முன்னும் பின்னும் செல்லும்.
    • அப்போது, கிளர்ச்சியுற்ற நியான் அணு தூண்டப்பட்டு, புதியதாக 6328˙ அலைநீள ஃபோட்டான் உமிழப்பட்டு, தூண்டு போட்டானுடன் சேர்ந்து ஒரே கட்டத்தில் வெளிவரும்.
    • 20.66 eV லிருந்து 18.70 EV க்கு ஏற்படும் தூண்டப்பட்ட பெயர்வு, லேசர் நிகழ்வு ஆகும். லேசர் கற்றையானது, பகுதி வெள்ளிப்பூச்சு கொடுக்கப்பட்ட பரப்பின் வழியே வெளியேறும்.
    • நியான் அணுக்கள் 18.70 eV நிலையிலிருந்து E ஆற்றல் கொண்ட குறைந்த நிலைக்குத் தன்னிச்சையாகத் தாவி ஓரியல்பற்ற ஒளியை உமிழும்.
    • இந்த ஆற்றல் மட்டம் E லிருந்து, Ne அணுக்கள், மோதல்கள் மூலம் குழாயின் சுவர்களில் மோதலுற்று அடிநிலையை அடைகின்றன.
    • இறுதியாக ஏற்படும் நிகழ்வு கதிர்வீச்சற்றது.

    லேசரின் பயன்கள்

    உயர்ந்த ஓரியல் பண்பு, அதிகச் செறிவு காரணமாக லேசர் கற்றையானது அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுகிறது.

    தொழில்துறை பயன்கள் 
    • லேசர் கற்றையினைப் பயன்படுத்தி வைரம் மற்றும் கடினமான, தடித்த தகடு போன்றவற்றில் மிக நுண்ணிய துளைகளிடலாம்.
    • கடினமான உலோகங்களின் தடித்த தகடுகளை வெட்டவும், பற்ற வைப்பதற்கும் பயன்படுகின்றன.
    • மின்னணு சுற்றுகளிலும், குறைக்கடத்தி சுற்றுகளிலும் தேவையற்ற பொருள்களை ஆவியாக்கப் பயன்படுகிறது.
    • பொருள்களின் தரத்தினை சோதிக்க உதவும்.

    மருத்துவப் பயன்கள் 
    • மிகக் குறுகிய பரப்பில் குவிக்கப்படுவதால், மிக நுண்ணிய அறுவை சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
    • சிறுநீரகக் கல், கட்டிகள் ஆகியவற்றை அகற்றவும், மூளை அறுவை சிகிச்சை, கண் விழித்திரை நீக்குதல் போன்றவற்றில் நுண்ணிய இரத்தக் குழாய்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது.
    • உணவுப் பாதை உள்நோக்கிகளில் (endoscopy) பயன்படுகிறது.
    • மனித மற்றும் மிருகப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.

    அறிவியல் மற்றும் பொறியியல் பயன்கள் 
    • லேசர் கற்றையின் அதிர்வெண் நிலையாக இருப்பதால், அதனைப் பண்பேற்றம் செய்து ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசிகளில் பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பலாம்.
    • ஒளியியல் இழை (Optical Fiber Communication) செய்தித் தொடர்பில் குறைக்கடத்தி லேசர் பயன்படுகிறது.
    • குறுகிய பரப்பில் பரவுவதால், மைக்ரோ அலை செய்தித் தொடர்பில் லேசர் ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுகிறது.
    • புவித் துணைக்கோள்கள் மற்றும் ராக்கெட் துறைகளில் தொடர்பு கொள்ள லேசர் பயன்படுகிறது. இலக்கு (target) உள்ள தொலைவைத் துல்லியமாகக் கண்டறிவதிலும் லேசர் பயன்படுகிறது.
    • புவிக்கும், நிலவிற்கும் இடையே உள்ள தொலைவைக் கணக்கிடலாம்.
    • இராமன் நிறமாலையியலில் பயன்படுகிறது.
    • ஹோலோகிராபி என்ற முப்பரிமாணக் கலையில் பயன்படுகிறது (லென்சுகளைப் பயன்படுத்தாமல் முப்பரிமாண நிழற்படம் உருவாக்குதல்).
    • லேசரைக் கொண்டு, ரேடாரைப் போன்று பொருள் உள்ள தொலைவு, திசைவேகம், அளவு மற்றும் திசை ஆகியவற்றை எதிரொளித்த சைகையக் கொண்டு துல்லியமாக அறியலாம்.

    ஹோலோகிராபி 
    • ஒரு காமிராவில் புகைப்படம் எடுக்கும்போது முப்பரிமாணப் பொருளின் இரு பரிமாண பிம்பம் கிடைக்கும். பொருளின் முப்பரிமாணத் தோற்றத்தினை ஹோலோகிராபி முறையில் பெறலாம்.
    • சாதாரண புகைப்படத்தில் ஒளி அலையின் வீச்சு புகைப்படச் சுருளில் பதியும். ஹோலோகிராபி முறையில் ஒளியின் வீச்சு, கட்ட நிலை ஆகிய இரண்டும் படச் சுருளில் பதிக்கப்படும்.
    • இவ்வாறு பெறப்படும் படம் (பிம்பம்) ஹோலோகிராம் (Hologram) எனப்படும்.

    மேசர் (Maser) 
    • MASER என்பது Microwave Amplification by Stimulated Emission of Radiation என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம்.
    • மேசரின் செயல்பாடு லேசரைப் போன்றதே. மேசரின் தத்துவம் அணுத்தொகை ஏற்றமும் அதனைத் தொடர்ந்து தூண்டு உமிழ்தலும் ஆகும்.
    • மேசர் அமைப்பில், இடைநிலையிலிருந்து பெயர்வு நிகழும் போது உமிழப்பட்ட ஃபோட்டான், நுண்ணலை (microwave) அதிர்வெண்ணில் அமையும்.
    • பாராகாந்த அயனிகள் மேசர் பொருளாகப் பயன்படுகின்றன.
    • நடைமுறையில் அயனிப் படிகத்தில் குரோமியம் அல்லது கடோலினியம் (gadolinium) அயனிகள் மாசுப் பொருளாக சேர்க்கப்படும்.
    • அம்மோனியா வாயுவும் மேசர் பொருளாகப் பயன்படும். மூலக்கூறு நிறமாலையியலில், மேசர் ஒரு குறிப்பிடத்தக்க கருவியாகச் செயல்படுகிறது.
    Reactions

    Post a Comment

    0 Comments

    Recent Posts