ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வகத்தில் தங்களுக்கான பாடத்திலிருந்து 30 வினாக்கள் கேட்கப்படும் அதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தின் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் அட்டவணையில் வழங்கியுள்ள பாடத்தின் அடிப்படையில் இந்த வலைதளத்தில் 25 வினாக்கள் இனி தினந்தோறும் இடம் பெறும். மாணவர்கள் இவற்றை நன்முறையில் பயிற்சி செய்து நன்மதிப்பெண் பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய இரண்டு இயல்களிலிருந்து 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாக்களை நன்கு பயிற்சி பெறவும்.
பகுதி - 2 க்கான தேர்வினை எழுத இங்கே சொடுக்கவும் - CLICK HERE
வாழ்த்துகள்
நன்றி, வணக்கம்.
தமிழ் -பத்தாம் வகுப்பு- இயல் 1 மற்றும் இயல் -2
Quiz
இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்திலிருந்து
25 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்க 30 நிமிடங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் மிகச்சரியான விடையை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே__________
- பாடிய : கேட்டவர்
- பாடல் : பாடிய
- பாடல் : கேட்டவர்
- கேட்டவர்; பாடிய
0 Comments