மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.
மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின் இணைய வழி தேர்வு எழுதவும்.
நன்றி,வணக்கம்
இயல் -5
மணற்கேணி
இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில்
குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்
1. நீதிவெண்பா
2. வினா -விடை வகைகள்
பொருள்கோள்
ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறைக்கப்பட்டப் பாடத்தின் அடிப்படையில் இயல் 5 இல் இரண்டு பாடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இந்த இலக்கணப் பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நன்கு படித்து புரிந்து சிந்தித்து பின் பதில் அளிக்கவும். இங்கு கொடுக்கப்படும் வினாக்கள் ஒரு பயிற்சிக்கான வினாக்கள் மட்டுமே. தற்சமயம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அந்த திருப்புதல் தேர்வுக்கு இந்த வினாக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியினை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து பின் இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும். மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் உச்சப்பட்ச மதிப்பெண்ணை நீங்கள் அடையாளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி பெறவும். தங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். இதனை ஏன் PDF ஆக கொடுக்கப்படவில்லையென்றால் இதனைப் பார்த்து எழுதும் போது இந்த வினாக்கள் உங்கள் மனதில் பதியும் என்பதால் கொடுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் போதும் வினாவினையும், விடையினையும் சொல்லிக் கொண்டு எழுதுங்கள். இதனால் எழுத்துப் பிழை வருவது குறையும். தேர்வு நேரங்களில் மதிப்பெண் அதிகம் பெற உறுதுணையாக இருக்கும். எனவே மாணவர்கள் எந்த ஒரு பயிற்சித்தாளினையும் எழுதும் போது இந்த முறையைப் பின்பற்றினால் உங்களுக்கு ஏற்படும் எழுத்துப் பிழை பெருமளவு குறையும். வாழ்த்துகள் மாணவர்களே..... வாருங்கள் வினா வங்கிக்கு சென்று வாசிப்போம்,எழுதுவோம். கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டு இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண் பெற்றிடுவோம்.
1)அருந்துணை என்பதைப் பிரித்தால்- -------------என வரும்
அ)அரு+துணை ஆ)அருமை +துணை இ)அருமை+இணை ஈ)அரு+இணை
2)’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’இன்று வழிப்போக்கர் கேட்பது----------வினா.
‘அதோ அங்கு நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது--------------விடை
அ)ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ)அறியா வினா,மறை விடை
இ)அறியா வினா,சுட்டு விடைஈ)கொளல் வினா,இனமொழி விடை
3) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெரு்ளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது
அ)தமிழ் ஆ)அறிவியல் இ)கல்வி ஈ)இலக்கியம்
4)அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி - இவ்வடியில் அருளை, அறிவை ஆகியச் சொற்களில் பயின்று வரும் தொடை
அ)எதுகை ஆ)மோனை இ)இயைபு ஈ)முரண்
5)கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறுவது........இலக்கியம்
அ) காப்பிய ஆ)பக்தி இ)சங்க ஈ)நீதி
6)சதம் என்ற சொல்லின் பொருள்
அ)விளையாட்டு ஆ)கேடயம் இ)ஆயிரம் ஈ)நூறு
7) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளிப்பது------
அ)தசாவதானம் ஆ)சதாவதானம் இ)பதின்மம் ஈ)பதின் கவனம்
8)செய்குத்தம்பி பாவலர்----------என அழைக்கப்படுகிறார்
அ)நாஞ்சில் கவிஞர் ஆ)மக்கள் கவிஞர் இ)சதாவதானி ஈ)தசாவதானி
9)செய்குத்தம்பி பாவலர் உரை எழுதிய நூல்
அ)குறுந்தொகை ஆ)சீறாப்புராணம் இ)தேம்பாவணி ஈ)இரட்சணிய யாத்திரிகம்
10)வினா---------- வகைப்படும்.
அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது
11)விடை----------- வகைப்படும்
அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது
12) தான் அறியாதஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது---------வினா
அ)அறியா வினா ஆ)ஐய வினா இ)ஏவல் வினா ஈ)அறிவினா
13)’பறந்தது வண்டா? பழமா? எனக் கேட்பது------------வினா
அ)அறிவினா ஆ)அறியா வினா இ) ஏவல் வினா ஈ) ஐய வினா
14)பிறருக்கு ஒருபொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது------வினா
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறியா வினா
15)’ அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்’ என வினா வகைகளைக் கூறும் நூல்--
அ) தொல்காப்பியம் ஆ) தண்டியலங்காரம் இ) நன்னூல்ஈ)யாப்பதிகாரம்
16)விடை வகைகளில் முதல் மூன்றும்----------விடைகள் ஆகும்’
அ) வெளிப்படை ஆ)மறை இ)குறிப்பு ஈ) இனமொழி
17)பாடுவாயா? என்னும் வினாவிற்குரிய எதிர்மறை விடையைத் தேர்ந்தெடு
அ)பாடுவேன் ஆ)பாடேன் இ)பாடிலன் ஈ)பாடிற்று
18)ஏன் பேருந்தை தவற விட்டாய்?என்னும் வினாவிற்குத் தாமதமாக வந்தேனென்று விடையளிப்பது---விடை
அ)உறுவது கூறல் ஆ)உற்றது உரைத்தல் இ)ஏவல் ஈ)இனமொழி
19)உனக்குக் கதை எழுதத் தெரியுமா?என்ற வினாவிற்குக் கட்டுரை எழுதத்தெரியுமென்று கூறுவது---விடை
அ)ஏவல் ஆ)வினா எதிர் வினாதல் இ)இனமொழி ஈ)உறுவது கூறல்
20)பொருள்கோள்------------ வகைப்படும்
அ)5 ஆ)6 இ)7 ஈ)8
21) மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது……இவ்வடிகள்குறிப்பிடும் பொருள்கோள்
அ)ஆற்றுநீர் ஆ) மொழிமாற்று இ) நிரல்நிறை ஈ) கொண்டு கூட்டு
22)ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது-------- பொருள்கோள்
அ) ஆற்றுநீர் ஆ) நிரல்நிறை இ) மொழிமாற்று ஈ) கொண்டு கூட்டு
23)’அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது -இக்குறட்பா எந்த பொருள் கோளில் அமைந்துள்ளது?
அ) ஆற்றுநீர் ஆ) முறை நிரல்நிறை இ) எதிர் நிரல் நிறை ஈ) கொண்டு கூட்டு
24) செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிரெதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் ----------பொருள்கோள்
அ) முறை நிரல்நிறை ஆ) ஆற்றுநீர் இ) எதிர் நிரல் நிறை ஈ) கொண்டு கூட்டு
25) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று சேர்த்துப் பொருள் கொள்வது-------- பொருள்கோள்
அ) முறை நிரல்நிறை ஆ) ஆற்றுநீர் இ) எதிர் நிரல் நிறை ஈ) கொண்டு கூட்டு
26)யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது....இவ்வடிகள் குறிப்பது-------- பொருள்கோள்
அ) மொழிமாற்று ஆ) கொண்டு கூட்டு இ) நிரல்நிறை ஈ) ஆற்றுநீர்
27) ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு -இவ்வடிகளில் இடம்பெறும் பொருள்கோள்
அ)ஆற்றுநீர் ஆ) நிரல்நிறை இ) கொண்டு கூட்டு ஈ) மொழிமாற்று
0 Comments