அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10TH TAMIL - UNIT 1 - ONLINE QUIZ

பத்தாம் வகுப்பு - இயல் -1

        மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில்  இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 70 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.  

மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை  அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின்  இணைய வழி தேர்வு எழுதவும்.

நன்றி,வணக்கம்

இயல் -1 

அமுத ஊற்று 

இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில் 

குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்

1. அன்னை மொழியே

2. தமிழ்ச்சொல் வளம்

3. எழுத்து,சொல்

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  அனைத்து  பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள்  இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள்  குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து  உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இயல் - 2 க்கான இணையவழித் தேர்வு பெற - இங்கே சொடுக்கவும்


10.ஆம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண்

வினாவங்கி

(திருத்தி அமைக்கப்பட்டபாடப்பகுதிக்கானது)

இயல் - 1
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து,விடையைக்குறியீட்டுடன் எழுதுக:-

1)எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால்இவ்வாறு வரும்-----------------                        

)எந்+தமிழ்+நா            )எந்த+தமிழ்+நா          )எம்+தமிழ்+நா        )எந்தம்+தமிழ்+நா

2) மெத்தவணிகலன் என்னும்தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது--------------                        

)வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும்   

பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்                

ஐம்பெருங்காப்பியங்களும்அணிகலன்களும்      

வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்

3) காய்ந்த இலையும் காய்ந்ததோகையும்குறிப்பன                                                                            

)இலையும் சருகும்        )தோகையும்சண்டும்               )தாளும் ஓலையும்       

)சருகும் சண்டும்

4) வேர்க்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டைஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை.                          

குலைவகை               )மணிவகை                           கொழுந்துவகை       

இலைவகை                                                         

5) கேட்டவர்மகிழப்பாடியபாடல்-இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும்,வினையாலணையும் பெயரும்முறையே                                                                                                                                        )பாடிய;கேட்டவர்         பாடல்;பாடிய            )கேட்டவர்;பாடிய           

பாடல்;கேட்டவர்                                             

6) தமிழ் அரசாண்ட கண்டம்….                                                                                                                     

 ஆசியா       குமரி          ஐரோப்பா     ஆப்பிரிக்கா                                                     

 7) தென்னன் என்று குறிப்பிடப்பட்ட மன்னன்                                                                                               

 பாண்டியன்  சேரன்  சோழன் பல்லவன்                                                                             

 8)முன்னும் என்ற சொல்லின் பொருள்…..                                                                                                        

 முந்தும்  முன்னர்  முன்னரும்  பொங்கியெழும்                                             

9)சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……                                                          

பாரதியார்  ஜி.யு.போப்  ).சச்சிதானந்தன்  பாவலரேறு                                                         

 10)பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்                                                                                  

துரை.செந்தில் ஆதுரை.வேலு  )துரை.செல்வம்  

)துரை.மாணிக்கம்                                                    

11) அன்னை மொழியேஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத்தொகுப்பு                                       

மொழிவாழ்த்து  தேன்மொழி  )கனிச்சாறு 

தமிழ்ச்சிட்டு                                                             

 12) தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தபெருஞ்சித்திரனாரின்நூல்                                                             

 திருக்குறள் மெய்ப்பொருளுரை          கனிச்சாறு    பாவியக்கொத்து       

மகபுகுவஞ்சி                            

13) நற்கணக்கே எனக்குறிப்பிடப்படும்நூல் தொகுப்பு                                                       

)பதினெண்மேற்கணக்கு            )பதினெண்கீழ்க்கணக்கு           )நற்றிணை 

)சங்க இலக்கியம்

14)பாவலரேறு பாப்பத்தே எனக் குறிப்பிடும் நூல்                                                                                            

)கனிச்சாறு )பத்துப்பாட்டு )எட்டுத்தொகை )பாப்பாபாட்டு                                                                             

15)தும்பி என்பதன்  பொருள்                                                                                                                                 

)வண்டு   )தம்பி     )ஈசல்      )கரையான்                                                                                          

16)உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூள-இவ்வடியில் காணும்நயம்                                              

)மோனை )எதுகை  )முரண் )இயைபு                                                                                         

17)திராவிட மொழிகளின் ஒப்பியல்இலக்கணம் எனும் நூலைஇயற்றியவர்                                                                

)வீரமாமுனிவர்  )ஜி.யு.போப் )கிருட்டிணப்பிள்ளை )கால்டுவெல்                                             

18)நெட்டி,மிளகாய்ச்செடிமுதலியவற்றின்அடி….                                                                         

)தாள் )தண்டு )கோல்  )தூறு                                                                                                                  

19)மொழிஞாயிறு எனப்போற்றப்படுபவர்………       

   )இளங்குமரனார் )தேவநேயப்பாவாணர் )தாமோதரனார்  )சுந்தரனார்                                

20)சிவியல் என்பது------------ஐக்குறிக்கும்                                                                                                                               

)சுருங்கிய காய்           )சுருங்கியபழம்           )சூட்டினால் பழுத்த பிஞ்சு )அழுகிய பழம்                                       

21)மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்தநிலையைக் குறிக்கும் சொல்எது?                                                                  

)அரும்பு  )வீ  )மலர் )செம்மல்                                                                                                        

22)திருவள்ளுவர் தவச்சாலைஅமைந்துள்ளஇடம்                                                                      

)அல்லூர்     )வள்ளூர்     )நல்லூர்     )நெல்லூர் 

23)கொழுந்தாடை என்பது கரும்பினது------ 

 )இடைப்பகுதி      )அடிப்பகுதி      )கணப்பகுதி      )நுனிப்பகுதி   

24)செம்மல் என்பது பூவின்………….நிலையக் குறிக்கும்                                                                        

)தோற்ற  )மலர்ந்த  )வாடின  )கீழே விழுந்த 

 25)இமைகளை மூடியபடி தமிழை எழுதும் ஆற்றல் பெற்றவர்……..                                

)பாவாணர் )திரு.வி. )பேரறிஞர்அண்ணா )பெரியார்

26)திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர்  

)இரா.இளங்குமரனார்  )பாவாணர் இ)திரு.வி.  )குன்றக்குடி அடிகளார்

 27)தனித்தமிழ் இயக்கம் என்ற நூலை இயற்றியவர்……….  

 )திரு.வி.  )மறைமலையடிகள்  )இரா.இளங்குமரனார் )குன்றக்குடியடிகளார்                

28)பலாப்பிஞ்சைக்  குறிக்கும்சொல்லைத்தேர்ந்தெடுக்க 

 )பிஞ்சு  )வடு  )மூசு  )கவ்வை                                                                                                                     

29)கச்சல் என்பது பின்வருவனவற்றுள் எது?  

)மாம்பிஞ்சு  )எள்பிஞ்சு  )இளம்பாக்கு   )வாழைப்பிஞ்சு                                                                 

30)இளம்பயிர் வகையைக் குறிக்கும் சொல் தொகுப்பைத் தேர்ந்தெடு                                                         

)கூலம்,பயறு,கடலை             )வடு,மூசு,குரும்பை

)தளிர்.முறி,குருத்து                 )நாற்று,கன்று.மடலி                        

31)பன்மொழிப்புலவர் எனப் போற்றப்படுபவர்……..  

 ).பொ.சிவஞானம்   )கா.அப்பாதுரையார்     இ)சந்தக்கவிமணி ஈ)பெருஞ்சித்திரனார்                                               

32)சம்பா நெல்லின் உள்வகைகள்…..    

 )90      )70       )80      )60      

33)உலகத் தமிழ்க்கழத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்……….                                                      

)தேவநேயப்பாவாணர்  )திரு.வி. )சச்சிதானந்தன்     )கா.அப்பாதுரையார்                                                         

34)கார்டிலா எனும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு…….                                                                                    

)1254  )1654   )1554   )1754                                                     

35)மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் இந்தியமொழி                                                                                          

)சமற்கிருதம்   )தமிழ்   )இந்தி   )பஞ்சாபி                                                                 

 36)நாடும்,மொழியும் நமதிரு கண்கள் எனப்பாடியவர்………..                                                         

)பாரதியார்  )பாரதிதாசன்  )கவிமணி  )தமிழழகனார்                                                    

 37) குச்சியின்  பிரிவு………..எனப்படும்.                                                                                                            

)போத்து  )குச்சி   )இணுக்கு )சினை.                                                                               

38)பொருத்துக:                                                                                                                                                                 1)தட்டை  -  அ)கரும்பின் அடி                                                      

2)கழி     -  )புளி,வேம்பு முதலியவற்றின் அடி                  

3)கழை   -  )கம்பு,சோளம் முதலியவற்றின் அடி                   

4)அடி    )மூங்கிலின் அடி                                                     

)1-,2-,3-,4-   

)1-,2-,3-,4-                         

)1-,2-,3-,4-   

)1-,2-,3,4-


39)சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்


)தேவநேயப் பாவாணர்  )இளங்குமரனார்  )திரு.வி. )மறைமலையடிகள்


40)போர்த்துகீசு நாட்டின் தலைநகர்……


)லெபனான்  )லிசுபன்  )கெய்ரோ  )ஹராரே


41)தமிழ்ச்சொல்வளம் எனும் கட்டுரை இடம் பெற்ற நூல்………


)சொல்லாய்வுக்கட்டுரைகள்  )தேவநேயம்  )மொழிமரபு  )ஆய்வியல் நெறிமுறைகள்


42)கார்டிலா என்னும் நூல் எந்த வரிவடிவில் அச்சிடப்பட்டது?


)பிரெய்லி  )பிரான்சு  )ஜெர்மன்  )ரோமன்


43)முத்தையும்,அமிழ்தையும் தருவது……


)சங்கு  )சிப்பி  )கடல்  )முத்து


44)தமிழ்மொழியின் அணிகலன்களாகக் கருதப்படுபவை………


)ஐஞ்சிறுங்காப்பியங்கள் )ஐம்பெருங்காப்பியங்கள்

)நீதிநூல்கள்  )இலக்கியங்கள்


45)கடல்சங்கினை எதனால் தடுத்து நிறுத்திக் காக்கிறது?


)கப்பல்  )சங்கு  )தோணி  )அலை


46)மெத்தவணிகலன் என்னும் சொல்லைப் பிரித்தெழுதும் முறை


)மெத்த+அணிகலன்)மெத்த+வணிகலன் இ)மெத்த+வணி+கலன் ஈ)மெத்தவணி+கலன்


47)ஒரு சொல்லோ,தொடரோ இருபொருள்பட வருவது………அணியாகும்


)தன்மையணி )இரட்டுறமொழிதலணி  )நிரல்நிரையணி  )தீவக அணி


48)இரட்டுற மொழிதலணி………எனவும் அழைக்கப் படுகிறது.


)வேற்றுமையணி ஆ)இயல்பு நவிற்சியணி)சிலேடையணி  )தீவக அணி


49)சந்தக்கவிமணி எனப் போற்றப்படுபவர்…….


)தேசிகவினாயகம்  )வெ.இராமலிங்கம்   )சுரதா  )தமிழழகனார்


50)தமிழழகனாரின் இயற்பெயர்…………


)சண்முகசுந்தரம்   )சோமசுந்தரம்  )சர்வர் சுந்தரம்  )அழகுசுந்தரம்


51)சார்பெழுத்து வகைகள்…….


)30    )10   )12   )18


52)பேச்சுவழக்கில்  உணர்வுக்கும்,இனிய ஓசைக்கும்………பயன்படுகிறது.


)உயிர்மெய்   )ஆய்தம்  )அளபெடை  )குற்றியலுகரம்


53)அளபெடுத்தல் என்ற சொல்லின் பொருள்


)அளவெடுத்தல் ஆ)அளவிடுதல்  )குறைந்தொலித்தல்  )நீண்டொலித்தல்


54)உயிரளபெடை………வகைப்படும்.


)3   )4   )5   )6


55)கூற்று1:செய்யுளில் ஓசையை நிறைவு செய்ய குறிலெழுத்துகள் அளபெடுக்கும்.

  கூற்று2:அளபெடயைக் குறிக்க அவற்றின் பின்னால் குறிலெழுத்துகள் எழுதப் பெறும்.


)கூற்று 1சரி,2தவறு    )கூற்று1தவறு,2 சரி     இ)இரண்டும் சரி       )இரண்டும் தவறு


56)உறாஅர்க்கு உறுநோய்  என்பது……அளபெடை


)சொல்லிசையளபெடை ஆ)இன்னிசையளபெடை             )இசைநிறையளபெடை )ஒற்றளபெடை


57)செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது……..


)செய்யுளிசையளபெடை ஆ)இசைநிறையளபெடை            )இன்னிசையளபெடை)சொல்லிசையளபடை


58)கெடுப்பதூஉம்,படாஅ பறை என்பவற்றில் வரும் அளபெடைகள் முறையே


)செய்யுளிசை,இன்னிசை    )இன்னிசை,செய்யுளிசை

)சொல்லிசை,இசைநிறைஈ)இன்னிசை,குரலிசை


59)பெயர்ச்சொல் எச்சமாகத் திரிந்து அளபெடுத்த சொல்லைக் கண்டறிக.


)எஃஃகிலங்கிய  )ஓஒதல்  )எடுப்பதூஉம்  )உரனசைஇ


60)ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகள்


)10     )18    )6    )12


61)மொழி…….வகைப்படும்.


)4      )5     )3       )6


62)தனிமொழியாக அமைந்த இணையைத் தேர்ந்தெடுக்க.


)நான் யார்?,சொல்       )நான்,சொல்    )பல,பலகை     )எட்டு,தாமரை


63)எழிலன் படித்தான் என்பது…….மொழி


)தொடர்மொழி             )தனிமொழி    )பொதுமொழி              )மூவகைமொழி


64)எட்டு என்ற தனிமொழியே எள்+து எனப்பிரிந்து பொருள் தருவது……


)மூவகைமொழி           )தனிமொழி    )தொடர்மொழி             )பொதுமொழி


65)ஈதல் என்ற தொழிற்பெயரின் வினையடி


)ஈகை             )     )தல்                )ஈக


66)விகுதிபெற்ற தொழிற்பெயரைக் கண்டறிக.


)தட்டு   )கேடு   )நடை   )சூடு


67)விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது……..


)முதனிலைத்தொழிற்பெயர்        )முதனிலைத்திரிந்ததொழிற்பெயர்         )பகுதி               )வினையாலணையும்பெயர்.   


68)நடவாமை என்பது………தொழிற்பெயர்


)வினையாலணையும்பெயர்       )எதிர்மறை     )முதனிலை      )முதனிலை திரிந்த


69)மூவிடங்களிலும்,முக்காலத்திலும் வரும் பெயர்…….


)சினைப்பெயர்             )தொழிற்பெயர்            )காலப்பெயர்                )வினையாலணையும்பெயர்


70)வினையே,பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது……..

)தொழிற்பெயர்            )வினையாலணையும்பெயர்                   )சினைப்பெயர்              )காலப்பெயர் 


you'll have second to answer each question.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts