மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 70 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.
மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின் இணைய வழி தேர்வு எழுதவும்.
நன்றி,வணக்கம்
இயல் -2
உயிரின் ஓசை
இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில்
குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்
1. காற்றே வா
2. தொகை நிலைத் தொடர்கள்
ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறைக்கப்பட்டப் பாடத்தின் அடிப்படையில் இயல் 2 இல் இரு பாடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இந்த இலக்கணப் பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நன்கு படித்து புரிந்து சிந்தித்து பின் பதில் அளிக்கவும். இங்கு கொடுக்கப்படும் வினாக்கள் ஒரு பயிற்சிக்கான வினாக்கள் மட்டுமே. தற்சமயம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அந்த திருப்புதல் தேர்வுக்கு இந்த வினாக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியினை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து பின் இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும். மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் உச்சப்பட்ச மதிப்பெண்ணை நீங்கள் அடையாளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி பெறவும். தங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். இதனை ஏன் PDF ஆக கொடுக்கப்படவில்லையென்றால் இதனைப் பார்த்து எழுதும் போது இந்த வினாக்கள் உங்கள் மனதில் பதியும் என்பதால் கொடுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் போதும் வினாவினையும், விடையினையும் சொல்லிக் கொண்டு எழுதுங்கள். இதனால் எழுத்துப் பிழை வருவது குறையும். தேர்வு நேரங்களில் மதிப்பெண் அதிகம் பெற உறுதுணையாக இருக்கும். எனவே மாணவர்கள் எந்த ஒரு பயிற்சித்தாளினையும் எழுதும் போது இந்த முறையைப் பின்பற்றினால் உங்களுக்கு ஏற்படும் எழுத்துப் பிழை பெருமளவு குறையும். வாழ்த்துகள் மாணவர்களே..... வாருங்கள் வினா வங்கிக்கு சென்று வாசிப்போம்,எழுதுவோம். கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டு இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண் பெற்றிடுவோம்.
இயல் - 3 க்கான இணையவழித் தேர்வு பெற - இங்கே சொடுக்கவும்
10.ஆம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண்
வினாவங்கி
(திருத்தி அமைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது)
1)’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’-பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றவை
அ)உருவகம்,எதுகை ஆ)மோனை,எதுகை இ)முரண்,இயைபு ஈ)உவமை,எதுகை
2)பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?
அ)பண்புத்தொகைஆ)உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ)உம்மைத்தொகை
3)’பிராண ரஸம்’ என்பதன் பொருள்……
அ)உயிர்வளி ஆ)பழச்சாறு இ)உயிர்வலி ஈ)துன்பம்
4)’நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,சிந்துக்குத் தந்தை,பாட்டுக்கொரு புலவன்’என்றெல்லாம் புகழப்பட்டவர்
அ)பாரதிதாசன் ஆ)கவிமணி இ)பாரதியார் ஈ)வாணிதாசன்
5)எட்டய்யபுர ஏந்தலாக அறியப்பட்ட கவிஞர்…….
அ)பாரதிதாசன் ஆ)பாரதியார் இ)கவிமணி ஈ)சுரதா
6)கேலிச்சித்திரம்,கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்………
அ)பாரதிதாசன் ஆ)கவிமணி இ)சுரதா ஈ)பாரதியார்
7)பாரதியார் எழுதிய காவியத்தைத் தேர்ந்தெடுக்க
அ)பாப்பா பாட்டு ஆ)கண்ணன் பாட்டு இ)பாஞ்சாலி சபதம் ஈ)புதிய ஆத்திச்சூடி
8)உரைநடையும்,கவிதையும் இணைத்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படுவது
அ)வசன கவிதை ஆ)புதுக்கவிதை இ)மரபுக்கவிதை ஈ)ஹைக்கூ கவிதை
9)காற்று எதைச் சுமந்து வர வேண்டுமென பாரதி அழைக்கிறார்?
அ)கவிதையை ஆ)மகரந்தத்தூளை இ)விடுதலையை ஈ)மழையை
10)வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்……..
அ)பாரதிதாசன் ஆ)பாரதியார் இ)கவிமணி ஈ)வாணிதாசன்
11)பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்……..
1)இந்தியா 2)சுதேசமித்திரன் 3)எழுத்து 4)கணையாழி
அ)1,2 சரி ஆ)முதல் மூன்றும் சரி இ)நான்கும் சரி ஈ)1,2 தவறு
12)வேற்றுமை,வினை,பண்பு முதலியவற்றின் உருபுகள் மறைந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்பது--------தொடராகும்.
அ)தொகாநிலை ஆ)வேற்றுமை இ)தொகைநிலை ஈ)எழுவாய்
13)தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.
அ)ஐந்து ஆ)ஏழு இ)ஒன்பது ஈ)ஆறு
14)பனிக்கடல் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)உவமைத்தொகை ஆ)தொகையுவமை இ)உருவகம் ஈ)வேற்றுமைத்தொகை
15)வேற்றுமை உருபும்,பயனும் உடந்தொக்க தொகையைக் கண்டுபிடி
அ)பள்ளி செல் ஆ)மக்கள் தொண்டு இ)செய்தொழில் ஈ)தைத்திங்கள்
16)காலம் கரந்த பெயரெச்சமே---------ஆகும்.
அ)பண்புத்தொகை ஆ)வினைத்தொகை இ)வினையெச்சம் ஈ)பெயரெச்சம்
17)எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் என்னும் நான்கு அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது------
அ)உம்மைத்தொகை ஆ)எண்ணும்மை இ)அளவைப்பெயர் ஈ)உவமைத்தொகை
18)மார்கழித்திங்கள்,சாரைப்பாம்பு ஆகியசொற்களில் இடம்பெற்ற பொதுப்பெயர்கள்
அ)மார்கழி,சாரை ஆ)திங்கள்,பாம்பு இ)மார்கழி,பாம்பு ஈ)திங்கள்,சாரை
19)செங்காந்தள் என்ற தொகைச்சொல்லில் மறைந்து வரும் உருபு
அ)ஆன ஆ)ஆகிய இ)போன்ற ஈ)ஐ
20)முறுக்குமீசை வந்தார் என்பது------------தொகை
அ)பண்புத்தொகை ஆ)வினைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ)இருபெயரொட்டுப்பண்புத்தொகை
21)இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்-------பெயர் முன்னும்,-------பெயர் பின்னும் வரும்.
அ)பொது,சிறப்பு ஆ)இடுகுறி,காரணம் இ)காரணம்,இடுகுறி ஈ)சிறப்பு,பொது
22)வேற்றுமைத்தொகை--------வகைப்படும்.
அ)6 ஆ)7 இ)8 ஈ)9
0 Comments