அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளிகளுக்கு மொபைல் போன் எடுத்து வர மாணவர்களுக்கு தடை


பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால், பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளி மாணவர்களும், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது. 


மீறி கொண்டு வந்தால், அவை பறிமுதல் செய்யப்படும்; திரும்ப வழங்கப்படாது. எனவே, பிள்ளைகள் மொபைல் போன் கொண்டு வராமல், பெற்றோர் உரிய அறிவுரை வழங்க வேண்டும். மொபைல் போன் கொண்டு வராமல் மாணவர்களை தடுக்கும் வகையில், ஆசிரியர்களை கொண்டு சுழற்சி முறையில் சோதனை நடத்த வேண்டும். அரசு பஸ்களில் படிக்கட்டில் நின்று, மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இருக்கக் கூடாது. எனவே, எல்லா பாடவேளைகளிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


உணவு இடைவேளையில், பாதுகாப்பான இடத்தில் மாணவர்கள் தனித்தனியே அமர்ந்து, உணவு உண்ண வேண்டும்.தனியார் வாகனங்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வாகன ஓட்டுனர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, பொறுப்பாளர் நியமிக்க வேண்டும். 


எவ்வித முன் தகவலும் இன்றி, மூன்று நாட்கள் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோரிடம் ஆசிரியர்கள் விசாரிக்க வேண்டும். அதன் விபரத்தை, பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவியரின் ஒழுக்க நடைமுறைகளில், எந்த சமரசமும் செய்ய கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts