அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால், ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், முதற்கட்டமாக, 13 ஆயிரத்து 331 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உள்ளது. அதேநேரம், உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் எல்லை யாக குறிப்பிடப்படும், 22 மாவட்டங்களில் மட்டும், தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 


மாவட்ட கல்வி அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்களை அளிக்க, பட்டதாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.சென்னை உயர் நீதிமன்றத்தில், தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கு நாளை விசாரணைக்கு வரும்போது, நியமனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts