அலகு 1 பாடத்திட்டக் கையேடு
வரலாறு
வரலாறு என்றால் என்ன?
அலகின் தன்மை : மை சிந்தும் வகை
கற்கும் முறை : தானே கற்றல்
நேரம் : 90 நிமிடங்கள்
பாட ஒருங்கமைப்பு : முழு பாடம்
கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல், மனவரைபடம் வரைதல், தொகுத்தல்
அறிமுகம்.
நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்து கால வரிசைப்படி கூறுவது. வரலாறு எனப்படும். "இன்றைய அரசியல் நாளைய வரலாறு".
படித்தல்
முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடல். மாணவர்களுக்குப் பாடப்பகுதியினை பிரித்து தனித்தனியாகக் கொடுத்துப் படித்தல், முக்கிய வாக்கியங்கள் கடின சொற்களை அடிக்கோடிடச் செய்தல்.
மனவரைபடம்
தொகுத்தல் மற்றும் வழங்குதல் :
- கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றுக்கு முந்தை காலம்.
- வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றுத் தொடக்க காலம் ஆகும்.
- கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், பயணக் குறிப்புகள் போன்றவை வரலாற்றைக் கட்டமைக்கின்றன.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம், தொகுத்த வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
1.வரலாற்றின் தந்தை
2. அசோகச் சக்கரத்தில் ஆரக்கால்கள் உள்ளன. 3. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை ?
எழுதுதல்
நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல், பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும், சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல் மற்றும் கலைச்சொற்கள் படித்துக் காட்டுதல்.
0 Comments