அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social Civics Unit-2 Notes of lesson

வகுப்பு: 10

பாடம் : சமூக அறிவியல்

பகுதி : குடிமையியல்

 அலகு - 2 : நடுவண் அரசு

மாதம்: ஜூலை

உட்பாடத் தலைப்புகள்

  • இந்தியக் குடியரசுத் தலைவர்
  • இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
  • துணைக் குடியரசுத் தலைவர்
  • நீதித்துறை
  • பிரதம அமைச்சர்

கற்றல் விளைவுகள்

SST929 - இந்திய பாராளுமன்றம் மற்றும் இந்திய நீதித்துறையின் பணிகளை மதிப்பிடுதல் அல்லது விவரித்தல்.

SST 1016-இந்தியாவிலுள்ள நடுவண் மற்றும் மாநில அரசின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் ஒப்பிடுதல்.

கற்றல் திறன்கள்

இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி கோடிட்டு காட்டுதல்,

இந்தியாவிலுள்ள நடுவண் அரசின் அதிகாரங்கள் மற்றும்

செயல்பாடுகளைப் பட்டியலிடுதல்.

நீதித்துறையின் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுதல்.

நுண் திறன்கள்

குடியரசுத்தலைவரின் அவசர கால அதிகாரங்களை பட்டியலிடுதல்.

இந்திய பாராளுமன்றத்தின் அமைப்பை விளக்குதல். மக்களவை மாநிலங்களவை செயல்பாடுகளை -

கலந்துரையாடுதல். மத்திய அமைச்சர்களின் அமைச்சகங்களை பட்டியலிடுதல்.

மாநிலங்களவை உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் என அறிதல்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் எத்தனை முறை கூட்டப்படுகிறது என அறிதல்.

குடியரசுத்தலைவர், பிரதமர் பணிகளை அட்டவணைப்படுத்தல்.

நடுவண் அரசின் மூன்று அங்கங்களை விளக்கப்படம் கொண்டு விளக்குதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

நடுவண் அரசின் தலைவர்களின் படங்கள் மற்றும் நாளிதழ்

செய்திகள்,

பாட Powerpoint slide show, Kalvi TV, QR Code videos, பாட extra YouTube videos, மற்றும் பாட விளக்க charts.

ஆயத்தப்படுத்துதல்

நம் பள்ளியில் வகுப்பாசிரியர் குறிப்பிட்ட வகுப்பை நிர்வாகம் செய்வது போல் மற்றும் தலைமை ஆசிரியர் அனைத்து வகுப்புகளையும் நிர்வாகம் பண்ணுவது போல்,

நம் இந்தியாவும் அனைத்து மாநிலங்களை உள்ளடக்கி ஆட்சி செய்யும் மத்திய அரசு போலவும், ஒரு குறிப்பிட்ட வகுப்பறை போல் உள்ள மாநிலத்தை ஆளும் மாநில அரசு போலவும் உள்ள

இரு நிர்வாக அரசுகளில் மைய அரசான நடுவண் அரசை நாம் இன்று பார்க்கலாம் என ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

சென்ற பாடத்தில் இந்திய அரசியலமைப்பு எனும் நம் இந்தியாவின் இதயம் போன்ற பாடத்தை அறிந்து இருப்பீர்கள்.

இப்போது அந்த அரசியலமைப்புச் சட்டம் வழியில் செயல்படும் நம்மை ஆளக்கூடிய நடுவண் அரசு, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர், பிரதமர், இந்திய பாராளுமன்றம் உச்சநீதிமன்றம் பற்றி பார்க்கலாம் என அறிமுகம் செய்தல்.

கருத்து வரைபடம்



கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

தற்போது  குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு பற்றிய நாளிதழ் செய்திகளை விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

மாணவர்கள் குழுவாக இருந்து மாதிரி பாராளுமன்றம் நடத்துதல். நீ பாராளுமன்ற உறுப்பினரானால் உன்னுடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என ஒரு ஒப்படைப்பு செய்க.

வலுவூட்டல் செயல்பாடுகள்

இந்தியாவில் புதுடெல்லியினை மையமாக வைத்து செயல்படும் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் அதிகார மையங்களாக விளங்கும் நடுவண் அரசை விளக்குதல்.

இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கும் உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு, செயல்பாடுகளை விளக்குதல்.

மதிப்பீடு

LOT சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டது.

அ) 250

2. இந்திய

ஆ) 545

இ) 239

FT.) 234

விடை: அ

உச்சநீதிமன்றத்

நியமிக்கிறார்.

தலைமை

நீதிபதியை

அ) குடியரசுத் தலைவர்

ஆ) பிரதமர்

விடை: அ

இ) துணைக் குடியரசுத் தலைவர் ஈ) ஆளுநர் கோடிட்ட இடத்தை நிரப்புக.

MOT

1. நடுவண் சட்டமன்றம் என்றழைக்கப்படுகிறது.

விடை: நாடாளுமன்றம்

2.இந்திய நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க அவை

விடை: மக்களவை

HOT சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1. i) உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறது.

ii) இந்தியாவின் தலைமை நீதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

iii) உயர் நீதிமன்றம் மேல் முறையீட்டின் உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.

iv) உச்சநீதிமன்றதின் தலைமையிடம் புதுடில்லியில்

அமைந்துள்ளது. அ) ii, iv சரியானது

ஆ) iii, iv சரியானது

இ) i, iv சரியானது

ஈ) i, ii, iii சரியானது

விடை: இ

2. i) இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.

ii) இவர் நாட்டின் உயர் சட்ட அதிகாரி ஆவார்.

iii) இவரை பிரதம அமைச்சர் நியமிக்கிறார்.

iv) உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்.

அ) ii, iv சரி

ஆ) i, ii, iv சரி

இ) i, iv சரி

ஈ) ii, ii சரி

விடை: ஆ

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள்

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள், பணிகள் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

பிரதம அமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

இந்திய நீதித்துறை குறித்தும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்.

குறைதீர் கற்றல்

நடுவண் அரசின் அதிகார மையமாக விளங்கும் குடியரசுத்தலைவர்,

பிரதமர், பாராளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வீடியோக்கள் போட்டு காண்பித்து பாடத்தை முழுமைப்படுத்துதல்.

தொடர் பணி

இந்தியாவின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்களின்

பட்டியலை படங்களுடன் தயார் செய்தல்.

> பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts