அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social Geography Unit-2 Notes of lesson

வகுப்பு: 10

பாடம் : சமூக அறிவியல்

அலகு - 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

மாதம்: ஜூலை

உட்பாடத் தலைப்புகள்

  • உலகமயமாக்கல்

  • உலகமயமாக்கலின் வரலாறு

  • வரலாற்றுப் பார்வையில் தென் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வணிகர்கள்

  • இந்தியாவில் உலகமயமாக்கல்

  • பன்னாட்டு நிறுவனம் (MNC) Multi National Corporation

  • நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO)

  • உலகமயமாக்கலின் தாக்கமும் மற்றும் சவால்களும்

கற்றல் விளைவுகள்

SST 1006 - உலகமயமாக்கல் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்தல்.

SST 1034 - சுற்றுப்பகுதி மண்டலம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் உலகமயமாக்கலின் தாக்கத்தை மதிப்பிடுதல்.

SST 1038 - இந்தியாவிலிருந்து மேற்கு ஆசியா,
தென்கிழக்காசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் கடல் வழி வர்த்தகத்தை மற்றும் நில இணைப்புகளை விபரணம் செய்தல்.

SST 1042 - கலாச்சாரத்தின் மீதான வர்த்தகத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தல்.

SST 1046 - உலகமயமாதல் மற்றும் தொழில்மயமாதலைப் பற்றிய அனுமானங்களை எடுத்துக் கூறுதல்.

கற்றல் திறன்கள்

பெயர்கள்,

உலகமயமாதல் தொடர்புடைய முக்கியமான இடங்கள், ஆண்டுகளை நினைவுபடுத்துதல்.

உள்ளூர் பொருளாதாரத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் பற்றி கலந்துரையாடுதல்.

தென்கிழக்காசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் உள்ள

கடல்வழி இணைப்புக்களை பகுப்பாய்வு செய்தல்.

கலாச்சாரத்தின் மிதவை வர்த்தகத்தின் தாக்கம் பற்றி

எடுத்துரைத்தல்.

நுண் திறன்கள்

உலக நிலவரைபடத்தில் நறுமணப் பொருட்கள் பாதையை குறித்து விளக்குதல்.

உலக வரைபடத்தில் கலிங்க (ஒடிசா) வர்த்தக பாதையை வரைதல்.

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் படங்கள்

மற்றும் விபரங்களை சேகரித்தல்.

நியாயமான வர்த்தக அமைப்பின் கொள்கைகளை பகுப்பாய்வு செய்தல்.

- உலகமயமாக்கலின் நேர்மறை தாக்கங்கள் - சீர்திருத்தங்கள் - சவால்களைப் பட்டியலிடுதல்.

உலகமயமாக்கலின் நேர்மறைத்தாக்கம், எதிர்மறைத்தாக்கம் பற்றி விவாதித்தல்.

உலகமயமாக்கலின் நன்மை தீமைகளை வரையறுத்தல்.

- GATT, TRIPS என்ற சொற்களை வரையறுத்தல்.

கற்பித்தல் உபகரணங்கள்

பன்னாட்டு கம்பெனிகளின் படங்கள் charts,

பாட Powerpoint slide show, Kalvi TV, QR Code videos,

பாட extra YouTube videos மற்றும் பாட விளக்க charts.


ஆயத்தப்படுத்தல்

. சென்ற பாடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் எனப் பார்த்தோம். இப்பாடத்தில் அப்பாடத்தின் புதிய பொருளாதார கொள்கையின் மறுவடிவமே உலகமயமாதல் எனக் கூறி ஆர்வமூட்டுதல்.

இன்று உலகம் நம் விரல் நுனியில் வந்துவிட்டது. அமெரிக்காவில் செப்டம்பரில் iphone அறிமுகமானால் அடுத்த நாளே இந்தியாவில் நம் கைகளில் கிடைக்கிறது என்றால் ஒரே பதில் உலகமயமாதலே என்று கூறி ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

இப்பாடத்தில் உலகமயமாக்கல் வரலாறு / உலகமயமாக்கல் எவ்வாறு வடிவம் பெற்றது?

இந்தியாவில் உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு, அதன் நிறை குறைகள் என பல்வேறு வடிவங்களில் நாம் பார்க்கலாம்.




கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

- உலகமயமாதல் பற்றி ஆசிரியர்கள், மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் எவை எவை உலகமயமாதல் மூலம் நம் கைக்கு கிடைத்தது பற்றி விவாதித்தல்.

இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களை ஆசிரியர் விளக்கிக் கூறுதல்.

மாணவர் செயல்பாடு:

உலகமயமாக்கல் பற்றிய படங்களை மாணவர்கள் சேகரித்து படத் தொகுப்பு உருவாக்குதல்.

மாணவர்கள் இந்தியாவிலுள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் படங்கள் மற்றும் விவரங்களைச் சேகரித்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

ஆசிய வரைபடம் மூலம் பட்டு மற்றும் நறுமணப் பொருள் பற்றி விளக்கி கற்பித்தல்.

> ஆரம்பகால வர்த்தகங்களை வீடியோக்கள் மூலம் கற்பித்தல். இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கையினை விளக்குதல்,

மதிப்பீடு

LOT சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பிரெஞ்சுக்காரர்களின் தலைமை. இடமாக இருந்தது எது?

அ) மசூலிப்பட்டினம் ஆ) மாஹி இ) பாண்டிச்சேரி

ஈ) புலிகாட்

விடை:

2. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

அ) சுவிட்சர்லாந்து ஆ) அமெரிக்கா

பிரான்ஸ்

ஈ) ஜெர்மனி

விடை: அ

MOT

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை

விடை: உலகமயமாக்கல்

ஒருங்கிணைப்பதாகும். 2. பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிடம்

HOT

விடை: மும்பை

1. நாகரீக உலகில் பல விளைவுகளை ஏற்படுத்திய பாதை அ) நன்னம்பிக்கை முனை கடல் வழி ஆ) சேது சமுத்திரம்

இ) பாரசீக வளைகுடா

ஈ) ஜிப்ரால்டர்

2. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை யாது?

அ) உருகுவே சுற்று - 1986 - 1994 ஆ) ஜெனிவா சுற்று - 1948

இ) டோக்கியோ சுற்று - 1974 - 1975

ஈ) டார்க்குலே சுற்று - 1951 - 1952

விடை: அ

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள் 

உலகமயமாக்கலின் பொருள் பற்றிய அறிவைப் பெறுதல்.

இந்தியாவின் உலகமயமாக்கல் மற்றும் அதன் சீர்திருத்தம் பற்றிய அறிவைப் பெறுதல்.

உலகமயமாக்கலின் நேர்மறை தாக்கம், எதிர்மறை தாக்கம் மற்றும் சவால்களை பகுப்பாய்வு செய்யும் திறனைப் பெறுதல்.

குறைதீர் கற்றல்

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றி எடுத்துக்காட்டுடன் விளக்குதல்.

எ.கா: சோனி, சாம்சங், ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், வால்மார்ட், யமஹா, ஹோண்டா......

தொடர் பணி

உலகமயமாக்கல் பற்றிய படங்களை மாணவர்கள் சேகரித்து படத் தொகுப்பினை உருவாக்குதல்.

பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts