அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social Economics Unit-1 Notes of lesson

வகுப்பு: 10

பாடம் : சமூக அறிவியல்

பகுதி : பொருளியல்


அலகு 1 - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளரச்சி: ஓர் அறிமுகம்

உட்பாடத் தலைப்புகள்

  • நாட்டு வருமானம்
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயைபு
  • இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
  • வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு
  • GDP யின் வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள்

கற்றல் விளைவுகள்

SST 1004 - பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையஅடிப்படை பொருளாதார சொற்களான மனித மூலதனம், நிலையான வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த மதிப்பு கூடுதல், தனிநபர் வருமானம், மனிதவள மேம்பாட்டுக் குறியீடு போன்றவற்றை வரையறுத்தல். 

SST 1013 - சில முக்கிய நாடுகளின் தலா வருமானத்தை ஒப்பிடுதல்.


SST 1015 - பல்வேறு அடிப்படை பிரிவுகளைப் பயன்படுத்தி துறைவாரியாக வகைப்படுத்துதல்.

 SST 1025 - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறைசார் அமைப்பு செயல்பாடுகளை அறிதல்.

கற்றல் திறன்கள்
 இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுதல். நிலையான வளர்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார சொற்களை வரையறுத்தல்.

தனிநபர் வருமானம் மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு போன்ற பொருளாதார சொற்களை வரையறுத்தல்.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளின் தனிநபர் வருமானங்களை ஒப்பிடுதல்.'

பல்வேறு துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளை வகைப்படுத்துதல்.


நுண் திறன்கள்

நிலையான வளர்ச்சி எனும் சொல்லின் பொருள் காணுதல். மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி விளக்கிக் கூறுதல்.

தனிநபர் வருமானம் என்ற விளக்குதல். மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை விளக்குதல்.

தலா வருமானம் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை ஆராய்தல்.



கற்பித்தல் உபகரணங்கள்

மதிப்பு கூட்டு முறை வரைபடம், GDP துறைவாரியா பங்களிப்பு, வட்ட வரைபடம், பாட விளக்க charts, பாட Powerpoint slide show, Kalvi TV, QR Code videos, பாட extra YouTube videos.

ஆயத்தப்படுத்துதல்

நம் வீட்டில் நம் பெற்றோர்கள் என்ன வேலை பார்க்கின்றனர்? அவர்களின் வருமானம் என்ன? வரவிற்குள் குடும்பம் நடத்துகிறோமா? என்ன வரவு செலவு?

அதுபோல நம்நாட்டில் என்னென்ன உற்பத்தி செய்யப் படுகிறது? என்ன வருமானம்? நாட்டு மக்களின் தலா வருமானம் என்ன?

நாட்டின் பொருளாதாரம் ஏறுமுகமா? இல்லை பாகிஸ்தான், இலங்கை மாதிரி இறங்கு முகமா? என வினாக்கள் கேட்டு பாடத்தை ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

நீங்கள் ஒன்பதாம் வகுப்பில், இந்திய தமிழக வேலை வாய்ப்பு, பணம், கூலி, ரிசர்வ் வங்கி என பார்த்து இருப்பீர்கள்.

இங்கு முதல் பாடமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் என்பதில் நாட்டு வருமானம், தலா வருமானம் GDP, GDPயில் துறைவாரியான பங்களிப்பு, வளர்ச்சி பாதையில் GDP மற்றும் வேலைவாய்ப்பு என பார்க்கலாம் என அறிமுகம் செய்தல்.




கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

GDP யில் துறைவாரியான பங்களிப்பை வட்ட விளக்கப்படம் மூலம் விளக்குதல்.

இந்தியாவில் GDP யில் துறை வாரியான பங்களிப்பு அட்டவணையை விளக்குதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள்

முதன்மைத் வகுப்பறையில் கூறுதல்.

துறையின் நடவடிக்கைகளை

தமிழ்நாட்டில் GDP புள்ளி விபரங்களை சேகரித்து கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களுடன் ஒப்பிடுதல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

நாட்டு வருமானத்தை அளவிட தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விளக்குதல்.

GDP சம்மந்தமான நாளிதழ் செய்திகளை விளக்குதல்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகளை விளக்குதல்.

மதிப்பீடு

LOT : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா __________ நாடாகும்.

அ) நான்காவது

ஆ) மூன்றாவது

இ) இரண்டாவது 

ஈ) ஐந்தாவது

விடை: இ

2.இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்.

அ) 56%

ஆ) 40%

இ) 50%

FT-) 44%

விடை: ஈ

MOT கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. தொடக்கூடிய பொருள்களை அறிஞர்கள் அழைக்கின்றனர்.

என்று பொருளியல்

2. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவி என்பது

விடை: பண்டங்கள்

HOT

விடை: தலா வருமானம்

1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அ) தற்கொலை விகிதம் சேர்க்கப்படவில்லை.

ஆ) பண்டங்கள்

ஈ) செலவின முறை விடை: அ

இ) மதிப்பு கூட்டுமுறை

குறைதீர்க்க கற்றல்

மெல்ல மலரும் மாணவர்களுக்கு தனித்த செயல்பாடுகள் மூலம் விளக்குதல்.

எழுதல் மற்றும் தொடர்பணி

மதிப்பீட்டு வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்து எழுதி வரச் செய்தல்




Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts