அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social Geography Unit-2 Notes of Lesson

வகுப்பு : 10

பாடம் : சமூக அறிவியல்

அலகு -2 இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

உட்பாடத் தலைப்புகள்

  • இந்திய காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
  • பருவக்காற்று
  • மழைப் பரவல்
  • இயற்கைத் தாவரங்கள்
  • வன உயிரினங்கள்

கற்றல் விளைவுகள்

SST 10 - 0902 - பல்வேறுபட்ட இயற்கை நிலத்தோற்றங்கள் பருவகாலங்கள் விவரித்தல்.


SST903-பருவக்காற்றுகள் - வானிலை - காலநிலை-தாவரங்கள் - விலங்குகள் போன்ற முக்கிய பதங்களை விவரித்தல்.

கற்றல் திறன்கள்

இந்திய இயற்கை அமைப்புப் பிரிவுகளை விவரித்தல்.

பல்வேறு வகையான காடுகளை அடையாளம் காணுதல்.

இந்தியாவின் காலங்களை வேறுபடுத்துதல்.

பருவக்காற்றுகள், வானிலை மற்றும் காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், மக்கள் தொகை அடர்த்தி ஆகிய முக்கியமான சொற்களை விவரித்தல்.

மழையின் வெவ்வேறு தரவுகளை ஒப்பிடுதல். 

நுண் திறன்கள்

வானிலை காலநிலை வேறுபடுத்துதல்.

தாவரங்கள் மற்றும் விலங்குகளை வேறுபடுத்துதல்.

காடுகளின் பல்வேறு வகைகளை ஒப்பிடுதல்.

> இந்திய வரைபடத்தில் காடுகளின் பரவலை குறித்து காட்டுதல்.

கற்பிக்கல் உபகரணங்கள்

இந்திய காடுகள் பற்றிய பரவல் வரைபடங்கள்,

உயிர்க்கோள காப்பகங்களின் இடங்கள் கொண்ட படங்கள். பாட Powerpoint slide show, Kalvi TV, OR Code video மற்றும்

பாட extra YouTube videos மற்றும் பாட விளக்க charts.

ஆயத்தப்படுத்துதல்

நாம் தற்போது இருக்கும் காலநிலை யாது?

தென்னிந்திய மக்கள் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளை அணியாதது ஏன்?

வட தென்னிந்தியாவில் தட்ப வெப்பநிலை மாறுபடுவது ஏன் போன்ற வினாக்கள் கேட்டு பதிலளிக்கச் செய்தல்.

காடுகள் அவசியமா? அவசியம் எனில் நம்மைப்போன்று இந்த உலகில் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் வாழ வேண்டுமா?

அப்படி எனில், அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் உயிர்க்கோள பாதுகாப்பு பெட்டகங்கள் பற்றிக் கூறி ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

இப்பாடத்தில் இந்திய காலநிலையைப் பாதிக்கும் காரணிகள், பருவக்காற்றுகளான குளிர்காலம், கோடைக்காலம், தென்மேற்கு பருவக்காற்று காலம், வடகிழக்கு பருவக்காற்று காலம்.

மழைப்பரவலில் குறை - அதிகம், இயற்கை தாவரங்கள் அதன் பரவல்கள், வன உயிரினங்கள், உயிர்க்கோள பெட்டகங்கள் பற்றி இப்பாடத்தில் காணலாம் என அறிமுகம் செய்தல்.

கருத்து வரைபடம்



கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

இந்திய வரைபடம் மூலம் அரபிக்கடல் கிளையான தென்மேற்ற டகிழக்கு பருவக்காற்றையும், வங்காள விரிகுடா கிளையான வடக்

பருவக்காற்றையும் விளக்குதல்.

காடுகள், பரவல்கள் மற்றும் உயிர்க்கோள காப்பகங்களையும் விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் பற்றி வகுப்பறையில் கூறுதல்.

காடுகளின் பயன்கள் பற்றி ஒவ்வொரு மாணவரையும் கூறச் செய்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வானிலை மாற்றங்களை ஒரு வாரத்திற்கு உற்றுநோக்கல் செய்து அதனை விளக்கச் செய்தல்.

இந்திய காலநிலைக் காரணிகளை வகைப்படுத்தி தமிழ்நாடு வானிலைக் காரணிகளுடன் ஒப்பிட்டு விவரித்தல். காடுகள் அவசியமா? ஏன்? முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலுவூட்டுதல்.

மதிப்பீடு

LOT சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. - இந்திய நாட்டை இருசமபாகங்களாகப் பிரிக்கிறது.

1.

அ) வடதுருவம் ஆ) பூமத்திய ரேகை இ) கடக ரேகை

ஈ) மகர ரேகை

விடை: இ

2. இந்தியாவில் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்

அ) நாக்பூர்

ஆ) டேராடூன்

இ) டார்ஜிலிங்

ஈ) பாட்டியலா

விடை: ஆ

MOT கோடிட்ட இடத்தை நிரப்புக,

1. அயன மண்டல இலையுதிர்க் காடுகளை அழைக்கலாம். விடை: பருவக்காற்றுக் காடுகள்

என்று

2. உலகிலேயே அதிக மழைபெறும் பகுதி --

HOT

சரியான கூற்றைத் தேர்வு செய்க.

விடை: மௌசின்ராம்

1. கூற்று (A) : ஆற்றங்கரைக் காடுகள் காதர் பகுதிகளில் காணப்படுகிறது.

காரணம் (R) : வடபெரும் சமவெளி பகுதிகளிலுள்ள ஆற்றுப் பகுதிகளில் இவ்வகைத் தாவரங்கள் அதிகம்

காணப்படுகின்றன.

அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி. ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.

இ) கூற்று சரி, காரணம் தவறு. ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

விடை:

2. நீ ஒரு புதிய தாவரத்தை உன் பகுதியில் பார்த்தால் அந் அ) பறவைகள் சரணாலயம் ஆ) விலங்குகள் சரணாலயம்

தாவரத்தைப் பாதுகாக்க எந்த இடம் செல்ல வேண்டும்?

இ) உயிர்க்கோளங்கள்

ஈ) கடற்சார் பூங்கா விடை: இந்

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள்

7 இந்திய காலநிலையைப் பாதிக்கும் காரணிகளை விவரிக்கும் திறன் பெற்றுக் கொள்ளுதல்.

> தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்று வீசும் திசைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை பெற்றுக் கொள்ளுதல்.

குறைதீர் கற்றல்

> இந்தியாவில் உள்ள காடுகளைப் பற்றி விளக்குதல்.



வீடியோ மூலம் உயிரிக் கோள காப்பகங்கள் வனவிலங்குகள் - பறவைகள் சரணாலயங்கள் வீடியோக்கள் காட்டி விளக்குதல்.

தொடர் பணி .

இந்திய வரைபடத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை, வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை குறித்து வருதல்.

பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.








Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts