அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social History Unit-2 Notes of Lesson

வகுப்பு: 10

பாடம் 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பகுதி - வரலாறு

மாதம்: ஜூலை

உட்பாடத் தலைப்புகள்

பொருளாதாரப் பெருமந்தம் பாசிசத்தின், நாசிசத்தின் எழுச்சி

ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும்

ஆப்பிரிக்காவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள்

தென் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் 

கற்றல் விளைவுகள்

SST 1012 - ஐரோப்பிய தேசியவாதத்தை காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்துடன் ஒப்பிடுதல்.

எ.கா: இந்தியா, தென் அமெரிக்கா, கென்யா, இந்தோ-சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள்.

கற்றல் திறன்கள்

இந்தியாவில் ஏற்பட்ட காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கத்தை ஐரேப்பாவின் தேசிய இயக்கத்தோடு ஒப்பிடுதல்.

ஐரோப்பிய தேசியவாதத்தை இந்திய காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்துடன் ஒப்பிடுதல்.

தென் அமெரிக்காவில் ஏற்பட்ட காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கத்தை ஐரோப்பாவின் தேசிய இயக்கத்தோடு ஒப்பிடுதல்.

கென்யாவில் ஏற்பட்ட காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கத்தை ஐரோப்பாவின் தேசிய இயக்கத்தோடு ஒப்பிடுதல்.

இந்தோ - சீனாவில் ஏற்பட்ட காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கத்தை ஐரோப்பாவின் தேசிய இயக்கத்தோடு ஒப்பிடுதல்.

நுண் திறன்கள்

இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான இத்தாலியின் முசோலினையும், ஜெர்மனியின் ஹிட்லரையும் ஆராய்தல்.

ஐரோப்பிய தேசியவாதம் பற்றி விவரித்தல்.

>இந்தோ-சீனா போர் நிகழ்வுகளுக்கான காரணங்களையும் விளைவுகளையும் அட்டவணைப்படுத்துதல்.

அமெரிக்காவின் மன்றோ கோட்பாட்டையும், டாலர் ஏகாதிபத்தியத்தையும் விளக்குதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

பாட Powerpoint slide show, Kalvi TV, QR Code மற்றும் பாட extra YouTube videos, பாட விளக்க charts,

>இத்தாலியில் முசோலினி, ஜெர்மனியில் ஹிட்லரின் படங்கள், உலக வரைபடம்.

ஆயத்தப்படுத்துதல்

எப்போதுமே ஒரு நாட்டை மற்ற நாடுகள் கசக்கி பிழியும் போது அங்கு வீறுகொண்டு ஒரு தலைவன் உருவாவான்.

அப்படி வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் சின்னாபின்னமாக்கப்பட்ட போது அங்கு ஹிட்லரும், முசோலினியும் உருவாகி இழந்த பெருமைகளை மீட்க முனைந்த போது இரண்டாம் உலகப்போர் மூண்டது எனக்
கூறி ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடையே இந்த உலகம் எவ்வாறு இருந்தது என்பதை பல பிரச்சனைகள் கொண்டு இப்பாடம் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக. அமெரிக்கா பெருமந்தம் முதல் தென் அமெரிக்கா, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஐரோப்பாவின் காலனியாதிக்கப் போட்டிகளையும் மற்றும் பிரெஞ்சு இந்தோ-சீனா பிரச்சனைகள் பற்றியும் விளக்கி உள்ளது என்பதை நாம் அறியலாம்.

கருத்து வரைபடம்




கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

ஹிட்லர்,முசோலினி மற்றும்ஸஹோ-சி-மின்
வாழ்க்கை வரலாற்றை விளக்குதல். 

 அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியினையும் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் விடுதலையையும் வரைபடம் கொண்டு விளக்குதல்.
மாண்வர் செயல்பாடு:

வியட்நாம் போர் குறித்த படங்களை சேகரித்து ஆல்பம் கொண்டு வருதல்.

பொருளாதார பெருமந்தம் அமெரிக்கா உட்பட ஒவ்வொரு துறைகளை எவ்வாறு பாதித்தது என ஒப்படைப்பு செய்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

* பாடத்தின் கடினப் பகுதியான ஆப்பிரிக்காவில் காலனிய

எதிர்ப்பியக்கங்கள் மற்றும்

தென் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் பற்றி வீடியோ செயல்பாடுகள் மூலம் வலுவூட்டுதல்.

மதிப்பீடு

LOT சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ரோம் அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியவர்

அ) ஹிட்லர்

ஆ) முசோலினி

இ) ரூஸ்வெல்ட்

2. ஹிட்லரை எதிர்த்த கட்சி

ஈ) ஹோ சி மின்

விடை: ஆ

அ) நாசிசக் கட்சி

ஆ) பாசிசக் கட்சி

இ) தேசியக் கட்சி

ஈ) சமூக ஜனநாயகக் கட்சி விடை: ஈ

MOT கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. 'ஹிட்லரின் இரகசியக் காவல்படை' என அழைக்கப் பட்டது.

விடை: கெஸ்டபோ

2. 'ஆப்பிரிக்க நேர்கள்' என்று அழைக்கப்பட்டவர்கள் ஆவர்.

HOT

சரியான கூற்றைத் தேர்வு செய்க.

விடை: போயர்கள்

1. கூற்று : முதல் உலகப்போர் முடிவில் அமெரிக்கா நல்ல நிதி நிலைமை பெற்றிருந்தது.

காரணம் : அமெரிக்கா உலகின் பணக்கார நாடாகவும் மற்ற நாடுகள் அதன் கடன் பெற்ற நாடாகவும் இருந்தன.

அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள்.

முதல் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெருமந்தத்தைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

ஆசியாவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள் பற்றியும் காலனிய நீக்க செயல்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ளுதல்.

இந்தோ சீனாவின் வியட் மின் கட்சியின் உதயம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.

குறைதீர் கற்றல்

ஹிட்லரின் எழுச்சி, முசோலினியின் எழுச்சி, ஹோ-சி-மின் எழுச்சி மற்றும் வீடியோக்கள் மூலம் அவர்தம் சாதனைகளை விளக்கிக் கற்பித்தல்.

தொடர் பணி

உலக வரைபடத்தில் ஜெர்மனி, இத்தாலி, வியட்நாம், பிரான்ஸ், பசிபிக் பெருங்கடல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் குறித்து வரச் செய்தல்.

பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts