6-ம் வகுப்பு சமூக அறிவியல் கல்வி அமுது பாடத்திட்டக் கையேடு
பகுதி - புவியியல்
அலகு - 2 - நிலப்பரப்பும் பெருங்கடலும்
அலகின் தன்மை : மை சிந்தும் வகை
கற்கும் முறை : குழுக் கற்றல்
கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், உற்று நோக்கல்,
அறிமுகம்
உலக உருண்டையைக் காட்டி நிலம் நீர் அமைப்புகளை அடையாளம் காட்டுதல், முந்தைய பாடத்தில் கற்றனவற்றை நினைவு கூர்தல்.
படித்தல்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
தொகுத்தல்<
- ஏழு கண்டங்கள் : ஆசியா, ஆப்பிரிக்கா, வட தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா. அமெரிக்கா
- ஐந்து பெருங்கடல்கள் : பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் தென் பெருங்கடல் மற்றும்
- மலைகள் : இமயமலை, ராக்கி, ஆண்டிஸ், ஆல்ப்ஸ், கிழக்குத் தொடர்ச்சி மலை.
- பீடபூமி : திபெத், சோட்டா நாகபுரி, தக்காணம் சமவெளி: பெரும்பாலும் ஆறுகள், துணை ஆறுகள் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல், வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்
மதிப்பீடு
- கண்டம் என்றால் என்ன?. >
- இரண்டாம் நிலை நிலைத்தோற்றங்கள் -______________
- உலகிலேயே உயர்ந்த பீடபூமி
எழுதுதல்
> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்குரிய விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
0 Comments