6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டம்
பகுதி - புவியியல்
அலகு - 2 பகுதி 2 நிலப்பரப்பும் பெருங்கடலும்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை
கற்கும் முறை : குழுக்கற்றல்
கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், புரிந்து கொள்ளல்
அறிமுகம்
முந்தைய வகுப்பில் கற்றனவற்றை நினைவு கூர்தல். கடல்கள் எவ்வாறு உருவானது? என்று கூறி அறிமுகம் செய்தல்.
படித்தல்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
தொகுத்தல்<
புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
புவியின் மொத்த பரப்பளவில் ஆறில் ஒருபங்கை கொண்டுள்ளது அட்லாண்டிக் பெருங்கடல்.
இந்தியப் பெருங்கடலில் அந்தமான், இலங்கை, லட்சத் தீவு போன்ற தீவுகள் உள்ளன.
தென்பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி
ஆர்க்டிக் பெருங்கடல் மிகச்சிறியது ஆகும்.
வலுவூட்டல்
> ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல்,
வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்
மதிப்பீடு
மிகப் பெரிய பெருங்கடல் எது? பெருங்கடலின் வகைகளைக் கூறு
கடலின் ஆழமான பகுதி எது?
எழுதுதல்
> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
0 Comments