அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 Geography Unit-2 Notes of Lesson

7-ம் வகுப்பு சமூக அறிவியல் கல்வி அமுது பாடத்திட்டக் கையேடு

பகுதி - புவியியல்

அலகு 2 நிலத்தோற்றங்கள்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை

கற்கும் முறை : குழுக்கற்றல் 
 
அலகின் ஒருங்கமைப்பு  : பாடம் முழுவதும்

கற்றல் திறன்கள்

வாசித்தல், வரைதல், அடிக்கோடிடுதல், விவாதித்தல், தொகுத்தல், வழங்குதல்.

ஆயத்தப்படுத்துதல்

* பூமியில் காணப்படும் நிலத்தோற்றங்கள் யாவை?

> சமவெளி என்றால் என்ன? * பீடபூமிகள் என்பது என்ன?

போன்ற கேள்விகளைக் கேட்டு ஆயத்தப்படுத்துதல்.

வாசித்தல் மற்றும் அடி,கோடிடுதல்

மாணவர்கள் பாடத்தை நன்கு வாசித்தல். முக்கியமான, கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல். பின்னர் குழுவாக அமர்ந்து அடிக்கோடிட்ட வார்த்தைகளை கலந்துரையாடி அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டுதல்.




தொகுத்தல்

V வடிவ பள்ளத்தாக்கு:

ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத் தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்த பள்ளத் தாக்கு குறுகிய படுகை உடையதாக V வடிவில் காணப்படும்.

நீர்வீழ்ச்சி:

> நீரானது செங்குத்துப் பாறைகள் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி என்கிறோம்

உட்பாய்த் தேக்கம்.

நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை வீழ்ச்சி உட்பாய்த் தேக்கம் என்கிறோம்.

குதிரைக் குளம்பு ஏரி:

ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் ஆற்று வளைவு துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றன. இதுவே குதிரைக் குளம்பு ஏரி.

வெள்ளச் சமவெளி:

சில நேரங்களில் ஆறு தன் கரைகளைத் தாண்டி நிரம்பி வழிகிறது. இதனால் ஆற்றின் அண்டைப்பகுதிகளின் வளமான மண் மற்றும் இதர பொருட்களை படியவைத்தலே வெள்ளச் சமவெளி.

மணல் திட்டுகள் :

ஏறக்குறைய கடற்கரைக்கு இணையாக கடலில் நீள் வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்ல சேறு மணல் திட்டுகள் எனப்படும்.

உப்பங்கழிகள்:

கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்த்தேக்கம் உப்பங்கழிகள் ஆகும்.

வலுவூட்டல்

QR Code மூலம் கற்பித்தல். குழுச் செயல்பாடுகள் அளித்தல்.

காணொலி மூலம் கற்பித்தல்.

மதிப்பீடு

கண்டப் பனியாறு என்றால் என்ன?.

டெல்டா என்பதை விளக்குக. மணல் திட்டுகள் என்பது என்ன?

குறைதீர் கற்றல்

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கடினப் பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்.

எழுதுதல் <

பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களை விடைகளை எழுதச் சொல்லுதல்.

தொடர்பணி

பாடத்தோடு தொடர்புடைய மேலும் படங்களைச் சேகரித்து ஒட்டி ஆல்பம் தயாரித்து வரச் சொல்லுதல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts