6-ம் வகுப்பு சமூக அறிவியல் கல்வி அமுது பாடக்குறிப்பேடு
பகுதி - குடிமையியல்
அலகு - 2 சமத்துவம் பெறுதல்
அலகின் தன்மை ; கட்டிடக் கல் வகை
கற்கும் முறை : குழுக்கற்றல்
ஒருங்கமைப்பு ; தனித்த பாடம்
கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், புரிந்து கொள்ளவி
அறிமுகம்
சமத்துவத்திற்காகப் போராடிய பெரியாரை பற்றிக் கூறுதல். > சட்டமேதை அம்பேத்கர் அவர்களைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்
படித்தல்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
தொகுத்தல்<
மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான (அ) தாழ்வான முறையில் கருதுவது பாரபட்சம்.
முன்முடிவு வலுவாக இருக்கும்போது ஒத்தக் கருத்து உருவாகிறது.
ஒருவரை பாகுபாட்டுடன் நடத்துவது சமத்துவமின்மை மக்களுக்கு எதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு ஆகும்.
சாதிப்பாகுபாட்டினை ஒழிக்க முன்னோடியாக நிகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு- 14 அனைவரும் சமம் என்கிறது.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல், வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்
> A.P.J அப்துல் கலாம் எழுதிய நூல்களில் ஒன்று
> பாரபட்சம் என்றால் என்ன?
எழுதுதல்
> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
0 Comments