அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 Std Science Unit - 3 Notes of Lesson

ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 8        

பாடம் : அறிவியல்     

அலகு 3 : ஒளியியல்     

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை                  

கற்கும் முறை : குழு கற்றல்    

கற்றல் நோக்கங்கள் :

  • v ஆடிகளின் பல்வேறு வகைகளை அறிந்து கொள்தல் .
  • v கோளக ஆடிகளில் தோ ன்றும் பிம்பங்களைப் பற்றிப் புரிந்து கொள்தல் .
  • v கோளக ஆடிகளின் பயன்பாடுகளைப் புரிந்து கொள்தல் .

அறிமுகம் :

இருட்டில் உள்ளப் பொருள்களை நம்மால் பார்க்க முடியுமா? எவ்வாறாக பொருட்கள் கண்களுக்கு புலப்படுகிறது கேள்வி எழுப்பி ஒளியையும் ஒளிப் பண்புகளைப் பற்றியும்  அறிமுகம் செய்தல்.

படித்தல் :

ஆடிகள், ஆடிகள் வகைகள், கோள்க ஆடிகள், கோள்க ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் போன்றப் பாடக்கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்து விளக்கம் அறியச் செய்தல்.

மனவரைபடம் :


 

தொகுத்தலும் வழங்குதலும் :

மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.

v ஆடிகளின் வகைகளை வகைப்படுத்தி விளக்குதல்.

v கோள்க ஆடிகளின் தன்மையையும் ஆடிகளால் தோன்றும் பிம்பங்களையும் கதிர்வரைபடம் மூலம் விளக்குதல்.

வலுவூட்டல் :

Ø  QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களாக செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

மதிப்பீடு :

1.         கோளக ஆடியின் குவிந்த பரப் பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது _____________ ஆடி.

2.         பின்புற பார்வைக் கண்ணாடியாக வாகனங்களில் பயன்படும் ஆடி ______________.

3.         கோ ளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன ?

குறைதீர்க் கற்றல் :

      மீத்திறன் மாணவர்கள் வாயிலாகவும் குழு செயல்பாடு வாயிலாகவும் பாடக்கருத்தை மீளக் கற்பித்தல்.

எழுதுதல் :

கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்களை அட்டவணைப்படுத்தி எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி : FA (a) : ளைந்தப் பரப்புடைய தேக்கரண்டியில் உருவாகும் பிம்பத்தை கண்டறிந்து வேறுபாடுகளை உற்றுநோக்கி காரணத்தை கண்டறிந்து வரச் செய்தல்.


ஆக்கம்
மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed.,M.Phil.,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, பழையவலம்.
திருவாரூர் மாவட்டம். 9095484620

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts