அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 STD SCIENCE UNIT-2 NOTES OF LESSON

ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 8       

பாடம் : அறிவியல்     

அலகு 2 விசையும் அழுத்தமும்    

அலகின் தன்மை : மை சிந்தும் வகை            

கற்கும் முறை : குழு கற்றல்

கற்றல் நோக்கங்கள் :

  • Ø  விசைக்கும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பினை அறிதல்.
  • Ø  பரப்பு இழுவிசை மற்றும் பாகுநிலை பற்றிய பண்புகளை அறிதல்.
  • Ø  விசை, அழுத்தம் தொடர்பான கணக்குகளைத் தீர்த்தல்.

அறிமுகம் :

  • அன்றாட வாழ்வில் இழுத்தல், தள்ளுதல் விசை எங்கெல்லாம் பயன்படுகிறது
  • இழுத்தல் அல்லது தள்ளுதலின் விளைவுகள் யாவை? என விசை, இயக்கம் பற்றி அறிமுகப்படுத்துதல்.

படித்தல் :

விசை, அழுத்தம், திரவங்களில் விசை, பாஸ்கல் விதி, பரப்பு இழுவிசை, பாகியல் விசை, உராய்வு விசை போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்து விளக்கம் அறியச் செய்தல்.

மனவரைபடம் :

தொகுத்தலும் வழங்குதலும் :

  • மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.
  •  விசை, விசையைச் சார்ந்துள்ள காரணிகளை பற்றி கூறுதல்.
  • அழுத்தம், அழுத்தத்தின் விளைவினை பற்றி விவாதித்தல்.
  • பாஸ்கல் விதி, பரப்பு இழுவிசை, பாகியல் விசை, உராய்வு ஆகியவற்றைப் பட்டியலிடல்.

வலுவூட்டல் :

  • Ø  செயல்பாடு 1 : கூம்புக்குடுவை, முட்டை கொண்டு வளிமண்ட அழுத்த செயல்பாடு செய்தல்.
  • Ø  செயல்பாடு 2 : பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் நிரப்பி துளையிட்டு அழுத்த பண்பு அறியும் சோதனை.
  • Ø  செயல்பாடு 3 : சிரஞ்சியினைக் கொண்டு பாஸ்கல் விதி அறியும் ஆய்வு.
  • Ø செயல்பாடு 4 : நீரில் குண்டூசியினை மிதக்கச் செய்யும் பரப்பு இழுவிசை செயல்பாடு.

மதிப்பீடு :

·     LOT : கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு ______________.

 MOT : உராய்வின் நன்மை தீமையைக் கூறுக?

·       HOT : பாஸ்கல்விதி எதில் பயன்படுகிறது?

குறைதீர்க் கற்றல் :

      QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களாக செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்

எழுதுதல் :

பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.

தொடர்பணி :

      FA (a) : 1. சிரஞ்சியினைப் பயன்படுத்தி நீரியல் உயர்த்தி மாதிரியைச் செய்து வரச் செய்தல்.

2. பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் நிரப்பி துளயிட்டு திரவங்களில் அழுத்தத்தின் விளைவுகளை உற்றுநோக்கி பட்டியலிட்டு வரச் செய்தல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts