பாடத்திட்டக் கையேடு
புவியியல்
அலகு 2 : வானிலையும், காலநிலையும்
அலகின் தன்மை : மை சிந்தும் வகை
கற்கும் முறை : குழு கற்றல்
ஒருங்கமைப்பு : முழுப்பாடம்
கற்பித்தல் கருவிகள்
> பாடப்புத்தகம் கரும்பலகை, சுண்ணக்கட்டி, மாதிரிப்படங்கள்
கற்றல் திறன்கள் —
- படித்தல், எழுதுதல், உற்று நோக்கல்
அறிமுகம்
> கோடை விடுமுறையில் மாணவர்கள் எங்கு சென்றார்கள் எனவும், கோடை வாழிடங்களுக்கு நாம் ஏன் செல்கிறோம் எனவும், ஊட்டி, கொடைக்கானல் ஏன் குளிராக உள்ளது எனவும், கோடை, குளிர் காலங்கள் ஏன் மாறிமாறி வருகிறது எனவும் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
படித்தல்
பாடக்கருத்தை மாணவர்களை படிக்க செய்து, புதிய மற்றும் கடினச் சொற்களை அடிக்கோடிட செய்தல்.
தொகுத்தல்
> பாடக்கருத்துகளை அட்டவணைப்படுத்தி விளக்குதல்
வலுவூட்டல்
> QR Video's மூலம் கற்றலை வலுவூட்டுதல்.
1) மதிப்பீடு
வளரறி மதிப்பீடு (அ)
செய்தித்தாளில் வரும் வானிலை பற்றிய செய்திகளை ஒரு வாரத்திற்கு மாணவர்களையே குறிப்பு எடுக்கச் செய்தல் வளரறி மதிப்பீடு (ஆ)
> சிறிய எழுத்து தேர்வு வைத்தல்
குறைதீர் கற்றல்
மதிப்பீட்டின் மூலம் கற்றலில் கடினப் பகுதியை கண்டறிந்து மெல்ல மலரும் மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல்.
எழுதுதல
பாடப்பகுதியில் உள்ள புதிய கடினச் சொற்களை எழுதிப் பயிற்சி கொடுத்தல்
தொடர்பணி
> பாடப்பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்து வரச் செய்தல். மேலும் இந்தியாவில் உள்ள மழை மறைவு பிரதேசத்தைப் பற்றி கேட்டுவர செய்தல்.
0 Comments