8ம் வகுப்பு சமூக அறிவியல் கல்வி அமுது பாடத்திட்டக் கையேடு
பகுதி - குடிமையியல்
அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை
கற்கும் முறை : குழுகற்றல்
ஒருங்கமைப்பு : முழு பாடம்
கற்பித்தல் கருவிகள்
பாடப் புத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை,
கற்றல் திறன்கள்
> படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், புரிந்து கொள்ளல்
அறிமுகம்
மாணவர்களிடம் நாம் இன்று எவ்வாறு சலுகைகளைப் பெறுகிறோம், இவை நமக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது எனக்கேட்டு பாட தலைப்பை அறிமுகம் செய்தல்.
படித்தல்
குடிமக்கள் மற்றும் குடியுரிமைக்கான பொருள் மற்றும் வரையறைகள் நன்கு படித்து முக்கியமானவற்றை அடிக்கோடு இடல்.
தொகுத்தல்
குடிமக்கள் குடிமகன் என்ற சொல் சிவில் (CIVIS) என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது
> 1955ம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது..
> ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதி இருக்கும் னினும் ஒன்றுக்கு மேற்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான ஒரு உயர்நீதி மன்றம் இருக்கலாம் இது அரசியல் அமைப்பின் காவலன்.
வலுவூட்டல்
குடிமக்களின் உரிமைகளும், பொறுப்புகளும் குறித்து விவாதித்து மனவரைபடம் வரைதல்..
மேலும் QR Code மூலம் பாடக் கருத்துகளை படமாக காட்டுதல்.
தமிழ் நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மதிப்பீடு
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
NRI என்றால் என்ன? மனித உரிமைகள் என்றால் என்ன?
எழுதுதல்
நடத்தி முடிக்கப்பட்ட, வினாக்களுக்கான விடைகளை வீட்டில் எழுதி வரச் செய்து பின் சரிபார்த்தல்.
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும், சில கடின பகுதிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்..
தொடர்பணி
> 1. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது?
0 Comments