அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10TH TAMIL - UNIT 3 - ONLINE QUIZ

 

தமிழ்விதை

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள  தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில்  இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 70 வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.  

மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை  அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின்  இணைய வழி தேர்வு எழுதவும்.

நன்றி,வணக்கம்

இயல் -3

கூட்டாஞ்சோறு

இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில் 

குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்

1. கோபல்லபுரத்து மக்கள்

2. தொகா நிலைத் தொடர்கள்

3. திருக்குறள்

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  அனைத்து  பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள்  இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள்  குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து  உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறைக்கப்பட்டப் பாடத்தின் அடிப்படையில் இயல் 3 இல் மூன்று பாடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இந்த இலக்கணப் பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நன்கு படித்து புரிந்து சிந்தித்து பின் பதில் அளிக்கவும். இங்கு கொடுக்கப்படும் வினாக்கள் ஒரு பயிற்சிக்கான வினாக்கள் மட்டுமே. தற்சமயம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அந்த திருப்புதல் தேர்வுக்கு இந்த வினாக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியினை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து பின் இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும். மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் உச்சப்பட்ச மதிப்பெண்ணை நீங்கள் அடையாளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது  விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி பெறவும். தங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். இதனை ஏன் PDF ஆக கொடுக்கப்படவில்லையென்றால் இதனைப் பார்த்து எழுதும் போது இந்த வினாக்கள் உங்கள் மனதில் பதியும் என்பதால் கொடுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் போதும் வினாவினையும், விடையினையும் சொல்லிக் கொண்டு எழுதுங்கள். இதனால் எழுத்துப் பிழை வருவது குறையும். தேர்வு நேரங்களில் மதிப்பெண் அதிகம் பெற உறுதுணையாக இருக்கும். எனவே மாணவர்கள் எந்த ஒரு பயிற்சித்தாளினையும் எழுதும் போது  இந்த முறையைப் பின்பற்றினால் உங்களுக்கு ஏற்படும் எழுத்துப் பிழை பெருமளவு குறையும். வாழ்த்துகள் மாணவர்களே..... வாருங்கள் வினா வங்கிக்கு சென்று வாசிப்போம்,எழுதுவோம். கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டு இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண் பெற்றிடுவோம்.

 

10.ஆம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண்

வினாவங்கி

(திருத்தி அமைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது)

இயல் - 3

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக:-

1)அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணம்

)வேற்றுமை உருபு  )எழுவாய்  )உவம உருபு   )உரிச்சொல்    

 2)ஒரு தொடர்மொழியில் இரு சொற்களின் இடையில் வேறுசொல் வேண்டாது பொருள் உணர்த்துவது----                                           

)இடைச்சொல்       ஆ)தொகைநிலைத்தொடர்           )தொகாநிலைத்தொடர்  )வேற்றுமைத்தொகை


3)தொகாநிலைத்தொடர்--------வகைப்படும்.


)6    )9    )8     )10


4)வினைப்பயனிலை  தொடர்ந்து வந்த எழுவாய்த் தொடரைக் கண்டுபிடி


)எழிலன் ஓவியன்    )நெல் விளைந்தது    இ)மழை பெய்யுமா?    

)அவன் மனிதன்


5)வினைமுற்றுடன் பெயர் தொடர்வது--------


)பெயரெச்சம்     )வினையெச்சம்     )வினைமுற்றுத்தொடர்)முற்றெச்சத்தொடர்


6)முற்றுப்பெறாத வினை,பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது----------


) வினைமுற்றுத்தொடர்     )வினையெச்சத்தொடர்     )முற்றெச்சம்  )பெயரெச்சத்தொடர்


7)உண்டவர், உண்டு,உண்கின்ற அனைவரும் மெய்ம்மறந்து போயினர் அடிக்கோடிட்ட சொற்கள் முறையே


)வினையாலணையும் பெயர்,வினையெச்சம்,பெயரெச்சம்)தொழிற்பெயர்,வினையெச்சம்,பெயரெச்சம்

)வினையெச்சம்,பெயரெச்சம்,வினையாலணையும் பெயர் ஈ)பெயரெச்சம்,வினையெச்சம்,வினைத்தொகை


8)வேற்றுமைத் தொகாநிலைத் தொடரைத் தேர்வு செய்க.


)அன்பே வா     )காவிரி பாய்ந்தது     )பள்ளிக்குச் சென்றாள்    

)கேட்ட வினா


9)மற்றொருவர் என்பது --------------- தொடர்.


)எண்ணுப்பெயர்          )இடைச்சொற்றொடர்  

)வினையாலணையும் பெயர்   )வேற்றுமைத்தொடர்


10)பெயரெச்சங்களை---------- என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதால்--------உருவாகின்றன.


)செய்ய,வினையெச்சம்     )செய்யும்,பெயரெச்சம்

)செய,முற்றெச்சம்     )செய,கூட்டுநிலைப்பெயரெச்சங்கள்.


11)அடுக்குத்தொடரைக் கண்டறிக.


) வாழ்க வாழ்க       ) குடு குடு   )பளபள     )சல சல


12)பொழிந்த நெய்க்கண் வேவையொடுஅடிக்கோடிட்ட சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு


)இறந்தகாலப் பெயரெச்சம்   )இறந்தகால வினையெச்சம்  )வேற்றுமைத்தொகை           )உருவகம்


13) பொழிந்த என்பதன் இலக்கணக் குறிப்பு


)வேற்றுமைத்தொகை      )பெயரெச்சம் 

)ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்     )எதிர்கால வினைமுற்று


14)சொல்லிசையளபெடைகளைத் தேர்ந்தெடுக்க


)அசைஇ,அல்கி     )அசைஇ,கெழீஇ     )கெழீஇ,அல்கி    )பரூஉ,அல்கி


15)வினைத்தொகையைக் கண்டறிக


)நன்மொழி   )மற்றொன்று  )பள்ளிசெல்   )அலங்கு கழை


16)இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது


)பெயர்,வினை   )வினா,விடை   )பெயர்,வினா  )வினை,வினா


17)ஒரு சொல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டமுறை அடுக்கித்தொடர்வது


)இரட்டைகிளவி    )அடுக்குத்தொடர்    )இரட்டுறமொழிதல் ஈ)உரிச்சொற்றொடர்.


18.) " சொல்ல வந்த செய்தி " சொல்லி விட்டு போ - இத் தொடரில் வண்ணச் சொல்லுக்கான இலக்கணம் யாது?


அ. வினையெச்சம்    ஆ. பெயரெச்சம்    இ. கூட்டு நிலை பெயரெச்சம்    

ஈ.  இடைச்சொல்


19 ) இறங்கினார் தலைவர் - இத்தொடரின் வகை யாது?


அ. வினைமுற்றுத் தொடர்    ஆ. அடுக்குத் தொடர்    இ. உரிச்சொல் தொடர்   

 ஈ. இடைச்சொல் தொடர்


20 ) அரிய கவிதைகளின்தொகுப்பு இது - இத்தொடருக்கான வண்ணமிட்டச் சொற்களின் தொடர் வகை யாது?


அ. வேற்றுமைத் தொடர்    ஆ. பெயரெச்சத் தொடர்    இ. வினையெச்சத் தொடர்

ஈ.  வினைமுற்றுத் தொடர்


21. ) கறங்கு இசை விழவின் உறந்தை - இவ்வடிகள் இடம் பெறும் நூல் ______________


அ. புறநானூறு        ஆ. குறுந்தொகை    இ. அகநானூறு    ஈ. பட்டினப்பாலை


22 ) கறங்கு இசை விழவின் உறந்தை - இவ்வடிகள் இடம் பெறும் ஊர் _____________


அ. இராமநாதபுரம்    ஆ. செங்கல்பட்டு    இ. சேலம்    ஈ. திருச்சி


23.) கி.ராஜநாராயணன் சாகெத்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ____________


அ. 1992     ஆ. 1991     இ. 1990     ஈ. 1993 


24.) இவர்களில் வேறுபட்டவர்கள் யார்?


அ. கு. அழகிரி சாமி    ஆ. பா. செயப்பிரகாசம்    இ. கி.ராஜ நாராயணன்    

ஈ. கு. சிவக்குமார்


25 ) கூட்டத்திற்கு அலை அலையென மக்கள் வந்தனர் - இத்தொடரில் வண்ணச்சொல்லிற்கான தொகை யாது?


அ. வினைமுற்றுத் தொடர்    ஆ. அடுக்குத் தொடர்    இ. பெயரெச்சத் தொடர்    

ஈ. வினையெச்சத் தொடர்

26.  எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?


அ. கூவிளம் தேமா மலர்    ஆ. கூவிளம் புளிமா நாள்    இ. தேமா புளிமா காசு

ஈ. புளிமா தேமா பிறப்பு

27வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

        கோலோடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?


அ. தற்குறிப்பேற்ற அணி    ஆ. வேற்றுமை அணி    இ. உவமையணி    ஈ. தீவக அணி


28. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 

        கோடிஉண்  டாயினும் இல் - இக்குறளில் வரும் அளபெடை யாது?


அ. இசைநிறை    ஆ. சொல்லிசை    இ. ஒற்றளபெடை    ஈ. இன்னிசை


29. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

       கண்ணோட்டம் இல்லாத கண் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?


அ. தற்குறிப்பேற்ற அணி    ஆ. வேற்றுமை அணி    இ. உவமையணி   

 ஈ. எடுத்துக்காட்டு உவமை அணி


30. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

      வேளாண்மை என்னும் செருக்கு - இக்குறளில்விடாமுயற்சி என்னும் பொருள் தரக்கூடிய சொல் எது?

அ. தகைமை    ஆ. தங்கிற்று    இ. தாளாண்மை    ஈ. வேளாண்மை





you'll have 15 second to answer each question.

Reactions

Post a Comment

1 Comments

  1. How to get to Slotomania at Harrah's Philadelphia
    Directions to Slotomania (Harrah's) on 인천광역 출장마사지 the 나주 출장안마 Philadelphia Turnpike. 안양 출장마사지 and take a turn to the Casino and other gaming 시흥 출장안마 areas 경주 출장마사지 on the

    ReplyDelete

Recent Posts