மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் பாடத்திலிருந்து இயல் முழுமைக்குமான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை ஒரு தாளில் எழுதிக் கொள்ளவும். மேலும் இந்த வினாக்களை நீங்கள் படித்து விட்டு இந்த வலைப்பதிவில் உங்கள் நினைவுத் திறனைச் சோதிக்கும் வகையில் இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் குறைக்கப்பட்டப்பாடத்திற்கான வினாக்கள் மட்டும் நினைவுத் திறன் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தொகுப்பின் இறுதியில் இணைய வழியாக நீங்கள் கற்ற இந்த வினாவங்கிக்கான இணைய வழி தேர்வினை எழுதவும்.
மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இதில் வரையறைக் கிடையாது. ஒவ்வொரு முறையிலும் தேர்வினை எழுதி உங்கள் மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கீழ்க்கண்ட வினாத் தொகுப்பினை நன்றாக பயிற்சி செய்து பின் இணைய வழி தேர்வு எழுதவும்.
நன்றி,வணக்கம்
இயல் -4
நான்காம் தமிழ்
இந்த பொருண்மையில் அமைந்த பாடங்களில்
குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாடங்கள்
1. பெருமாள் திருமொழி
2. பொது
ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மாணவர்கள் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து படிக்கவும். இணைய வழித் தேர்வும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திபடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் இந்த இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.மேலும் தங்களின் நண்பர்கள்,உறவினர்களுக்கும் இந்த இணைய இணைப்பை பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறைக்கப்பட்டப் பாடத்தின் அடிப்படையில் இயல் 4 இல் இரண்டு பாடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயினும் இந்த இலக்கணப் பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பகுதியினை நன்கு படித்து புரிந்து சிந்தித்து பின் பதில் அளிக்கவும். இங்கு கொடுக்கப்படும் வினாக்கள் ஒரு பயிற்சிக்கான வினாக்கள் மட்டுமே. தற்சமயம் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அந்த திருப்புதல் தேர்வுக்கு இந்த வினாக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியினை ஒரு முறைக்கு இரு முறை நன்கு படித்து பின் இந்த வினாக்களுக்கு விடையளிக்கவும். மீண்டும் மீண்டும் எழுதி உங்களின் உச்சப்பட்ச மதிப்பெண்ணை நீங்கள் அடையாளம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா வங்கியானது விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி பெறவும். தங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். இதனை ஏன் PDF ஆக கொடுக்கப்படவில்லையென்றால் இதனைப் பார்த்து எழுதும் போது இந்த வினாக்கள் உங்கள் மனதில் பதியும் என்பதால் கொடுக்கப்படவில்லை. நீங்கள் எழுதும் போதும் வினாவினையும், விடையினையும் சொல்லிக் கொண்டு எழுதுங்கள். இதனால் எழுத்துப் பிழை வருவது குறையும். தேர்வு நேரங்களில் மதிப்பெண் அதிகம் பெற உறுதுணையாக இருக்கும். எனவே மாணவர்கள் எந்த ஒரு பயிற்சித்தாளினையும் எழுதும் போது இந்த முறையைப் பின்பற்றினால் உங்களுக்கு ஏற்படும் எழுத்துப் பிழை பெருமளவு குறையும். வாழ்த்துகள் மாணவர்களே..... வாருங்கள் வினா வங்கிக்கு சென்று வாசிப்போம்,எழுதுவோம். கற்றதை, பெற்றதை நினைவில் கொண்டு இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண் பெற்றிடுவோம்.
10 -ம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண்
வினாவங்கி
(திருத்தி அமைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது)
1)’உனதருளே பார்ப்பன் அடியேனே’-யார்,யாரிடம் கூறியது?
அ)குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ)இறைவனிடம் குலசேகராழ்வார் இ)மருத்துவரிடம்,நோயாளி ஈ)நோயாளி,மருத்துவரிடம்.
2) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா’என ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்- ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே
அ)மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ)இடவழுவமைதி, மரபு வழுவமைதி
இ)பால் வழுவமைதி ,திணை வழுவமைதி
ஈ)கால வழுவமைதி,இட வழுவமைதி.
3)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்-இவ்வடியில் மருத்துவர்,நோயாளன் முறையே
அ)குலசேகர ஆழ்வார்,இறைவன்ஆ)இறைவன்,குலசேகர ஆழ்வார்
இ) நப்பூதனார் ,இறைவன் ஈ) இறைவன், நப்பூதனார்
4)திருவித்துவக்கோடு எனும் ஊர்----மாநிலத்தில்,--------மாவட்டத்தில் உள்ளது.
அ) தமிழ்நாடு, திருவரங்கம் ஆ) கேரளா, கோழிக்கோடு
இ)கேரளா, பாலக்காடு ஈ) தமிழ்நாடு, திருபுவனம்
5)குலசேகர ஆழ்வார் உய்யவந்த பெருமாளை எவ்வாறு உருவகித்துப் பாடுகிறார்?
அ)அன்னையாக ஆ) மருத்துவனாக இ) தந்தையாக ஈ) நண்பனாக
6)பெருமாள் திருமொழி நாலாயிர திவ்யபிரபந்தத்தில் எந்த ஆயிரத்தில் உள்ளது?
அ)இரண்டாயிரம் ஆ)முதலாயிரம் இ)மூவாயிரம் ஈ) நாலாயிரம்
7)நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக இடம்பெற்றது
அ)திருப்பாசுரம் ஆ) திருப்பல்லாண்டு இ) திருவருட்பாஈ) பெருமாள் திருமொழி
8) பெருமாள் திருமொழி பாடியவர்
அ)பொய்கையாழ்வார் ஆ) நம்மாழ்வார் இ)குலசேகர ஆழ்வார் ஈ)பெரியாழ்வார்
9) பெருமாள் திருமொழியில்------- பாடல்கள் உள்ளன
அ) 105 ஆ) 104 இ) 205 ஈ) 106
10) குலசேகர ஆழ்வாரின் காலம்--------- நூற்றாண்டு.
அ)ஏழாம் ஆ)எட்டாம் இ)ஒன்பதாம் ஈ)ஆறாம்
11)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்-இவ்வடிகளில் இடம்பெற்ற நயம்
அ) மோனை ஆ) எதுகை இ) உருவகம் ஈ) அந்தாதி
12)மாளாத காதல்நோயாளன் போல் மாயத்தால்’-இவ்வடியில் மாயம் என்பதன் பொருள்
அ) பொய்மை ஆ)நிலையாமை இ) விளையாட்டு ஈ) அற்புதம்
13)மாயத்தால் மீளாத் துயர் தருபவர்----------
அ)குலசேகர ஆழ்வார் ஆ)வித்துவக்கோட்டு இறைவன் இ) மக்கள் ஈ) மருத்துவர்
14)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்-இவ்வடிகளில் இடம்பெற்ற முரண் சொற்கள்
அ)வாளால்- மாளாத ஆ)நோயாளன்-மாயத்தால்
இ) மருத்துவன் - நோயாளன்ஈ)வாளால் - நோயால்
15)திணையின் உட்பிரிவு----------
அ) உயர்திணை ஆ)எண் இ)பால் ஈ)இடம்
16)உயர்திணைப் பால் பகுப்பில் அமைந்த சொல் வரிசையைத் தேர்ந்தெடுக்க
அ)வீரன்,புறா,மலை ஆ)யானை,ஆடவர்,தலைவி இ)கல்,மண்,மரம் ஈ)ஆண்,பெண்,மகள்
17)அஃறிணைக்குரிய பால்பகுப்புகள்-----------
அ)ஒன்றன்பால்,பலவின்பால் ஆ)ஆண்பால்,பலர்பால்
இ)பெண்பால், பலவின்பால் ஈ) பலர்பால், பெண்பால்
18)இடம்--------வகைப்படும்
அ)2 ஆ) 4 இ) 3 ஈ) 7
19) வந்தேன்,வந்தோம் என்பன---------
அ)தன்மை பெயர்கள் ஆ)தன்மை வினைகள்
இ)முன்னிலைப் பெயர்கள் ஈ)முன்னிலை வினைகள்
20)இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்--------- ஆகும் .
அ)வழு ஆ) வழாநிலை இ) வழுவமைதி ஈ) இயல்பு வழக்கு
21)இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் ------------ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) இயல்பு வழக்கு ஈ) தகுதி வழக்கு
22) வழு--------வகைப்படும்
அ)9 ஆ)8 இ)6 ஈ)7
23)ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்பது------------
அ)ஐய வினா ஆ) வினா வழாநிலை இ) வினா வழு ஈ) வழுவமைதி
24)தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுவது………..
அ) மரபு வழாநிலை ஆ) மரபுவழு இ) வழுவமைதி ஈ) திணை வழு
25)இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது--------
அ) வழுவமைதி ஆ) வழாநிலை இ) வழு ஈ) மரபுவழி
26) என் அம்மை வந்தாள் என்று மாட்டை பார்த்து கூறுவது
அ) திணை வழாநிலை ஆ) திணை வழு இ) திணை வழுவமைதி ஈ)பால்வழுவமைதி
27)குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது--------
அ)திணை வழுவமைதி ஆ)பால் வழுவமைதி இ)இடவழுவமைதி ஈ)கால வழுவமைதி
28)’கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்-என்ற வரிகள் பாரதியார் கவிதையில் இடம் பெற்றிருப்பது
அ)கால வழுவமைதி ஆ)மரபு வழுவமைதி இ)பால்வழுவமைதி ஈ)திணைவழுவமைதி
0 Comments