அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 Social History Unit-1 Notes of lesson

சமூக அறிவியல் ஆசிரியர் பாடத்திட்டக் கையேடு

வகுப்பு:10

பகுதி : வரலாறு

அலகு - 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்னிளைவுகளும்

அலகின் தன்மை : மை சிந்தும் வகை

கற்றல் வகை : குழு கற்றல்

கற்பித்தல் உபகரணங்கள் :
உலக வரைபடம், உலகப் போர் பற்றிய   விளக்கப்படங்கள், இணைய வளங்கள், க்யூ ஆர் கோட்

உட்பாடத் தலைப்புகள் : 

  • காலனிகளுக்கான போட்டி வல்லரசுகளின் போட்டி
  • முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் மற்றும் விளைவுகளும்
  • ரஷ்யப்புரட்சியும் அதன் தாக்கமும்
  • பன்னாட்டுச் சங்கம் தோற்றம் மற்றும் தோல்விகள்

கற்றல் விளைவுகள்

SST 907 அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் போன்ற இந்தியாவையும் உலகையும் மாற்றிய சில சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளில் பெயர்கள், இடங்கள் மற்றும் ஆண்டுகளை நினைவு கூர்தல்.

SST 913 - பிரெஞ்சு மற்றும் ரஷ்யப் புரட்சிகள் போன்ற உலகின் முக்கியமான புரட்சிகளுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் போக்கை ஒப்பிடுதல்

SST 919 - பல்வேறு புரட்சிகளின் காரணங்கள் மற்றும் விளைவுகளை விளக்குதல்.

 பாடறிமுகம்
உலகப் போர் எப்படி தொடங்கியது அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றிய ஒரு காணொளியை காட்டி பாட அறிமுகம் செய்தல்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் : 

ஆசிரியர் செயல்பாடு : 
முதல் உலகப் போர் ஈடுபட்ட நாடுகளையும் அதன் தலைநகரங்களையும் உலக வரைபடத்தில் குறித்து விளக்குதல்.

கருத்து வரைபடம்

மாணவர் செயல்பாடுகள் :

உலக வரைபடத்தில் நேச நாடுகளையும் அச்சு நாடுகளையும் குறிக்க செய்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

  • முதல் உலகப்போர் இடம் பெற்ற நாடுகளை உலக வரைபடத்தில் குறித்தல்.
  • இணையவளங்களை பயன்படுத்தி காணொளிகளைக் காட்டுதல்.
மதிப்பீடு :
LOT : ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவியவர்?
MOT : இருபதாம் நூற்றாண்டின் போக்கையே தீர்மானித்த போர்?
HOT : மஞ்சூரியா பன்னாட்டு சங்கத்திலிருந்து விலகியது இக்கூற்று சரியா?

குறைதீர் கற்றல்

முதல் உலகப்போர் பற்றிய வண்ணப்படங்கள், செய்திகள், வீடியோ உலக வரைபடம் வைத்து குறைதீர் கற்பித்தலை நிவர்த்தி செய்தல்.

தொடர் பணி

உலக வரைபடத்தில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், மொராக்கோ. செர்பியா, கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரிய ஹங்கேரி, ருமேனியா குறித்து வரச் செய்தல். பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts