அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social Civics Unit-1 Notes of lesson

சமூக அறிவியல் ஆசிரியர் பாடத்திட்டக் கையேடு

வகுப்பு:10

பகுதி : குடிமையியல்

அலகு - 1 இந்திய அரசியலமைப்பு

அலகின் தன்மை : மை சிந்தும் வகை

கற்றல் வகை : குழு கற்றல்

கற்பித்தல் உபகரணங்கள் :
அரசியலமைப்பு சட்ட உருவாக்க சிற்பிகளின் படங்கள், Ppt,qr code,Chart, இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்பு அட்டை

உட்பாடத் தலைப்புகள் : 
  • அரசியலமைப்பு அவசியம்
  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
  • அடிப்படை உரிமை 
  • அடிப்படை கடமை
  • மத்திய மாநில உறவுகள்
  • அவசரகால ஏற்பாடுகள்
  •  அரசமைப்புச் சட்டத் திருத்தம்

கற்றல் விளைவுகள் : 

- SST 1008 - முக்கிய சொற்களான கூட்டாட்சி பன்முகத்தன்மை, மதம் மற்றும் அரசியல் கட்சி போன்றவற்றை வரையறுத்தல். 

 SST 1043 - பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களாட்சிக்கும் இடையிலான தொடர்பை விளக்குதல்.

SST 907 உலகை மாற்றிய சில சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளின் பெயர்கள். இடங்கள் மற்றும் ஆண்டுகளை நினைவுகூர்தல்.

பாட அறிமுகம் :
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது யார்? எதற்காக இது உருவாக்கப்பட்டது .அதன் அடிப்படைக் கருத்துக்கள் என்ன? என்பது பற்றி மாணவர்களிடம் விவாதித்து பாட அறிமுகம் செய்தல்.

கருத்து வரைபடம் : 



கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு

  • இந்திய அரசியலமைப்பு சிறப்பு கூறுகளை விளக்குதல்.
  • அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் அட்டவணைப்படுத்தி விளக்குதல்.
  • கருத்து வரைபடத்தில் உள்ள விவரங்களை தொகுத்து விரித்தல்.

மாணவர் செயல்பாடு

  • இந்திய அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றவர்கள் பங்களிப்பை ஒப்படைப்பாக கொடுத்தல்.
  • அடிப்படை உரிமை மற்றும் அடிப்படை கடமைகளை முழு செயல்பாடாக வாசித்தல்.
வலுவூட்டல் செயல்பாடுகள்
  • க்யூ ஆர் கோடு மூலம் வீடியோக்களை காட்டுதல்.
  • குழு விவாதம் நடத்துதல்.
  • வினாடி வினா நடத்துதல்.
மதிப்பீடு

LOT : இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?

MOT : ஒரு நாட்டின் அடிப்படை கொள்கைகள் சார்ந்த சட்டம் எது?

HOT : உன் வகுப்புத் தோழனின் ரம்ஜான் விருந்திற்கு செல்கின்றாய் அப்போது நீ எந்த உரிமையை பயன்படுத்துகிறாய்?

குறைதீர் கற்றல் 
  • மெல்ல மலரும் மாணவர்களுக்கு மீத்திறன்  மாணவர்கள் பாடப் பொருளை மீளக் கற்பித்தல்.
எழுதுதல் மற்றும் தொடர் பணி

 இந்திய குடிமகனாக இருந்து தேசிய சின்னங்களை எவ்வாறு மதிக்க கற்றுக் கொள்ளலாம் என எழுதி வரச் சொல்லுதல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts