அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Civics Unit-1 Notes of lesson

சமூக அறிவியல் பாடத்திட்ட கையேடு

வகுப்பு: 9

பகுதி : குடிமையியல்

மாதம்  : ஜூன்

பாடம் 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

உட்பாடத் தலைப்புகள்

  • அரசாங்க அமைப்புக்கள்
  • மக்களாட்சி என்றால் என்ன?
  • மக்களாட்சியின் வகைகள்
  • இந்தியாவில் தேர்தல்கள்
  • இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும் சவால்கள்

கற்றல் விளைவுகள் :

 SST910- மக்களாட்சி மற்றும் சர்வாதிகாரத்துடன் தொடர்புடைய அரசியல் பதங்கள் மற்றும் சுதந்திரமான  பதங்களை
விவரித்தல்,

SST916 இங்கிலாந்து, சவுதி அரேபியா மற்றும் பூடான் போன்ற சமகாலத்திய வெவ்வேறு முடியாட்சிகளை ஒப்பிடுதல். 
SST 922 உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மக்களாட்சி அரசாங்கங்களைப் பற்றி சுருக்கமாக விவரித்தல்.

SST 923 மக்களாட்சி நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குதல்.

SST 1031 - இந்தியாவில் மக்களாட்சியை சீர்திருத்தம் செய்ய மேற்கொண்ட ஆலோசனைகளை மதிப்பீடு செய்தல்.

கற்றல் திறன்கள்

  • மக்களாட்சியை விளக்குதல்.
  • சர்வாதிகாரத்தை விவரித்தல். 
  • சவுதி அரேபியா, பூட்டான் ஆகிய நாடுகளின் முடியாட்சிகளை ஒப்பீடு செய்தல்.
கற்றல் உபகரணங்கள் :
இந்திய நாடாளுமன்ற கட்டிட வரைபடம் மற்றும் நாளிதழ் செய்திகள் வீடியோக்கள் இணைய வளங்கள்.

பாடறிமுகம் :

அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்து ஒரு நாட்டின் ஆட்சி அமைகிறது எனக்கூறி மாணவர்களிடம் விவாதித்தல்


கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

அரசாங்க அமைப்புகளை மன வரைபடம் மூலம் விளக்குதல்.

பழங்கால ஏதென்ஸ் மக்களாட்சி, அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சி, இந்தியா நாடாளுமன்ற கட்டிட வரலாறு போன்றவற்றை விளக்குதல்.

சர்வாதிகாரம் பற்றி விளக்கும்போது வடகொரியா நாடு மற்றும் அந்நாட்டு அதிபரை விளக்குதல்.

கருத்து வரைபடம்


மாணவர் செயல்பாடு
  • வாக்குரிமை பற்றி கலந்துரையாடுதல்.
  • மக்களாட்சி முறை பற்றி குழு வாதம் செய்தல்.
வலுவூட்டல் செயல்பாடுகள்:
  • மாதிரி வாக்கெடுப்பு நடத்துதல்.
  • இந்திய தேர்தல் முறை பற்றி வரைபடம் வரைதல்.
மதிப்பீடு 

LOT : சோழர் காலத்தில் _________  நடைமுறையில் இருந்தது.

MOT : இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் எங்கு உள்ளது.

HOT :உனக்கு 18 வயது பூர்த்தியாகும் போது நீ செலுத்தும் முதல் ஜனநாயக கடமை உரிமை யாது?

குறைதீர்க்க கற்றல் :
  • அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி முறை பற்றி வீடியோக்கள் காட்டுதல்.
எழுதுதல் மற்றும் தொடர் பணி
தேர்தல் ஆணையர்களின் பெயர் மற்றும் படங்களை சேகரித்தல்
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts