அலகு 1 : பாடத்திட்டக் கையேடு
குடிமையியல்
பன்முகத் தன்மையினை அறிவோம்
அலகின் தன்மை : தனித்த பாடம்
கற்கும் முறை : குழுக் கற்றல்
நேரம் : 90 நிமிடங்கள்
பாட ஒருங்கமைப்பு : கட்டிடக் கல் வகை
கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், புரிந்து
கொள்ளுதல்
அறிமுகம்
மாநிலம் வாரியாக பேசும் மொழிகளைக் கூறுதல். நம் நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் பற்றி அறிமுகம் செய்தல்
படித்தல்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
தொகுத்தல் மற்றும் வழங்குதல்
- மலைகள், பீடபூமிகள், சமவெளி, ஆறு கடல் போன்ற இயற்கைப் பிரிவுகளைக் கொண்டுள்ளதால் துணைக்கண்டம் என்று கூறுகிறோம்.
- சமூகத்தின் அடிப்படை குடும்பம் ஆகும்.
- குடும்பம் தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என இருவகைப்படும்.
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களும் சமம்.
- பல்வேறு விழாக்களை மக்கள் ஒன்றுபட்டு கொண்டாடி வருகின்றனர்.
- இந்தியா 122 முக்கிய மொழிகளை உடையது.
வலுவூட்டல்
- ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும்.
- மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்
மதிப்பீடு
- இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நடனம் எது?
- சமூகத்தின் அடிப்படை எது
எழுதுதல்
நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களை பற்றி கட்டுரை எழுதிவர கூறுதல் அவற்றை ஆசிரியர் சரிபார்க்க வேண்டும்.
குறைதீர் கற்றல்
மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
0 Comments