வகுப்பு :7
பருவம் - 1
வரலாறு
அலகு -1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை
கற்றல் வகை : தானே கற்றல்
அலகின் ஒருங்கமைப்பு : பாடம் முழுவதும்
கற்றல் திறன்கள் : வாசித்தல், வரைதல், விவரித்தல், எழுதுதல்
பாட அறிமுகம் :
வரலாறு அறிய உதவும் முக்கிய ஆதாரங்களைச் கூறுக. இடைக்காலம் என்பது எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை குறிக்கும்? போன்ற கேள்விகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்.
வாசித்தல் மற்றும் அடிக்கோடிடல் :
- மாணவர்களைப் பாடத்தை நன்கு வாசிக்கச் சொல்லுதல்.
- முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல், பின்னர் அவ்வார்த்தைகளை குழுவாக அமர்ந்து விவரித்து அறிந்து கொள்ளல்.
- ஆசிரியர் வழிகாட்டல்
தொகுத்தல் மற்றும் வழங்குதல் :
சான்றுகள்:
- கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் ஆகும்.
பொறிப்புகள்:
- அரசர் பிறப்பித்த பேராணைகள், அவர் அர்ப்பணித்த கொடைகள் போன்றவற்றை பாறைகள், கற்கள், கோயிற்சுவர்கள், உலோகங்கள் போன்ற கடினமான மேற்பரப்பின் பொறிக்கப்படும் எழுத்துகள் பொறிப்புகள் ஆகும்.
நினைவுச் சின்னங்கள்:
- கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள் கோட்டைகள், கோபுரங்கள். ஸ்தூபிகள் ஆகிய கட்டங்கள் ஆகியன நினைவுச் சின்னங்கள் வகையைச் சார்ந்தது.
நாணயங்கள் :
- நாணயங்களில் உள்ள உலோகக் கலவை பேரரசின் பொருளாதார நிலையை நமக்கு உணர்த்துகிறது.
வலுவூட்டல் :
- QR Code மூலம் வீடியோக்களை காட்டுதல்.
- குழுக் கற்றல் முறையை பின்பற்றுதல்.
- முக்கியச் செய்திகளை சார்ட் பயன்படுத்திக் கற்பித்தல்.
மதிப்பீடு :
- யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது ?
- தசுக் என்ற வார்த்தையின் பொருள் வரலாற்றை அறிய உதவும் இரண்டு சான்றுகளைக் கூறுக
குறைதீர் கற்றல்
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் கொண்டு மீண்டும் கற்பித்தல்.
எழுதுதல்
பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதிவரச் சொல்லுதல்.
தொடர்பணி
அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய ஆல்பம் தயாரித்து வரச் சொல்லுதல்.
0 Comments