7-ம் வகுப்பு சமூக அறிவியல்ஆசிர் பாட குறிப்பேடு
வகுப்பு : 7
பருவம்-1
புவியியல்
பாடத்திட்டக் கையேடு
அலகு - 1 புவியின் உள்ளமைப்பு
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை
அலகின் ஒருங்கமைப்பு : பாடம் முழுவதும்
கற்றல் திறன்கள் : வாசித்தல், வரைதல், கலந்துரையாடல், தொகுத்தல், வழங்குதல்.
ஆயத்தப்படுத்துதல் :
- புவி மாதிரியை காட்டுதல்.
- நீர்ப்பகுதியின் சதவீதம் கேட்டல். கண்டங்களின் பெயர்களைக் கேட்டல்.
- பெருங்கடல் பற்றியும் சுனாமி பற்றியும் கலந்துரையாடல்.
வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்
- மாணவர்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதியை நன்கு வாசிக்கச் சொல்லுதல்.
- முக்கியமான, கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல்.
- பின்னர் குழுவாக அமர்ந்து அவ்வார்த்தைகளை அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டுதல்.
Mind Map: :
தொகுத்தல் மற்றும் வழங்குதல் :
- புவியின் மேலோடு கண்டத்தின் மேலோடு, கடல் மேலோடுகள் என உள்ளன. கடல் மேற்பரப்பானது பசால்ட் அடர்பாறைகளால் ஆனது.
- கண்டங்களின் மேற்பரப்பு சியால் என்றும் மேலோட்டின் கீழ்பகுதி சிமா எனவும் அழைக்கப்படுகிறது.
- புவிக் கவசம் புவிமேலோட்டை மோஹோரோவிசிக் என்ற எல்லை மூலம் பரிக்கிறது.
- இது கவசமானது சுமார் 2900 கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
- புவிக்கரு என்பது புவியின் மையப்பகுதி ஆகும்.
- வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் எல்லையாக அமைகின்றது புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டது.
- நிக்கல் மற்றும் இரும்பால் ஆன (NIFE) உட்புற புவிக்கரு 5150 முதல் கி.மீ அளவில் பரவி உள்ளது.
வலுவூட்டல்
Q.R. Code மூலம் கற்பித்தல்.
குழுச் செயல்பாடுகள் கொடுத்தல். - சார்ட் அட்டைகளை பயன்படுத்தி கற்பித்தல்.
மதிப்பீடு
எரிமலையின் வகைகள் யாவை?.
நில நடுக்க அதிர்வலைகளை பதிவு செய்யும் கருவியின் பெயர் என்ன? புவி மேலோட்டின் வகைகள் யாவை?
குறைதீர் கற்றல்
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கடினம் பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்,
எழுதுதல்
பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களை விடைகளை எழுதச் சொல்லுதல்.
தொடர்பணி
பாடத்தோடு தொடர்புடைய மேலும் பல தகவல்களை அறிந்து
குறிப்பேட்டில் எழுதி வரச்சொல்லுதல். (இணையம், நூலகப் பயன்பாடு)
0 Comments