வகுப்பு-8
பகுதி - வரலாறு
அலகு - ஐரோப்பியர்களின் வருகை
அலகின் தன்மை : மை சிந்தும் வகை
கற்கும் முறை : தானே கற்றல்
ஒருங்கமைப்பு : முழு பாடம்
கற்பித்தல் கருவிகள்
பாடப் புத்தகம், கண்ணக்கட்டி, கரும்பலகை, வரைப்படம்
கற்றல் திறன்கள்
படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல், மனவரைபடம் வரைதல், தொகுத்தல்.
அறிமுகம்
இந்தியாவில் மக்கள் பேசும் மொழிகளையும், பழக்கவழக்கங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவிற்கு படையெடுத்த வந்த ஐரோப்பியர்களையும் பற்றிக்கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்,
படித்தல்
> முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடல். மாணவர்களுக்கு பாடப்பகுதியினை பிரித்து தனித்தனியாகக் கொடுத்து படித்தல், முக்கிய வாக்கியங்கள் கடின சொற்கள் அடிக்கோடிடச் செய்தல்.
தொகுத்தல் மற்றும் வழங்குதல்
- இந்தியாவிற்கு வருகைதந்த வெளிநாட்டவரையும் பற்றிய குறிப்புகள், நாட்டு இலக்கியம், எழுதப்பட்ட ஆதாரங்கள், ஆனந்தரங்கம் குறிப்பு, ஆவணக் காப்பகம், காசுகள், ஒலியம் கோட்டைகள் போன்றவைகளைத் தொகுத்து கூறுதல்.
- 1487-ம் ஆண்டு போர்ச்சுக்கல் இளவரசர் “ஹென்றி” “மாலும் ஹென்றி” இந்தியாவிற்கு செல்ல பார்த்தலோமியோடயஸ், என்பவரையும், பின் 1498 ம் ஆண்டு வாஸ்கோடகாமா என்பவரையும் அனுப்பினார்.
- போர்ச்சுக்கல் முதல் ஆளுநர் பிரான்சிஸ் கோடி அல்மெய்டா 1505 - 1509 வரை “ நீல நீர்க கொள்கை” யை பின்பற்றினார்.
- ஆரம்பத்தில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் தலை நகரமாக இருந்தது. பின்னர் 1690 -ல் நாகப்பட்டினத்திற்கு மாற்றினார்
- ஆங்கிலேயே வர்த்தகர் "சர் தாமஸ் ரோ " இந்தியாவில் வணிக மையத்தை அமைத்தார்.
- பிரெஞ்சு மன்னர் 14-ம் லூயியின் அமைச்சர் கால்பர்ட் என்பவரால் 1664-ல் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.
வலுவூட்டல்
- ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும்.
- மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
- வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு எந்த இடத்தில் வந்து இறங்கினார்?
- புனித டேவிட் கோட்டை எங்குள்ளது? இங்கிலாந்து இராணியின் பெயர் என்ன?
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும், கூடுதல் கவனம் செலுத்தி புரிய வைத்தல். கடின பகுதிகளுக்கும் விளக்கங்களைக் கூறல்,
எழுதுதல் மற்றும் தொடர் பணி
நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல், பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்த்தல்
0 Comments