அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Geography Unit-1 Notes of lesson

சமூக அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு

வகுப்பு: 9

பாடம் - 1

பகுதி : புவியியல்

அலகு - நிலக்கோளம் - புவி அகச்செயல்பாடுகள்

மாதம்: ஜூன்

உட்பாடத் தலைப்புகள்

  • புவியின் கோளங்கள்
  •  புவியின் அமைப்பு
  • பாறைகள்
  • புவிபுறச் செயல்பாடுகள்

கற்றல் விளைவுகள்

SST 943 - புவியியல் நிகழ்வுகளான பருவமழை, இயற்கைப் பேரிடர் போன்றவைகளின் காரணிகளை அறிதல்.
 
சுற்றல் திறன்கள்

புவியின் கோளங்கள் - புவியின் அமைப்பு - புவி பாறைக்கோளம் புவிச்செயல்முறைகள் - புவித்தட்டு - விளிம்புகளின் வகைகள் புவி அதிர்ச்சி - ஆழிப் பேரலை - எரிமலைகள் - அதன் வகைக விளக்குதல்,

நுண் திறன்கள்

இயற்கைக் காரணிகளான வானிலை, காலநிலை ஆறு, அலைகள், சிதைவுற்ற பொருட்களை அரித்தல், கடத்துதல படியவைத்தல் பற்றி பகுப்பாய்வு செய்தல்.

கற்றல் உபகரணங்கள்

உலக வரைபடம், புவியியல் அமைப்பு வரைபடம்.

சுனாமி மற்றும் எரிமலை வகைகள் வரைபடம்,

PPT and Slide Show ppb QR Code Video, Kalvi TV, பாட சம்பந்தப்பட்ட extr வீடியோக்கள் மற்றும் பாட விளக்க charts.

ஆயத்தப்படுத்துதல்

மாணவர்களே,நாம் வாழும் இந்தப் பூமி எவ்வாறு உள்ளது?

நாம் நடக்கும் தரையின்கீழ் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன? அதன் விளைவுகள் என்னென்ன?

என்பதனைப் பற்றி இந்த பாறைக்கோளம் - 1 - புவி அகச்செயல் (பூமியின் உள்செயல்) மூலம் தெரிந்து கொள்வீர்கள் என்று ஆர்வமூட்டுதல்,

பாட அறிமுகம்

இங்கு இப்பாடத்தில் புவியின் நான்கு கோளங்கள் புவியின் உள்கட்டமைப்பு - பாறைகளின் வகைகள் - அதன் சுழற்சி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வகைகள் - அதன் சாதக பாதக அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

புவியின் உள் அமைப்பு படம் வரைந்து அதன் உள் அடுக்குகளை விளக்குதல்.

சுனாமி பற்றிய வீடியோக்கள் எரிமலை பற்றிய செய்திகள் கொண்டு விளக்குதல்.

கருத்து வரைபடம்






மாணவர் செயல்பாடு:
  •  புவி உள் அமைப்பு படம் வரைந்து வருதல்.
  • உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையம் - புவி அதிர்ச்சி இமயமலை ஆல்ப்ஸ் மலை மற்றும் ஆப்பிரிக்காவின் பிளவு பள்ளத்தாக்கு வரைதல்,

வலுவூட்டல் செயல்பாடுகள்

புவியின் அகச் செயல்முறை கருத்தை விளக்குதல்,

மனவரைபடம் மூலம்  புவி அமைப்பு பற்றி  விளக்குதல்.

மதிப்பீடு

LOT  : கடலடி தளத்தை விட கண்டப்பகுதிகளில் மேலோடானது எவ்வாறு காணப்படுகிறது?

MOT : கீழ்க்கண்டவற்றுள் எரிமலையின் முக்கிய கூறுகள் யாது?

அ) எரிமலை குழம்புகள் ஆ) துவாரங்கள்

இ) கும்மட்ட எரிமலை ஈ) கேடய எரிமலை 

HOT ஜோர்டானில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட நகரம் யாது?

குறைதீர் கற்றல் :
இணைய வளங்கள் மூலம் வீடியோக்களை காட்டி பாடப்பொருளை விளக்குதல்.

எழுதல் மற்றும் தொடர்பணி :

பாடப்புத்தகத்தின் பின் உள்ள மதிப்பீடு வினாக்களுக்கு விடைகளை எழுதி வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts