அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social History Unit-1 Notes of lesson

பாடத்திட்டக் கையேடு

வகுப்பு:9

சமூக அறிவியல்

பகுதி: வரலாறு

பாடம் : 1

மனிதப் பரினாம வளர்ச்சியும் சமூகமும்; வரலாற்றுக்கு முந்தைய காலம்

உட்பாடத் தலைப்புகள்

  • புவியின் தோற்றமும் நிலவியல் காலகட்டங்களும் உலகின் தோற்றம் மற்றும் கடந்த காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு
  • தொல்பழங்காலம்: ஆஸ்ட்ரோலோபித் திசையிலிருந்து
  • ஹோமே எரக்டஸ் வழியாக ஹோமோ செப்பியனின் வளர்ச்சி
  • தொல்பழங்காலத் தமிழகம்

கற்றல் விளைவுகள்

  • SST 920 - சமகால உலகில் பல்வேறு சமூகக் குழுக்கள் எவ்வாறு மாற்றத்தை எதிர்கொண்டனர் மற்றும் அப்போது ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தல், புவியின் தோற்றம் - இப்புவியில் மனித பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளை விளக்குதல்.

கற்றல் திறன்கள்

  • வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் பரிணாம வளர்ச்சிகளை புதை படிமங்கள் வழி ஆராய்ந்து அறிதல்.
  • மனித மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது பற்றி விளக்குதல்.
  • தொல் பழங்கால பண்பாடுகளில் வளர்ச்சியில் மனித மூதாதையர்களின் தொடக்ககால கற்கருவிகள் பற்றி விளக்குதல்.
  • தொல் பழங்காலத் தமிழகத்தின் பல்வேறு கால வகைகளை விளக்குதல்.
கற்பித்தல் உபரணங்கள்

பாட Powerpoint slide show - Kalvi TV - QR Code video மற்றும் பாட Extra YouTube videos, பாட விளக்கப் படங்கள், தொகுப்பு.
வரலாற்றுக்கு முந்தைய கால கருவிகள் புகைப்படத் தொகுப்பு

ஆயத்தப்படுத்துதல்

மாணவர்களிடம், நாம் இன்று ஹைடெக் உலகத்தில் வாழ்கிறோம். அந்த நவீன வாழ்விற்கு அடித்தளமிட்டவர்கள் யார்?

வீடு, வீட்டு சுருவிகள், மொழி, எழுத்து எப்படி வந்தது? அது வழிவழியாய் எம்முறையில் மேம்பாடு அடைந்தது?

" அது எங்கு கிடைத்தது? யார் தோண்டியது? இப்போ எங்கு இருக்கிறது?

என்று வரலாற்றுக்கு முந்தைய காலத்தைக் கூறி பாடத்தை ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

நாம் தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம்.

அலைபேசிகளால் இன்று உலகம் நம் விரல் நுனியில் வந்துவிட்டது. இந்த வளர்ச்சி திடீரென தோன்றவில்லை.

இந்த நவீன வாழ்விற்கு அடித்தளமிட்ட நமது முன்னோர்களின் அறிவாற்றலால் படிப்படியாக மேம்பட்டது. 

மனிதனின் பரிணாம வளர்ச்சியினையும் மற்றும் தொல்பழங்காலத் தமிழகத்தையும் படிப்படியாக நாம் இந்த பாடத்தில் பார்க்கலாம்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு:

மனித இனத்தோற்றம் Powerpoint - slide show பயன்படுத்துதல். வரலாற்றுக்கு முந்தைய கால கருவிகள் புகைப்படத்தொகுப்பு

காண்பித்தல் பழங்கால ஓவியங்கள் - YouTube வீடியோக்கள் படத்தொகுப்பு

காண்பித்தல் மற்றும் பாட விளக்க charts. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளை மனவரைபடம் மூலம் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்



மாணவர் செயல்பாடு:

உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளை குறித்தல். 

புவியியல் யுகம் மனவரைபடம் வரைந்து காட்டுதல்.

வரலாற்றுக்கு முந்தைய கால கருவிகள் ஆல்பம் தயாரித்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்


உலகின் தொன்மையான அருங்காட்சியகம் பற்றி கூறி விளக்குதல்

வரவாறு தொடக்ககால யுகத்தை மவைரைபடம் மூலம் விளக்குதல்.

மதிப்பீடு: 

LOT :  உலகின் மிகவும் பழமையான பல்கலைக்கழக அமைந்துள்ள இடம் எது?

MOT கோடிட்ட இடத்தை நிரப்புக.

ஒரு கல்லின் முதன்மைப்பாளம் எனப்படுவது

HOT பாறை ஓவியங்களில் உள்ள ஓவியங்கள் முதலில் எதனால் வரையப்பட்டிருக்கும்.


குறைதீர் சுற்றல் 
மனித இனத்தின் தோற்றம் பற்றிய விளக்கப்படம் கொண்டு குறைதீர் கற்றல் திறனை மேம்படுத்துதல்,

தொடர்பணி

புவியியல் யுகம் மனவரைபடம் மற்றும் ஆப்பிரிக்க பிளவுப் பள்ளத்தாக்கு பற்றி ஒப்படைப்பு செய்தல். பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts