அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 STD SCIENCE UNIT -1 NOTES OF LESSON

ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON

வகுப்பு : 8     
     
பாடம் : அறிவியல்     

அலகு 1 : அளவீடுகள் 
    
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை         
          
கற்கும் முறை : குழு கற்றல் 
   
கற்றல் விளைவுகள் :
  • Ø  அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகளை அறிதல்.
  • Ø  அளவீடுகளின் துல்லியத்தன்மை குறித்து ஆராய்தல்.
  • Ø  அளவீடுகள் தொடர்பான கணக்குகளைத் தீர்த்தல்.
அறிமுகம் :
ஆய்வகத்தில் உள்ள அளவீட்டுக் கருவிகளை காட்டுதல், அறிவியல் புத்தகத்தின் நீளம், அகலங்களை அளக்கச் செய்தல். பழங்காலத்தில் எவ்வாறெல்லாம் நீளம் ,காலம் போன்றவற்றை அளந்தறிந்தார்கள் என விவாதித்தல்.

படித்தல் :
அலகீட்டு முறைகள், பன்னாட்டு அலகு முறை, அடிப்படை அலகுகள், கடிகாரங்கள், அளவிடுதலின் துல்லியத்தன்மை போன்ற பாடக் கருத்துக்களை மாணவக் குழுக்களைப் படிக்கச் செய்து புதிய வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்து விளக்கம் அறியச் செய்தல்.

மனவரைபடம் :

தொகுத்தலும் வழங்குதலும் :
மன வரைபடத்தில் உள்ள விபரங்களை மாணவக் குழுக்கள் தொகுத்து வழங்கச் செய்தல்.
  • v  அலகீட்டு முறைகளை வரிசைப்படுத்துதல்.
  • v  பன்னாட்டு அலகு முறைப் பற்றி விவாதித்தல்.
  • v  மின்னோட்டம், ஒளிச்செறிவு, பொருளின் அளவு ஆகியவற்றை வரையறுத்தல்.
  • v  கடிகாரங்களின் வகைகளையும் வரிசைப்படுத்துதல்.
  • v  தளக்கோணம், திண்மக்கோணம் ஆகியவற்றை வேறுப்படுத்துதல்.
வலுவூட்டல் :
  • Ø  செயல்பாடு 1 : வெப்பநிலையை வெவ்வேறு அலகுகளில் மாற்றுதல்.
  • Ø  செயல்பாடு 2 : வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி வெப்பநிலையை அளவிடல்.
  • Ø  செயல்பாடு 3 : ஒரு மின் சுற்றில் உள்ள மின்னோட்டத்தை அளந்தறிதல்.
மதிப்பீடு :
·        LOT - 90 என்பதை ரேடியனாக மாற்றுக.
·        MOT :ஒளிபாயத்தின் SI அலகு _____________. மின்னோட்டத்தின் SI அலகு __________. 
     HOT : துல்லியமான அணுக்கடிகாரம் எந்த அணுவினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது
குறைதீர்க் கற்றல் :
        QR CODE ல் உள்ள வீடியோக்களையும், இணையச் செயல்பாடுகளையும் காட்டுதல், மாணவக்குழுக்களாக செயல்பாடுகளை செய்து கற்கச் செய்தல்
எழுதுதல் :
பாடநூலில் உள்ள வினாக்களுக்கும் கூடுதலாக தரப்படும் சிந்தனை வினாக்களுக்கும் விடைக் கண்டு எழுதி வரச் செய்தல்.
தொடர்பணிFA (a) 
  • 1. ஒப்புமை வகைக் கடிகாரத்தின் மாதிரியை அட்டையைக் கொண்டு உருவாக்குதல்
  • 2.தீக்குச்சிகளை ஒரு அட்டையின் மீது வைத்து நாள் மற்றும் நேரத்தைக் காட்டும்
  • எண்ணிலக்க வகைக் கடிகாரத்தை உருவாக்குதல்.
  • 3.சூரியக் கடிகாரத்தை செய்து வருதல்.Text Box: ஆக்கம்
மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed.,M.Phil.,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, பழையவலம்.
திருவாரூர் மாவட்டம். 9095484620

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts