வகுப்பு: 10
சமூக அறிவியல்
பகுதி ; புவியியல்
பாடம் 3 இந்தியா-வேளாண்மை
உட்பாடத் தலைப்புகள்
- மண்
- நீர்ப்பாசனம்
- வேளாண்மை
- இந்தியாவின் முக்கியப் பயிர்கள்
- கால்நடைகள் மீன் வளர்ப்பு
- இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்
கற்றல் விளைவுகள்
- SST 1019 - இந்தியாவில் பயிர்களின் உற்பத்திக்குக் காரணமான உ பல்வேறு காரணிகளை விளக்குதல்.
- SST 1029 - மண் போன்றவற்றைப் பாதுகாக்கும் பாரம்பரிய மற்றும் நவீன முறைகள் பற்றி பகுப்பாய்வு செய்தல்.
- SST 1040 - பயிர்முறைகள் உள்ள மாற்றங்களை பகுப்பாய்வு செய்தல்.
கற்றல் திறன்கள்
- பல்வேறு விதமான மண் வகைகளை அடையாளம் காணுதல்.
- இந்திய நிலவரைபடத்தில் அரிசி மற்றும் கோதுமை உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதிகள் அல்லது மண்டலங்களைக் குறித்தல். இந்திய நிலவரைபடத்தில் தேயிலை மற்றும் காபி உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதிகள் அல்லது மண்டலங்களைக் குறித்தல்.
- இந்திய நிலவரைபடத்தில் இரப்பர் மற்றும் பருத்தி நெசவு உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதிகள் அல்லது மண்டலங்களைக் குறித்தல்.
- பட்டியலிடுதல். மண் பாதுகாப்பின் பாரம்பரிய மற்றும் நவீன முறைகளைப் பகுப்பாய்வு செய்தல்.
- பயிர் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்தல்.
நுண் திறன்கள்
- வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு என்பதன் காரணம் கண்டறிதல்.
- இந்தியாவில் வேளாண் முறைகளைப் பட்டியலிடுதல்.
- நீர் சேமிப்பு முறைகள் பற்றி கலந்துரையாடுதல்.
- வேளாண் பயிர்களைப் பாதிக்கும் காரணிகளை விளக்குதல்.
- இந்தியாவில் பல்வேறு பயிர்களின் உற்பத்திக்குக் காரணமான தொழில் நுட்பங்களை விளக்குதல்.
- இந்தியாவில் மண் பரவல்களையும் அதன் பண்புகளையும் விளக்குதல்.
கற்பித்தல் உபகரணங்கள்
இந்திய வரைபடம்,
பல்வேறு மண் வகைகள் மாதிரி - உணவுப் பயிர்கள் மாதிரி மற்றும் பணப்பயிர் மாதிரிகள்,
பாட Powerpoint slide show, Kalvi TV, OR Code video, பாட extr YouTube videos மற்றும் பாட விளக்க charts.
ஆயத்தப்படுத்துதல்
நாம் ஏற்கனவே நம் இந்திய நில அமைப்பு, அதன்தொடர்ச்சியாக காலநிலை மழை அளவு போன்று பார்த்தோம். அந்த மழையே இப்பாடத்தின் முக்கிய ஆதாரம்.
வேளாண்மைக்கு மழைநீர் ஆதாரம். நமக்கு அந்த வேளாண்மையே வாழ்வாதாரம்.
நம் அன்றாட வாழ்வாதாரம் மூன்று வேளையான உணவு பல வேளாண் பயிர்களில் இருந்து வருகின்றது. அந்தப் பயிர்கள் விளைய மண் தேவை, நீர்தேவை.
அந்த வேளாண்மை வகைகள், பயிர் வகைகள் போன்ற பலதரப்பட்ட வேளாண்மை பற்றியும் இப்பாடத்தில் காணலாம் என ஆர்வமூட்டுதல்.
பாட அறிமுகம்
இந்தியா வேளாண்மையில் மண், மண்வகைகள், நீர்ப்பாசனம், நீர்ப்பாசன வகைகள், வேளாண்மை, வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள், வேளாண்மையின் வகைகள்,
இந்தியாவின் முக்கியப் பயிர்களான உணவுப் பயிர்கள், வாணிபப் பயிர்கள்,
கால்நடைகள், மீன் வளர்ப்பு, இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் போன்றவற்றைப் பற்றி இப்பாடத்தில் காணலாம்.
கருத்து வரைபடம்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு:
நம் பகுதியில் மண்வகைகளை விளக்குதல்.
நம் பள்ளி - நம் பகுதி அருகே உள்ள வேளாண் பயிர்களை அறிமுகப்படுத்துதல்.
வேளாண்பயிர்களில் உணவுப்பயிர் எது? பணப்பயிர் எது? என வரைபடங்களுடன் அறிமுகப்படுத்துதல்.
மாணவர் செயல்பாடு:
மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மண் வகைகள், பயிர் வகைகளைப் பட்டியலிட்டு ஒரு ஒப்படைப்பு செய்தல்.
தங்கள் வீட்டில் தற்போது நீர் எவ்வாறு கிடைக்கிறது என மாணவர்கள் அனைவரையும் கூறச் செய்தல்.
வலுவூட்டல் செயல்பாடுகள் "இந்திய வரைபடம், பல்வேறு மாநிலங்களில் உள்ள மண் வகைகளை விளக்கிக் காட்டுதல்,
வட இந்தியர்கள் உணவு கோதுமை, தென்னிந்தியர்கள் - உணவு - அரிசி பற்றி ஏன் இந்த வேறுபாடு விளக்குதல்.
> மண் - சீதோஷ்ண நிலை, பாரம்பரியமாக வந்த உணவு முறை பற்றி விளக்குதல்.
மதிப்பீடு
[LOT
1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.
அ) நீர்
ஆ) லாவா
இ) மண்
ஈ) கருவம்
விடை: இ
2. நெல் உற்பத்தியில் -- நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
அ) வங்காளதேசம்
ஆ) சீனா ஈ) பாகிஸ்தான்
இ) மியான்மர்
விடை:ஆ
MOT கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. இந்தியாவில் மிகப் பழமையான பாசனமுறை
விடை: ஏரிப்பாசனம்
2. தன்னிறைவு வேளாண்மையில் பயிர்களுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விடை: உணவு
HOT சரியான கூற்றைத் தேர்வு செய்க. 1.கூற்று (A) : வெள்ளாடுகள் 'ஏழை மக்களின் பசு'.
காரணம் (R) : பசுவை போல், பால், இறைச்சி, தோல், ரோமம் ஆகிவற்றைக் கொடுக்கிறது.
அ) கூற்று (A) மற்றும் (R) இரண்டும் சரி காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று (A) மற்றும் (R) இரண்டும் சரி காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
குறைதீர் கற்றல்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு, எந்தெந்த பயிர்களில் இருந்து வருகிறது? என படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கற்பித்தல்.
தொடர் பணி
இந்திய வரைபடத்தில் மண் வகைகள் மற்றும் முக்கிய பயிர்கள் குறித்து வரச் செய்தல். விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி ஒரு ஒப்படைப்பு
செய்தல். பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச்
செய்தல்.
0 Comments