அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Geography Unit-3 Notes of lesson

9-ம் வகுப்பு கல்வி அமுது சமூக அறிவியல் பாடத்திட்டக் கையேடு 

வகுப்பு: 9

பாடம் 3  வளிமண்டலம்

பகுதி - புவியியல்

மாதம்: ஜூலை

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை

கற்கும் முறை : குழுக்கற்றல்

உட்பாடத் தலைப்புகள்

  • காற்று
  • வளிமண்டல கூட்டமைப்பு வளிமண்டல அடுக்குகள்
  • மேகங்கள்
  • வானிலை மற்றும் காலநிலை
  • மழைப்பொழிவு
  • ஈரப்பதம்

கற்றல் விளைவுகள்

SST 912 - மக்கள் தொகை மற்றும் மழைப் பொழிவு போன்ற வெவ்வேறு தரவுகளை ஒப்பிடுதல்.

SST918 - ஆற்றின் போக்கு, காலநிலை, மக்கள் தொகை பரவல்,

ஒரு பிரதேசத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப்

பாதிக்கும் காரணிகளை விளக்குதல்.

திறன்கள்

புவி மண்டலத்தின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகளை விளக்குதல்.

நுண் திறன்கள்

வானிலை, காலநிலை வேறுபடுத்துதல். வளிமண்டல அடுக்குகளை பகுப்பாய்வு செய்தல்.

மாறுபாடு மக்களின் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விவாதித்தல்.

கற்பித்தல் உபகரணங்கள் .

வானிலை பற்றிய நாளிதழ் செய்திகள்,

பாட PPT Slide Show work, OR Code Video, மற்றும் Kalvi வீடியோக்கள் மற்றும் மனவரைபடம், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் வானிலை

செய்திகள் மற்றும் பாட விளக்க charts.

ஆர்வமூட்டுதல்/ஆயத்தப்படுத்துதல்

மாணவர்களே நாம் இந்த புவியியல் below level புவி அகல் செயல்முறைகள் என்ற முதல் பாடத்திலும் eye level என புலி புறச்செயல்முறைகள் பாடத்திலும் பார்த்தோம்.

> இப்பாடத்தில் above level என இந்தப்புவியலின் நம்மைச் சுற்றி இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத வளிமண்டலத்தைப் பற்றிய நிகழ்வுகளை பார்க்கலாம் என ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

உயிரினங்கள் வாழ்வதற்கு தனித்தன்மை வாய்ந்த நம் புவியில் காற்று மிக அவசியம் புவியைச் சூழந்து காணப்படும் - காற்றுபடலம் வளிமண்டலம் எனப்படுகிறது.

இப்பாடத்தில் புவியின் வளிமண்டலத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் அனைத்தும் பாடத்தில் வந்துள்ளது.




கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

வானிலை மற்றும் காலநிலை பற்றிய அட்டவணையிலிருந்து வேறுபடுத்தி விளக்குதல்.

அன்றாட வானிலைச் செய்திகளை விளக்கிக் கூறுதல். மேகங்கள் படம் வரைந்து விளக்குதல்.

காற்று வேகமானி - காற்றுத் திசைமானி பற்றி வீடியோக்களுடன் விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

மாணவர்கள் TV - Radio - News paper மூலம் அறிந்து அன்றைய வானிலைச் செய்திகளைக் கூறுதல்.

வளிமண்டல பாடத்தின் முக்கிய செய்திகளை அடிக்கோடிடுதல் வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்கள் படம் வரையச் செய்தல்.

மேகங்கள் செய்தல். - மழை கவிதை பழமொழிகள் எழுதி வரச் - -

புவி வெப்பமயமாதலில் பனியாறுகள் எவ்வளவு வேகமாக உருகுகின்றன என குழு விவாதம் செய்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

பாடப்புத்தக QR Code வீடியோ மற்றும் YouTube வளிமண்டல வீடியோக்கள் மூலமாக வலுவூட்டுதல்.

வளிமண்டல செய்திகளை வாசித்து விளக்குதல்,

> PPT slide show மற்றும் Kalvi TV மூலம் விளக்குதல்.

மதிப்பீடு

LOT


1. புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் காற்று -____________
2. ஃபான் காற்று வீசப்படும் ஐரோப்பிய பகுதி எது?


MOT

1. காற்றை அளக்கப் பயன்படும் கருவிகள்

2. பொருந்தாத வார்த்தையை எழுதுக. அ) வெயில்

ஆ) காற்று

இ) மழை

ஈ) பாறை



HOT சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.கூற்று: இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத் தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம் வரை காணப்படுகிறது. காரணம்: இங்கு உயரம் அதிகரித்து செல்லச் செல்ல வெப்பநிலை குறைகிறது.

அ) கூற்று சரி காரணம் தவறு

ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

இ) கூற்று காரணம் இரண்டுமே சரி ஈ) கூற்று தவறு காரணம் சரி

2. வங்கக் கடலில் சென்னையில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த கடற்கரைப் பகுதியை நோக்கி வரும்?

அ) அரபிக்கடல் கடற்கரை

ஆ) அரேபிய கடற்கரை

இ) சோழமண்டல - வடசர்க்கார் கடற்கரை

ஈ) இந்தோனேசியா கடற்கரை

விடை:

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள் வளிமண்டல கட்டமைப்பு மற்றும் வளிமண்டல அடுக்குகள் பற்றி புரிந்து கொள்ளுதல்.

வானிலை மற்றும் காலநிலை வேறுபாடுகள் மற்றும் பாதிக்கும் காரணிகளை தொடர்புபடுத்தி மதிப்பீடு செய்யும் திறனைப் பெறுதல்.

குறைதீர் கற்றல்

நாம் தினமும் வளிமண்டல செய்திகளை விளக்குதல். மழைப் பொழிவு பற்றி விளக்குதல்.

இந்தியாவின் இரு பருவக்காற்றுகள் மூலம் வானிலை

காலநிலைச் செய்திகளை விளக்குதல்.

தொடர் பணி

வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்களை படம்

வரைக.

மழைமானி, காற்று திசைமானி இயங்கும் மாதிரிகளை உருவாக்குக.

மேகங்கள் மற்றும் மழை பற்றிய பழமொழிகளை சேகரிக்கவும். பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts