அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Economics Unit-2 Notes of Lesson

வகுப்பு: 9

அலகு -2  சமூக அறிவியல்

பகுதி : பொருளியலில்

உட்பாடத் தலைப்புகள் :

  • இந்தியாமற்றும் தமிழ்நாட்டில் எல்லை வாய்ப்பு
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பு
  • வேலைவாய்ப்பின் வகைகள் வேலைவாய்ப்பு அமைப்பு

கற்றல் விளைவுகள்

SST 915 - இந்திய மாநிலங்களின் வறுமை மற்றும் வேலையின்மையின் அளவுகளை ஒப்பிடுதல்.

SST 1053 - ஒருவரின் சொந்த பகுதியிலுள்ள சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கொண்டு வருதல்.

கற்றல் திறன்கள்

நபர்களின் எண்ணிக்கை விகிதம் - விளக்குதல்.

இந்திய மாநிலங்களில் வறுமையின் அளவுகளை ஒப்பிடுதல்.

இந்திய மாநிலங்களில் வேலையின்மையின்மை ஒப்பிடுதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

பாட சம்பந்தப்பட்ட Slide Show, Kalvi TV, QR Code Videos Extra Videos,

வேலைவாய்ப்பு - நாளிதழ் செய்திகள், > பணிகள் துறைகள் பற்றிய படங்கள்.

ஆயத்தப்படுத்துதல்

- மாணவர்களே இப்பாடத்தில் தொடர்ச்சியாக தாங்கள் எட்டா வகுப்பில் உள்ள முதல்நிலை தொழில்கள், இரண்டாம் நிலை தொழில்கள், மூன்றாம் நிலைத் தொழில்கள் என்ற தலைப்பி அதிலுள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து இருப்பீர்கள்.

இப்பொழுது நாம் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் வேை வாய்ப்பு உள்ள துறைகளை அறியலாம் என ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

வேலைவாய்ப்பு பற்றி படிக்கலாம் என அறிமுகம் செய்தல்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு துறைகளை விளக்குதல்.

தனியார்துறையில் அள்ளிக் கொடுக்கப்படும் ஊதியம் - IT துறை வேலைவாய்ப்புகள் - வங்கி வேலைவாய்ப்புகளை மாணவர்களிடம் விளக்குதல்.

தங்கள் பெற்றோர்கள் வேலை பார்க்குமிடம், ஒழுங்கமைக்கப்படாத துறைகளை (கட்டிட வேலை - பெட்டிக்கடை - ஜவுளிக்கடை) விளக்குதல்.

பொதுத்துறை (BSNL) - தனியார்துறை (AIRTEL - JIO) என எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

கருத்துரு வரைபடம்



மாணவர் செயல்பாடு:

ஒவ்வொரு மாணவர்களிடமும் நீவிர் எதிர்காலத்தில் விரும்பும் துறை யாது?

அதற்கு உம்மை தயார் செய்கின்றாயா?

அதற்கான காரணங்களை பலர் முன்னிலையில் வகுப்பறையில் வெளிக்கொணர்தல்.

உங்கள் பெற்றோர்கள் எந்தத் துறையில் வேலை பார்க்கின்றார்கள் என மாணவர்கள் கூறுதல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

வேலைவாய்ப்பு - வருமானம் - அதன் மூலம் குடும்ப வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.

உங்கள் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் எத்துறையில் வேலை பார்க்கின்றனர் என்பதை தனியார்துறை பொதுத்துறை என - வேறுபடுத்தி விளக்குதல்.

மதிப்பீடு

LOT 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.இருவேல்பட்டு என்ற கிராமம் தமிழ்நாட்டில் ________ மாவட்டத்தில் உள்ளது.

2. 2011-12-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பில் ______________ பங்கு 49% சதவீதமாக இருந்தது.

MOT

உனது அண்ணன் தற்போது பெட்ரோல் பங்க்கில் வேலை செய்தார் எனில் அது எந்த துறை?

HOT

1. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத வார்த்தை யாது?

அ) மூன்றாம் துறை - விவசாயம் ஆ) இரண்டாம் துறை - தொழிற்சாலை

இ) முதன்மைத் துறை - காடுகள்

ஈ) ஒழுங்கமைக்கப்பட்ட துறை - பெட்டிக்கடை

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள்

இந்தியாவில் வேலைவாய்ப்பு கட்டமைப்பை அறிந்து கொள்ளுதல்.

இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கினைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

பொதுத்துறை தனியார்துறை வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல்.

குறைதீர் கற்றல்

பிரமிடு வடிவில் துறைகளை வகைப்படுத்தி

பாடத்தின் மையக்கருத்தை விளக்குதல்.

தொடர் பணி

உங்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள் செய்யும் அனைத்து வகையான வேலைகளையும் பட்டியலிட்டு எழுதி வரச் சொல்லுதல்.

பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.


























Reactions

Post a Comment

0 Comments

Recent Posts