அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Social Economics Unit-1 Notes of Lesson

7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டக் கையேடு

பகுதி : பொருளியல்

அலகு 1 : உற்பத்தி

அலகின் தன்மை :. கட்டிடக் கல் வகை

கற்கும் முறை : குழுகற்றல்

பாடத்தின் ஒருங்கமைப்பு : : முழு பாடம்

கற்பித்தல் கருவிகள்

பாடபுத்தகம், கரும்பலகை, மாதிரிப்படங்கள்.

கற்றல் திறன்கள்

> படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், புரிந்து கொள்ளுதல்.

பாட அறிமுகம்

> நாம் உண்ணும் உணவு, உடுத்தும் ஆடை எங்கிருந்து, எப்படி, எவ்வாறு உற்பத்தி செய்து தயாரிக்கிறார்கள் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

கற்றல் நோக்கங்கள்

> உற்பத்தியின் பொருள் அறிதல் உற்பத்தியின் வகைகள் அறிதல் உற்பத்திக்கான காரணிகள், சிறப்புகள் பற்றி அறிதல்.

படித்தல் :

பாடப் பொருளை படித்து புதிய வார்த்தைக்கு விளக்கம் பெறுதல்.
மனவரைபடம்:



தொகுத்தல் மற்றும் வழங்குதல்

* இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை நேரடியாக பயன்படுத்தி செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம்.

- நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத்துறை உற்பத்திகளே.

* வேலை பகுப்பு முறையை ஆடம்ஸ்மித் தனது நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

* பயன்பாடு என்பது நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.

மன வரைபட விவரங்களை தொகுத்து வழங்குதல்.

வலுவூட்டல்

ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல், வழங்குதல் வேண்டும்.

 மதிப்பீடு

i.உற்பத்தி என்பது என்ன?
ii. பயன்பாடு என்பது என்ன?

குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.

எழுதுதல்

> வினா-விடைகளை வீட்டில் எழுதிவரச் செய்து சரிபார்த்தல்,


தொடர்பணி

 உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதி வரச் சொல்லுதல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts