8-ம்வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டக் கையேடு
அலகு 2 - வர்த்தகத்திலிருந்து பேரரசு உரை
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை
கற்கும் முறை : குழுக்கற்றல்
கற்பித்தல் கருவிகள்
> பாடப்புத்தகம், இந்திய வரைபடம், சுண்ணக்கட்டி, கரும்பலகை,
கற்றல் திறன்கள்
> படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
> இன்று இருக்கக்கூடிய அரசியல் ஆட்சிமுறையின் வரலாற்றைக் கூறியும், முந்தைய வகுப்பில் நடைபெற்றதை தொடர்பு படுத்தியும் அறிமுகம் செய்தல்.
படித்தல்
* ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
மனவரைபடம்
தொகுத்தல்
துணைப்படை திட்டம் வெல்லெஸ்லி பிரபு ஹைதராபாத் நிஜாம்
வாரிசு இழப்புக் கொள்கை, டல்ஹொசி பிரபு, சதாவா, ஜெய்ப்பூர், சாம்புலிபூர், நாக்பூர்.
திறந்த முறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது 1853-ல் செயல்படுத்தப்பட்டது.
அதிகபட்ச வயது 23 1869ல் சுரேந்திர நாத் பானர்ஜி, ரமேஷ் சந்திரதத், பிகாரி லால் குப்தா ஆகிய மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்
காரன் வாலிஸ் 1791 -ல் முறையான காவல் துறையை உருவாக்கினார் "தரோகா"
துணைப்படைத் திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தனது படையை கலைத்து விட வேண்டும்.
டல்ஹௌசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமானவர்களில் முதன்மை சிற்பியாக செயல்பட்டார்.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
> ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்? > துணைப்படைத்திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்?
ஜான்சி ராணியின் இயற்பெயர் என்ன?
எழுதுதல் மற்றும் தொடர் பணி
ஆங்கிலேயர்களின் நிர்வாக அமைப்பினை அட்டவணைப்படுத்தி வரச் செய்தல்..
நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடைகளை வீட்டில் எழுதி வரச் செய்தல், பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்த்தல்
குறைதீர் கற்றல்
புரியாத பகுதிகளுக்கும், மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
0 Comments