அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7 Social History Unit-2 Part-2 Notes of Lesson

7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டக் கையேடு

பகுதி : வரலாறு  

அலகு 2.2 : வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை

கற்கும் முறை : குழுக் கற்றல்


அலகின் ஒருங்கமைப்பு : 

  • இஸ்லாமின் தோற்றம்
  • கஜினி மாமூது ii) முகமது கோரி
  • தரெய்ன் போர்.

கற்றல் திறன்கள்

வாசித்தல், விவாதித்தல், வரைதல், உரைத்தல், நடித்தல், எழுதுதல்.

ஆயத்தப்படுத்துதல்

இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? > இந்தியாவில் நடைபெற்ற அயல் நாட்டு படையெடுப்புகள் யாவை?
போன்ற கேள்விகளைக் கேட்டல்,

கோரி, கஜினி போன்ற இடங்களை வரைபடத்தில் கட்டிக் காட்டச் சொல்லுதல்

வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்

- பாடப்பகுதியை நன்கு வாசிக்கச் சொல்லுதல், பின்னர் முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல், பின்னர் மாணவர்களை குழுவாக அமர்ந்து விவரித்து அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டல்.

மனவரைபடம் :



தொகுத்தல் மற்றும் வழங்குதல் :

  •  ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்று அழைக்கப்பட்டது.

கஜினி மாமூது"

  • இவர் துறையாடலை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகளை பதினேழு முறை இந்தியாவின் மீது நிகழ்த்தி உள்ளார். 1001 ஆம் ஆண்டு ஷாகி அரசர் ஜெயபாலரை தோற்கடித்தார். 
  • 1008ஆம் ஆண்டு ஆனந்த பாலரைத் தோற்கடித்தார். 1011ல் நாகர் கோட், தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால் சூறையாடப்பட்டது. 
  • 1018 ஆம் ஆண்டு மாமூது புனித நகரான மதுராவை கொள்ளையடித்தார்.
  •  மாமூது புகழ்பெற்ற சோமநாதபுரம் ஆலயத்தைத் தாக்கி ஏராளமான செல்வங்களைக் கொள்ளையடித்தார்.

முகமது கோரி

  • கோரி பகுதியை ஆண்ட முகமது, கஜினி மாமூது இறப்பிற்குப் பின்னர் தன்னை சுதந்திர அரசாக அறிவித்தார். 
  • கஜினியை வலுப்படுத்திய பின்னர் மூல்தானை கைப்பற்றி, பின்னர் பஞ்சாபையும் கைப்பற்றி தனது பேரரசை விரிவு செய்தார்.

முதல் தரெய்ன் போர்: (வி.பி.1191)

  • முகமது கோரியின் மேலாதிக்கத்தை ஏற்க விரும்பாத பிருதிவிராஜ் சௌகான் மற்றும் இந்து அரசர்கள் ஒன்றாக திரண்டு தரெய்ன் என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியை தோற்கடித்தனர்.

இரண்டாம் தரெய்ன் போர் (கி.பி.1192)

  • முதல் தரெய்ன் போரில் தோல்வியடைந்த முகமது கோரி பெரும் படையுடன் மீண்டும் பிருதிவிராஜ் சௌகானுடன் போரிட்டார். 
  • இப்போரில் சௌகான் தோற்கடிக்கப் பட்டு கொல்லப்பட்டார்.

வலுவூட்டல்

Q.R. Code மூலம் கற்பித்தல். வினாடி வினா நடத்துதல்.

மனவரைபடத்தை மீண்டும் வரைந்து நடத்துதல்.

விரைவு குறியீடு மூலம் காணொளி காட்சிகளை ஒளிபரப்புதல்.

மதிப்பீடு

முதல் தரெய்ன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

கஜினி மாழுது படையெடுப்புகளைப் பற்றி கூறுக..

குறைதீர் கற்றல் <

சுற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கடினப் பகுதிகளுக்கும்

ஆசிரியர் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்.

எழுதுதல்

பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதிவரச் சொல்லுதல்,

தொடர்பணி <

- பாடத்தில் வரும் முக்கிய இடங்களை வரைபடத்தில் சொல்லுதல்,

4


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts