அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social History Unit-2 Part-1 Notes of lesson

பகுதி : வரலாறு



அலகு 2.1 : வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை

 கற்கும் முறை : குழுக் கற்றல்

அலகின் ஒருங்கமைப்பு :

i) ராஜபுத்திரர்களின் தோற்றம்

(ii) பிரதிகாரர்கள்

iii) பாலர்கள்

iv) சௌகான்கள்


கற்றல் திறன்கள்

வாசித்தல், வரைதல், தொகுத்தல், வழங்குதல், எழுதுதல்.

பாட அறிமுகம்

- வட இந்திய நகரங்கள் பற்றி சிறு கலந்துரையாடல் நடத்துதல்,

வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்

- பாடப்பகுதியை நன்கு வாசிக்கச் சொல்லுதல். முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல்,
 அவ்வார்த்தைகளை குறிப்பேடுகளில் எழுதச் சொல்லி குழுவாக அமர்ந்து ஆசிரியர் வழி காட்டும்போது விவாதித்து அறிந்து கொள்ளல்.

மனவரைபடம்




தொகுத்தல் மற்றும் வழங்குதல்

இராசபுத்திரர்களின் தோற்றம்

சூரிய குலம், சந்திர குலம், அக்னி குலம் போன்றவற்றின் வழித்தோன்றல்கள் என கருதப்படுகின்றனர்.

பிரதிகார்கள்:

ஆர்ஜராட்டிராவிலிருந்து ஆட்சி புரிந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ரிச்சந்திரா என்பவர் கூர்ஜரவம்சத்தைத் தொடங்கினார். இவர்களில் முதல் எற்றும் முக்கிய அரசர் முதலாம் நாகபட்டர்.

வாளிகள் தர்மபாலர்:

கோபாலரின் மகன் தருமபாலர். பால அரசை வட இந்திய அரசியல் ஒரு வலியைமிக்க அரசாக உருவாக்கினார். சிறந்த பௌத்த ஆனவாளராக விளங்கினார். இவர் உருவாக்கிய விக்ரமசீலா மடாலயம் போளத்தக் கல்விக்கான மிகச்சிறந்த மையமாகும்.

மகிபாலர்:

பால வம்சத்தின் மிகச் சிறந்த வலிமைமிக்க அரசர் ஆவார். வாரணாசி. அர்நாத், நாளந்தா ஆகிய இடங்களில் சமயம் சார்ந்த ஏராளமான கட்டிடங்களைக் கட்டினார்."

சௌகான்கள்:

(பொ.ஆ) பின் 956-1192 வரை சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சி புரிந்து வந்தனர். இவ்வம்ச கடைசி அரசர் பிருதிவிராஜ் சௌகான் 1191 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியை தோற்கடித்தார். 1192 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இராஜபுத்திரர்களின் பங்களிப்பு:

ராஜஸ்தானி பாணியிலான ஓவியங்கள் பிக்கனேர், ஜோத்பூர், மேவார், ஜெய்சால்மர், புரி போன்ற இடங்களில் காணப் படுகின்றன.

மான்சிங் அரண்மனை. ஆம்பூர் கோட்டை, உதயப்பூர் அரண்மனை, கஜூராகோ கோயில்கள், கோனார்க் சூரியக் கோவில், அபு மலையில் உள்ள தில்வாரா, சமண, காந்தர்யா கோவில்கள் இராசபுத்திரர்களின் பங்களிப்புக்கு சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும்.

பாலர்களின் பண்பாட்டு பங்களிப்பு:

பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் நாளந்த விக்ரமசீலா போன்ற பல்கலைக் கழகங்களை நிறுவியவர்கள், இவர்களின் கலையார்வத்தால், புதிய கிழக்கிந்திய கலை பாணி உருவாகியது.



வலுவூட்டல்

Q.R Code மூலம் கற்பித்தல். குழுச் செயல்பாடுகள் அளித்தல்.

மதிப்பீடு

விக்ரமசீல பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்? கனோஜ்பகுதியின் மும்முனை போராட்டம் குறித்து கூறுக. பாலர்களின் பண்பாட்டு பங்களிப்பு பற்றி கூறுக.

குறைதீர் கற்றல் <

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல். குழுச் செயல்பாடு கொடுத்தல்.

எழுதுதல் 

பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதிவரச்

தொடர்பணி

பாடத் தொடர்புடைய மேலும் பல தகவல்களை இணையம், நூலகம் போன்றவற்றின் மூலம் அறிந்து வரச் சொல்லுதல்.


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts