அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 Civics Unit-2 Notes of Lesson

குடிமையியல் - பாடத்திட்டக் கையேடு

வகுப்பு - 7

அலகு 2 : அரசியல் கட்சிகள்

ஒருங்கமைப்பு : முழு பாடம்

கற்பித்தல் கருவிகள் :

பாடபுத்தகம், கரும்பலகை, படித்தல் எழுதுதல், உற்று நோக்குதல், மனவரைபடம் வரைதல்.

கற்றல் திறன்கள்

படித்தல், எழுதுதல், உற்று நோக்கல் புரிந்து கொள்ளுதல்.

பாட அறிமுகம்

> ஆரம்பக்காலங்களில் பேரரசர்களும் சிற்றரசர்களும் ஆட்சி செய்தனர், அரசர் சட்டம் இயற்றல், நிர்வாகம் நீதி வழங்குதல் இவற்றின் தலைமை இடமாக இருந்தார். தற்பொழுது இவற்றை செய்வது யார் ? எனக் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

கற்றல் நோக்கங்கள்

> 'அரசியல் கட்சி' என்பதை வரையறை செய்தல் அரசியல்கட்சி முக்கியத்துவம் அறிதல், அரசியல் கட்சியின் பங்கு மற்றும் செயல்பாட்டினை தெரிந்து கொள்ளல்.

மனவரைபடம்




தொகுத்தல்

ஒத்த கருத்துடைய அமைப்பால் செயல்படுவது அரசியல் கட்சியாகும். இவை தலைவர், செயல் உறுப்பினர்கள், தொண்டர்கள் கொண்டது.

> கட்சி முறைகளின் வகைகள் : ஒரு கட்சிமுறை, இருகட்சிமுறை, பலகட்சிமுறை.

தேசியக்கட்சி என்பது மக்களவை தேர்தலில் நான்கு (அ) ஐந்து மாநிலங்களில் 6% வாக்குகள் பெறும் கட்சியாகும்.

> சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநிலங்களில் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.


வலுவூட்டல்

>ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல், வழங்குதல் வேண்டும்.

மதிப்பீடு

1. வளரறி மதிப்பீடு (அ) : இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயர்களைக் கேட்டு அதன் கொடிகளை உரைய செய்தல். 2. வளரறி மதிப்பீடு (ஆ) : பாடத்தில் ஒரு சிறு தேர்வு வைத்தல்.

படித்தல்

வினா-விடைகளை வீட்டில் எழுதிவரச் செய்து சரிபார்த்தல்.

குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.

தொடர்பணி

 எதிர்க்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்தில் இருப்பார்? என குழு விவாதம் நடத்துதல்





Reactions

Post a Comment

0 Comments

Recent Posts