அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 History Unit-3 Part-2 Notes of Lesson

வரலாறு - பாடத்திட்டக் கையேடு

வகுப்பு -7

அலகு 3.2 தென் இந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை

அலகின் ஒருங்கமைப்பு

: i) பாண்டிய அரசு மீண்டெழுதல்

ii) பிற்கால பாண்டியர்களின் எழுச்சி iii) சடையவர்மன் சுந்தரபாண்டியன்

iv) ஆட்சியமைப்பும் சமூகமும்

அரசு அதிகாரிகள்

vi) நிர்வாகப் பிரிவுகள்

vii) கிராம நிர்வாகம்

viii) நீர்ப்பாசனம்

ix) மதம்

X) கோவில்கள்

xi) வணிகம்

கற்றல் திறன்கள்

வாசித்தல் மற்றும் அடிக்கோடிடுதல் வரைதல், விளக்குதல், விவாதித்தல், எழுதுதல்.

ஆயத்தப்படுத்துதல்

பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதி எது ?

சோழர்களின் கட்டிடக் கலை பற்றி கூறுக

> மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில்களின் பெயர் என்ன? போன்ற கேள்விகளைக் கேட்டு ஆயத்தப்படுத்துக.

வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்

வாசிக்க வேண்டிய பாடப்பகுதியை மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல். முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல். பின்னர் அவ்வார்த்தைகளை குழுவாக அமர்ந்து விவாதித்து அறிந்து கொள்ளல் ஆசிரியர் வழிகாட்டல். 

மனவரைபடம்





தொகுத்தல்

ஆட்சி அமைப்பும் சமூகமும்:

பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாகக் கூடல் கோன் கூடல் காவலன் என் மதிக்கப்பட்டனர். அரசர்கள் மனுசாஸ்திரத்தின்படி ஆட்சி செய்தனர். நிலத்தின் உண்மையான உடைமையாளர்களின் பூமி புத்திரர் அல்லது வேளாளர் என அழைக்கப்பட்டனர்.

அரசு அதிகாரிகள்:

பிரதம மந்திரி உத்திர மந்திரி என அழைக்கப்பட்டார். முக்கிய அமைச்சர்கள் மாணிக்க வாசகர், குலச்சிறையார், மாரன்கரி, அரசுச் செயலகம் எழுத்து மண்டபம் என அழைக்கப்பட்டது.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

பாண்டியநாடு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது மண்டலங்கள் வளநாடு என அழைக்கப்பட்டன. வளநாடு பல நாடுகளாகவும், கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன நாடுகளை நிர்வகிப்போர் நாட்டார் என அழைக்கப்பட்டனர் நாடுகளும், கூற்றங்களும் மங்கலம், நகரம், ஊர், குடி, எனும் குடியிருப்புகளைக் கொண்டிருந்தன.

கிராம நிர்வாகம் :

மானூர் கல்வெட்டு கிராம நிர்வாகம் பற்றிய தகவல்களை சொல்லுகின்றன.

வலுவூட்டல்

QR Code மூலம் கற்பித்தல்.

குழு செயல்பாடுகள் அளித்தல். சார்ட் பயன்படுத்தி கற்பித்தல்.

மதிப்பீடு

- பாண்டியர்களின் மதக் கொள்கை பற்றி கூறுக ?

- பாண்டியர்களின் வணிகத் துறைமுகம் பற்றி கூறுக. நீர்ப்பாசனங்களுக்கு பாண்டியர்கள் ஆற்றிய சேவை பற்றி கூறுக.

குறைதீர் கற்றல்

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கும், சில கடினப் பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்,

எழுதுதல்

மதிப்பீட்டில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதிவரச் சொல்லுதல்.

தொடர்பணி

> பாடத்தோடு தொடர்புடைய படங்களை சேகரித்து ஒட்டி ஆல்பம் தயாரிக்கச் சொல்லுதல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts