அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Civics Unit-2 Notes of Lesson

வகுப்பு: 9 சமூக அறிவியல்

பகுதி - குடிமையியல்

அலகு 2 : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

உட்பாடத் தலைப்புகள்

>இந்தியாவில் தேர்தல் முறை - வகைகள் அரசியல் கட்சிகள் - வகைகள்

> அழுத்தக் குழுக்கள் - இந்திய அழுத்தக் குழுக்கள் மக்கள் குழுவும் பங்கேற்பும்

கற்றல் விளைவுகள்

> SST 936 - தேர்தல் தொகுதிகளில் புவியியல் கூறுகளின் முக்கியத்துவத்தை ஆராய்தல். 

- SST 1008 - முக்கிய சொற்களான கூட்டாட்சி, பன்முகத்தன்மை, மதம் மற்றும் அரசியல் கட்சி போன்றவற்றை வரையறுத்தல்.

- SST 1017 - இந்தியாவிலுள்ள தேசிய மற்றும் மாநில அரசியல்

கட்சிகளை வகைப்படுத்துதல். SST 1027 இந்திய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசியல் -கட்சிகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விளக்குதல்.

SST 1030 பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வெற்றி, தோல்விகள் பற்றி விளக்குதல்.

SST 1044 - வாக்களிக்கும் நடத்தை, இனம், மதம், மக்களாட்சி, அரசியல் கட்சிகள், ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் குழுக்கள் பற்றிய அனுமானங்கள் மற்றும் கொண்ட பாரபட்சத்தைக் கண்டறிதல்.

கற்றல் திறன்கள்

தேர்தல் தொகுதிகளில் புவியியல் கூறுகளின் முக்கியத்துவத்தை கலந்துரையாடுதல்.

அரசியல் கட்சிகள் என்ற சொல்லை வரையறுத்தல். இந்திய மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்குதல்.


> இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் திட்டங்களை விளக்குதல். பொதுத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்வி பற்றி விளக்குதல்.

> தன் சொந்தப் பகுதியில் உள்ள வாக்களிக்கும் நடத்தை, இனம், மதம், மக்களாட்சி, அரசியல் கட்சிகள், ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழுக்கள் பற்றிய அனுமானங்கள் மற்றும் பாரபட்சத்தைக் கண்டறிந்து பகுத்தாய்தல்.

நுண் திறன்கள்

புதிய தொகுதிகள் உருவாக்கத்தின் போது அரசு கருத்தில் கொள்ள வேண்டியவற்றை பட்டியலிடுதல்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விவரித்தல். தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் அங்கீகாரம் அதன் செயல்பாடுகளைக் கலந்துரையாடுதல்.

ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் எதிர்கட்சியின் பங்கை விமர்சித்தல்.

மாதிரி வாக்குப்பதிவு நடத்தி வெற்றி தோல்விகளை அறிவித்து தலைவரை தேர்ந்தெடுத்தல்.

கற்பித்தல் உபகரணங்கள்.

பாட் சம்பந்தப்பட்ட Slide Show, Kalvi TV, QR Code Videos, Extra Videos,

பற்றிய நாளிதழ் செய்திகள் - தேர்தல் ஆணையம் பற்றிய செய்திகள் படங்கள்

ஆயத்தப்படுத்துதல்...

மாணவர்களே சென்ற பாடத்தில் அரசாங்க அமைப்புகள் மக்களாட்சி பற்றி பார்த்தோம்.

இப்பொழுது அந்த அரசாங்க அமைப்பை ஏற்படுத்தும், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல்களை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பற்றி நாம் இப்பாடத்தில் பார்க்கலாம் என ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

நம் இந்தியாவில் உள்ள தேர்தல் முறைகள் - அரசியல் கட்சிகள். அவர்தம் பங்களிப்பு - அரசியல் கட்சிகளின் வகைகள் - புதிதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் சேர்க்கப்பட்ட NOTA - புதிதாக மக்களின் குரலாக ஒலிக்கும் அரசியல் பின்புலம் சாராத தனிமனித அழுத்தக் குழுக்கள் போன்றவைகளே இங்கு பாடக்கருத்துக்களாக வந்து உள்ளது.




கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

மக்களாட்சியின் சிறப்பை வெளிப்படுத்துவதே தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளுமே என்ற வகையில் அதன் செயல்பாடுகளை விளக்குதல்.

அழுத்தக் குழுக்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்துதல். (நாளிதழ் செய்திகள், ஊடகங்கள் செய்திகள்).

மாணவர் செயல்பாடு:

> மாணவர்கள் மூலம் மாதிரி தேர்தல் குழுவாக பிரித்து நடத்துதல். தாங்கள் பார்த்த தேர்தல் பற்றி உமக்கு தெரிந்தவற்றை எழுதி வருதல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

மனவரைபடம் கொண்டும் Powerpoint slide show கொண்டும் பாடத்தின் கருத்தை வலுவூட்ட வேண்டும்.

மேலும் தேர்தல் காலங்களில் நேரில் நடைபெறும் செய்திகளோடு தொடர்புபடுத்தி விளக்குதல்.

மதிப்பீடு

LOT சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர்
 2.இந்தியாவில்______ ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது


[MOT கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஒரு கட்சி ஆட்சிமுறை - நாட்டில் நடைபெறுகிறது.

விடை: கியூபா

2. மாநிலக் கட்சிகளைப் பொதுவாகப் ____________என்று அழைப்பர். 
விடை: பிராந்தியக் கட்சிகள்

HOT

1. நீ ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதனைப் பதிவு செய்ய எதனை அணுகுவாய்?


2. அரசின் உறுப்புகளில் மூன்றாவதாக வருவது எது?


மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள்

> இந்தியாவில் உள்ள தேர்தல் முறைகளை ஆராய்ந்து அறியும் திறனைப் பெறுதல்.

பல்வேறு வகையான தேர்தல்களைப் பற்றி அறிந்து கொள்ளல். அரசியல் கட்சிகளின் பொருள், தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகளின் வேறுபாடுகளை அறிந்து கொள்ளல்.

இந்தியாவில் செயல்படும் அழுத்தக் குழுக்களைப் பற்றி அறிந்து கொள்ளல்.

குறைதீர் கற்றல்...

இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், அழுத்தக் குழுக்கள் போன்றவற்றின் செயல்பாடுகளை மாணவர்களுக்கு வீடியோ மூலம் காண்பித்து கற்பித்தல்.

தொடர்பணி.

வயது வந்தோர் வாக்குரிமை பற்றி ஒரு ஒப்படைப்பு செய்க. தேசிய கட்சிகள் - மாநிலக் கட்சிகள் ஒப்பிட்டு ஒரு ஒப்படைப்பு செய்க.

பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts