அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Economics Unit-1 Notes of Lesson

வகுப்பு: 9 சமூக அறிவியல்

பாடம் 1- பொருளியல்

மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு,

அளவீடு மற்றும் நிலைத் தன்மை

உட்பாடத் தலைப்புகள்

மேம்பாடு பற்றிய பல்வேறு தொலைநோக்கு கருத்துக்கள் பொருளாதார மேம்பாட்டிற்கான குறியீடுகள்

நிலையான மேம்பாடு நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகள்

இந்தியாவில் சுற்றுச்சூழல் கொள்கைகள்

கற்றல் விளைவுகள்

SST 904 - ஆண்டு வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுதல்.

SST 950 - வரலாற்று நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்களில் வளங்களின் பொருத்தப்பாட்டை தீர்மானித்தல்.

SST 1028 - நிலையான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எந்தவொரு பகுதியிலும் உள்ள மக்களின் வாழ்வில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் தாக்கத்தை மதிப்பிடுதல்.

SST 1048 - ஒரு பகுதியின் கலாச்சார பன்முகத்தன்மையின் மீதான இயற்கை வளங்களின் தாக்கம், வரலாற்று நிகழ்வுகள், ஆளுமைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகமயமாதல் கருத்துகளின் வரையறைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி விவாதித்தல்.

கற்றல் திறன்கள்

இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுதல்.

மனிதன் ஓர் வளம் என்பதை விளக்குதல். 

இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பற்றி விவரித்தல்.

நுண் திறன்கள்

ஆண்டு வளர்ச்சி விகிதத்தை அறிமுகம் செய்தல்.த

தனிநபர்வருமானம் (PI) பற்றி விளக்குதல்.

புதுப்பிக்கக்கூடிய மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்களினால் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள கலாச்சார பன்முகத்தன்மையின் தாக்கம் பற்றி தன் கருத்துக்கூறுதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

பாட சம்பந்தப்பட்ட Slide Show, Kalvi TV, QR Code Videos, Extra Videos

புதுப்பிக்கப்பட்ட வளங்கள், புதுப்பிக்க இயலாத வளங்கள் மற்றும் மரபு சாரா வளங்களின் படங்கள்.

ஆயத்தப்படுத்துதல்

மாணவர்களே நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள்?

- உங்கள் வாழ்க்கைத்தரம் (அதாவது உன் வீடு) எவ்வாறு இருக்கின்றது? என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் மேம்பாடு இருக்கும் என்று கூறி பாடத்தை ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

நிலையான மேம்பாடு என்பது அடுத்தவனைக் கெடுத்து விட்டு நாம் முன்னேறுவது அல்ல.

இதன் பொருள் ஒரு நாடு மேம்பாடு அடையும் போது இயற்கை வளங்களை அளவாக பயன்படுத்துதல் சுற்றுச்சூழல்களை - மாசுபடுத்தாமல் கேடு விளைவிக்காமல் மேம்பாடு அடைவதே இப்பாடத்தின் மையக்கருத்து என அறிமுகம் செய்தல்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

மரபு சாரா வளங்களைப் பயன்படுத்துதல் பற்றி விளக்குதல். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தனிநபர் வருமானம் உயர்வு ஏன்? வளரும் நாடுகள் ஏன் பின்தங்கி உள்ளன? மேம்பாடு இலக்கில் உள்ள தடைகள் போன்றவற்றை விளக்குதல்.

கருத்து வரைபடம்



மாணவர் செயல்பாடு:

வன விலங்குகள் சட்டங்களை மதிக்க கற்றுக் கொள்ளுதல். 

 சுற்றுச்சூழல் சட்டங்களை மதிக்க கற்றுக் கொள்ளுதல்.ம

மரபுசாராவளங்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் வளர வேண்டும் நாடும் வளர வேண்டும் - அதற்கான வழிமுறைகள் - அனைத்தும் நம்மிடமே உள்ளது என மாணவர்களை உற்சாகப்படுத்துதல்."

மதிப்பீடு

LOT சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புதுப்பிக்கத்தக்க வளங்களுக்குச் சிறந்த உதாரணம்?

2. அனல் மின் நிலையத்தினால் அதிக அளவில் வெளியேற்றப்படும் வாயு?

[MOT கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நிகர நாட்டு உற்பத்தி _______ ன் உண்மையான அளவாகக் கருதப்படுகிறது

2. கல்வியறிவு வீதத்தில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு __________ இடத்தைப் பெற்றுள்ளது

HOT

1. கீழ்க்கண்டவற்றுள் எது மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் உள்ளது?

குறைதீர் கற்றல்

இன்றைய உலகில் மரபு சாரா வளங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

தொடர் பணி

உனது பகுதியில் உள்ள நீங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை விவரி.

> பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரக் செய்தல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts