அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social Geography Unit-2 Notes of Lesson

வகுப்பு: 9

பாடம் : சமூக அறிவியல்

பகுதி : புவியியல்

பாடம் - 2 நிலக்கோளம் - ii[ புவி புறச்செயல்பாடுகள்

உட்பாடத் தலைப்புகள்

வானிலைச் சிதைவு

இயற்சிதைவு, வேதியியல் சிதைவு, உயிரினச் சிதைவு நிலமட்டம் சமமாக்கல்

. ஆறுகள், பனியாறுகள், காற்றுகள் மூலம் அரித்தல், கடத்துதல், சமமாக்கல்,

கற்றல் விளைவுகள்

SST 918 - ஆற்றின் போக்கு, காலநிலை, மக்கள் தொகை பரவல், ஒரு பிரதேசத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதிக்கும் காரணிகளை விளக்குதல்.

கற்றல் திறன்கள்

ஆற்றின் மூன்று நிலைகள் அறிதல்.

ஆற்றின் அரித்தல், கடத்துதல், படியவைத்தல், நிலத்தோற்றங்களை அடையாளம் காணுதல்.

நிலத்தடி நீர் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள், பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்களை ஆராய்தல்.

வானிலை - காலநிலை கூறுகளைப் பற்றி விவாதித்தல்.

நுண் திறன்கள்

வகைப்படுத்துதல்.

ஆற்றின் தோற்றம் பற்றிய தகவல்களைப் பட்டியலிடுதல்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் ஆற்றின் வெவ்வேறு அரித்தல் நிலத்தோற்றங்களை அடையாளம் காணுதல்.

ஆற்றின் போக்கை பாதிக்கும் காரணிகளை
அடையாளம் காணுதல்.


கற்பித்தல் உபகரணங்கள்

> பாட PPT Slide Show, QR Code Videos, Kalvi TV மற்றும்

பாட விளக்க charts,

பாட சம்பந்தப்பட்ட extra வீடியோக்கள் புவிபுறச் செயல்பாடுகள் விளக்கப்படங்கள் மற்றும் உலக வரைபடங்கள்.

ஆயத்தப்படுத்துதல்

சென்ற பாடத்தில் பாறைக்கோளம் - 1 புவி அகச்செயல்முறைகள் பாடம் பூமியின் உட்புறச் செயல்கள் கொண்டது (அதாவது கண்ணுக்கு புலப்படாத செயல்கள்) (below level).

இப்பாடத்தில் நிலக்கோளம் புவி புறச்செயல்பாடுகள். நாம் அனுதினமும் காணக்கூடிய செயல்கள், பல்வேறு நிலத்தோற்றங்கள் தலைப்பு வாரியாக அமைந்துள்ளது எனக் கூறி ஆர்வமூட்டுதல் (eye level).

பாட அறிமுகம்

> இப்பாடத்தைப் பற்றிய முன்னறிவை 7 ஆம் வகுப்பில் படித்து இருப்பீர்கள்.

இங்கு புவி புறச்செயல்பாடுகளை வானிலைச் சிதைவு நிலமட்டம் சமமாக்கல் பனியாறு நிலத்தோற்றங்கள் - - ஆறுகள் நிலத்தோற்றங்கள் காற்றின் நிலத்தோற்றங்கள் பூமியின் மேல் நடக்கும் அனைத்து புறச்செயல்பாடுகளைப் பார்க்கலாம்.




கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

வானிலைச் சிதைவு, ஆற்றின் மூன்று நிலைகளை மன வரைபடம் மூலம் விளக்கிக் காட்டுதல்.

நாளிதழ்கள் - தொலைக்காட்சிகளில் வரும் வானிலைச் செயல்பாடுகளை மேற்கோள் காட்டியும் வெளிப்படுத்துதல்.

மாணவர் செயல்பாடு:

ஆறுகளின் நிலைகளை படம் வரைந்து விளக்கி ஒப்படைத்தல். 'வடிவ பள்ளத்தாக்கு படம் வரைந்து ஒப்படைத்தல். V

ஆற்றின் நிலைகளை மாணவர்கள் கதைவடிவில் கூறுதல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

- உலகில் 90% நீர் அண்டார்டிகாவில் நன்னீர் பெட்டகமாக உள்ளது.

- உலகின் 85% மக்கள் புவியின் பாதிக்கு மேற்பட்ட மிக வறட்சியான பகுதிகளில் வசிக்கின்றனர் என்பதையும் நீர் எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் அறிந்து அதனை மாசுபாட்டிலிருந்து காக்க வேண்டும் என்று வலுவூட்டல் வேண்டும்.

மதிப்பீடு

LOT

வினாக்களுக்கு விடையளி.

1. சிதைலடைந்த நுண்ணிய பாறைத்துகள்கள் மற்றும் உயிரினங்களின் கலவை எது?

விடை: மண்

2. உலகில் கனமான காற்றடி வண்டல் பீடபூமி எங்கு உள்ளது?

விடை: சீனா

MOT

1. கீழக்கண்டவற்றுள் சரியான இணை யாது? அ) காற்று அரித்தல் - வெள்ளம் ஆ) காற்று

இ) காற்று அரித்தல் - காளான் பாறை ஈ) காற்று அரித்தல் - குகைகள்

விடை: இ

HOT

1. கீழ்க்கண்டவற்றுள் எது பூமியின் மையப்பகுதி? அ) வெளிக்கருவம் ஆ) கீழ்கவசம்

இ) மேல்கவசம் ஈ) உட்கருவம்

விடை: ஈ

2. கூற்று: சுண்ணாம்பு பாறைப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.

காரணம்: நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது. அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று தவறு காரணம் சரி.

இ) கூற்று மற்றும் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணம் சரி

விடை: ஈ

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள் 

புவியின் பல்வேறு வெளிப்புற செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.

வானிலைச் சிதைவுகளையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் தெரிந்து கொள்ளுதல்.

ஆறுகளின் நிலைகள் மற்றும் அது ஏற்படுத்தும் நிலத்தோற்றங்களையும் தெரிந்து கொள்ளுதல்.

குறைதீர் கற்றல்

உலக வரைபடம் கொண்டு பாடம் நடத்தும்போதே பாடங்களில் வரும் பெருங்கடல்கள் பகுதி, நன்னீர், உவர்நீர், கடலடித் தோற்றங்கள், கடல்வளங்கள் போன்றவற்றைக் காண்பித்து கற்பித்தலை முழுமைப்படுத்துதல்.

தொடர்பணி

மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது - ஒரு ஒப்படைப்பு செய்க. 

பனி வயலின் எல்லைக்கோடு - ஒரு ஒப்படைப்பு செய்க. பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts