அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

9th Social History Unit-2 Notes of Lesson

வகுப்பு -9 

பகுதி -வரலாறு

பாடம் 2 : பண்டைய நாகரிகங்கள்

மாதம்: ஜூலை

உட்பாடத் தலைப்புகள்

  • பண்டைய நாகரிகங்கள்
  • எகிப்திய நாகரிகம்
  • மெசபடோமிய நாகரிகம்
  • சீன நாகரிகம்

கற்றல் விளைவுகள்

> SST 909 - ஒரு சில சமூகக் குழுக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை விவரித்தல்.

> SST 947 - காலத்தை தாண்டி வளர்ந்து கொண்டிருக்கும் வரலாற்றாளர்களின் வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தரவுகள் பற்றி விளக்குதல்.


கற்றல் திறன்கள்

நாகரிகம் என்பது ஒரு முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை என்பதை அடையாளம் காணுதல்.

அந்த வாழ்க்கை முறையை சுமார் 2000 வருடங்களுக்கு முன்பே பிரமிக்கும் வகையில் இருக்கும் நாகரிகங்களை அதன் சிறப்புகள் வெளிப்படுத்துதல்.

நுண் திறன்கள்

ஆற்றங்கரையோரமே நாகரிகத் தொட்டில்கள் வளர்ச்சி என்ற வகையில் விளக்குதல்,

நாகரிகங்கள் இந்த உலகிற்கு அளித்த அழியாப்புகழ் நன்கொடைகளை விளக்குதல்.

மனிதன் ஒரு வளம் என்பதை பண்டைய நாகரிகங்களின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு விளக்குதல்.

முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட நாகரிகங்களை அறிந்து கொள்ளுதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

உலக வரைபடம் மற்றும் பாட விளக்க charts,

எகிப்து - மெசபடோமியா - சிந்து - சீன நாகரிகங்கள் பலவண்ண புகைப்படத் தொகுப்பு,

> PPT and OR Code vidcos பாட சம்பந்தப்பட்ட Extra Youtube videos.

ஆயத்தப்படுத்துதல்

உலகின் மற்ற பகுதிகளில் வாழ்ந்தோர் வேட்டையாடுபவர் உணவு சேகரிப்பவர் மேய்ச்சல்காரர்களாக வாழ்ந்து வந்த காலத்தில் ஒரு ஹைடெக் உலகைப் போன்று நாகரிக வாழ்க்கை வாழ்ந்த உலகின் பண்டைய நாகரிகங்களை நாம் இந்த பாடத்தில் பார்க்கலாம் என ஆர்வமூட்டுதல்.

பாட அறிமுகம்

இந்த உலகில் இடைக்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் உந்துதலாக இருந்த எகிப்திய மெசபடோமிய, சிந்துவெளி - சீன நாகரிகங்கள் மிகப்பெரிய கட்டிடங்களை எழுப்பி, எழுத்துக் கலையை உருவாக்கி, அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு வாழ்ந்தனர் என்று அறிமுகம் செய்தல்.





கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் கற்றல் மாதிரிகள் கொண்ட பண்டைய நாகரிகத்தின் பங்களிப்பை தகுந்த ஆதாரங்கள் கொண்டு விளக்குதல்.

உலக வரைபடம் கொண்டு பண்டைய நாகரிகங்கள், இடங்கள் மற்றும் அவை இருக்கும் ஆறுகள் தற்போது அவை எந்த நாட்டு பிரதேசங்கள் என குறித்து விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

உலக வரைபடத்தில் நாகரிகம் பரவிய இடங்களைக் குறித்தல்.

பிரமிடுகள் செய்தல் & அவர்களது எழுத்துமுறை விளக்கப்படம்

தயாரித்தல். நாகரிகங்கள் தொடர்பான படங்கள் தயாரித்து ஆல்பம் உருவாக்குதல்.

களிமண் - white cement - M.seal கொண்டு நாகரிக தடயங்களை மாதிரிகளாக உருவாக்குதல்.

வலுவூட்டல் செயல்பாடுகள்

பண்டைய நான்கு நாகரிகங்களின் வாழ்க்கை முறையை extra videos உலக வரைபடம் கொண்டு அதன் ஆறுகளையும் விளக்கி பாடக்கருத்தை எளிமையாக்கி விளக்குதல்.

மதிப்பீடு

LOT  1. உலகின் முதல் இராணுவ அரசின் பெயர்

2. சீனாவின் துயரம் 

IMOT கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. எகிப்தியர் இறப்பின் கடவுள் ________ எனப்பட்டது.

2. தான் மண்பாண்டம் செய்யும் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தார்கள்.


HOT சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1. அ) சீனர்களின் எழுத்துமுறை கியூனிபார்ம் ஆகும். 

ஆ) சீனாவில் துயரம் நைல் நதி ஆகும்.

இ) எகிப்திய அரசர் பரோ என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.

 ஈ) ஹமுராபியின் சட்டத்தொகுப்பு எகிப்தியர்களின் சாதனை.


2. 'உழும் விவசாயினுடைய ஓவியம்' - இந்த வார்த்தை பொருள் தரும் நாகரிகம்

மாணவர்கள் அறிந்த கற்றல் விளைவுகள்

பண்டைய நாகரிகங்களின் இடங்கள், ஆறுகள் வளர்ச்சி குறித்து புரிந்து கொள்ளுதல்.

சிந்துவெளி நாகரிகம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளுதல்.

குறைதீர் கற்றல்

நான்கு நாகரிகங்களின் சிறப்பியல்புகளை அறியச் செய்யும்

வகையில் அனைத்து கற்றல் மாதிரிகளான படங்கள் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்தி கற்பித்தல்.

தொடர் பணி

பழங்கால நாகரிகங்களை ஒப்பிட்டு ஒரு துண்டு பிரசுரம் தயாரித்து வருதல்.

பண்டைய நாகரிகம் பரவிய இடங்களை உலக வரைபடத்தில் குறித்தல்.

பாடப்புத்தகத்தின் பின் வினாக்கள் விடைகளுடன் எழுதி வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts